காவிரி புஷ்கரம் திருவிழா: துலாக்கட்ட காவிரியில் குளம் அமைக்க முடிவு

காவிரி புஷ்கரம் திருவிழாவின் போது, மயிலாடுதுறை துலாக்கட்டக் காவிரிப் பகுதியில் பக்தர்கள் நீராடுவதற்கு குளம் அமைப்பது என புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

காவிரி புஷ்கரம் திருவிழாவின் போது, மயிலாடுதுறை துலாக்கட்டக் காவிரிப் பகுதியில் பக்தர்கள் நீராடுவதற்கு குளம் அமைப்பது என புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
காவிரி புஷ்கரம் திருவிழா 12 ஆண்டுகளுக்கு  ஒருமுறை குரு பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கும் பிரவேசிக்கும்போது நடத்தப்படும். அதன்படி நிகழாண்டு நடைபெறவுள்ள குரு பெயர்ச்சியானது 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா குருபெயர்ச்சியாக உள்ளது. இதன்காரணமாக மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் செப்டம்பர் 12 முதல் 24-ஆம் தேதி வரை காவிரி புஷ்கரம்  திருவிழா நடைபெறவுள்ளது.
இவ்விழா நாள்களில் காவிரியில் நீராடினால் பாவங்கள் நீங்கி, புண்ணியங்கள் கிட்டும் என்பது ஐதீகம். இதனால், சங்கராச்சாரியார்கள், ஆதீனங்கள், மடாதிபதிகள், ஜீயர்கள், துறவியர்கள் மற்றும் பக்தர்கள் உள்ளிட்டோர் துலாக்கட்ட காவிரியில் நீராடுவர். இதற்கான ஏற்பாடுகளை, காவிரி புஷ்கரம் திருவிழா-2017 விழாக் குழுவினர் மற்றும் அகில பாரத துறவியர்கள் சங்கத்தினர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இவ்விழா முன்னேற்பாடுகள்  தொடர்பாக கலந்தாய்வுக் கூட்டம்  நடைபெற்றது. நாகை மாவட்ட ஆட்சியர் சு.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விழா முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
விழா நாள்களில் காவிரியில் பக்தர்கள் நீராடுவதற்கு ஏற்ற வகையில், மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரிப் பகுதியில், ஆன்மிகப் பற்றாளர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் நிதி திரட்டி ரூ. 1.25 கோடி மதிப்பில் நவீன குளம் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர்
பி. சுபாநந்தினி, சட்டப்பேரவை உறுப்பினர் வீ. ராதாகிருஷ்ணன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் டி. பாலசுப்பிரமணியன், வட்டாட்சியர் எஸ்.காந்திமதி, காவிரி புஷ்கரம் விழா ஒருங்கிணைப்பாளர் சென்னை எஸ். மகாலெட்சுமி, அகில பாரத துறவியர் சங்கத் தலைவர் சுவாமி ரமானந்தா, காஞ்சி சங்கரா மடத்தின் பிரதிநிதி ராம்பிரசாத், காவிரி புஷ்கர விழா செயலாளர் சி. முத்துக்குமாரசாமி, துணைத் தலைவர் ஜெகவீரபாண்டியன் அதிமுக நகரச் செயலாளர் விஜிகே. செந்தில்நாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com