ஏலாக்குறிச்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை: சட்டப்பேரவை உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி

அரியலூர், ஆக. 26: அரியலூர் அருகேயுள்ள ஏலாக்குறிச்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி. திருமானூரில

அரியலூர், ஆக. 26: அரியலூர் அருகேயுள்ள ஏலாக்குறிச்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி.

திருமானூரிலிருந்து செட்டிக்குழி வழியாக கோவிலூர், காமரசவல்லி வரையிலான புதிய பேருந்து வழித்தடத்தை, புதன்கிழமை செட்டிக்குழியில் கொடியசைத்துத் தொடக்கிவைத்து அவர் மேலும் பேசியது:

அரியலூர் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பேருந்து வசதி இல்லாத சிற்றூர்களை கண்டறிந்து, கடந்த 4 ஆண்டுகளில் படிப்படியாக அந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.

செட்டிக்குழி கிராமத்துக்கு சாலை வசதி இல்லாததால், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து | 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சாலை வசதி மேம்படுத்தப்பட்டு, தற்போது பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஏலாக்குறிச்சியிலும், செந்துறை- அரியலூர் இடையே ஏதேனும் ஒரு ஊரிலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைத்துத் தருமாறு மாநில சுகாதாரத் துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு, ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்த அரசிடமிருந்து முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார் அமரமூர்த்தி.

இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவர் எம். பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.

அரசுப் போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர் ஆர். செல்வக்குமார், கிளை மேலாளர் எஸ். ராமநாதன், திருமானூர் ஒன்றியக் குழுத் தலைவர் மா. நடராஜன், ஒன்றியக் குழு துணைத் தலைவர் இரா. கென்னடி, ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர். ரங்கராஜன், குருவாடி ஊராட்சித் தலைவர் வீர. ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com