ஜூன் 28-இல் ஸ்ரீ கோதண்டராமசாமி கோயில் கும்பாபிஷேகம்

அரியலூர் ஸ்ரீ கோதண்டராமசாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 28 ஆம் தேதி நடைபெறுகிறது.
ஜூன் 28-இல் ஸ்ரீ கோதண்டராமசாமி கோயில் கும்பாபிஷேகம்

அரியலூர் ஸ்ரீ கோதண்டராமசாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 28 ஆம் தேதி நடைபெறுகிறது.
கோதண்டாராமர் கோயில் என்று சொல்லப்பட்டாலும் கருவறையில் ஸ்ரீதேவி,பூதேவி சமேத வெங்கடாஜலபதியே அருள்பாலிக்கிறார். பல்வேறு சிறப்பு மிக்க கோயிலில் கடந்த 1995 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து 22 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் ஜூன் 28 ஆம் தேதி காலை 6 முதல் 7.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதையொட்டி திங்கள்கிழமை (ஜூன் 26) காலை 9 மணிக்கு முதல் காலம் அகல்மர்சன மற்றும் சுதர்சன் ஹோமம், 10 மணிக்கு பூர்ணாஹூதி ,11.30 மணிக்கு பகவத் பிரார்த்தனை,வாஸ்து ஹோமம்,விஷேச ஆராதனம்,கோஷ்டி பிரசாதம் விநியோகம் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு இரண்டாம் காலம் நடைபெறுகிறது. தொடர்ந்து தீர்த்த சங்கரகனம்,ஆச்சார்ய,எஜமானர்,சங்கல்பம்,புண்யாகவாசனம்,அக்னி மதனம்,மேதினி பூஜை,அங்குரார்ப்பனம்,அக்னி பிரதிஷ்டை பூர்ணாஹூதி நடைபெறுகிறது.
27 ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கும் மூன்றாம் காலத்தில் கோ பூஜை, திருப்பள்ளி எழுச்சி, யாகசாலை புண்ணியாக வாசனம்,அக்னி ஆராதனம்,கும்ப ஆராதனம்,மஹாசாந்தி ஹோமம்,கஜபூஜை,யுக்த ஹோமம்,அக்னி மோசன ஹோமம்,அதிவாச ஹோமம்,சர்வதேவ அர்சனம்,பூர்ணாஹூதி,சாற்றுமறை கோஷ்டிநடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு நடைபெறும் நான்கு காலத்தில்,விமான கண்திறப்பு கோ தரிசனம்,யாகாசாலை புண்ணியாக வாசனம்,மஹாசாந்தி ஹோமம்,அஸ்வ பூஜை,பிம்ப சுத்தி,அலங்கார திருமஞ்சனம்,மஹாசாந்தி குடம் புறப்பாடு,சயனாதிவாசம்,ஹெளத்திர பிரசம்சனம்,சர்வதேவ அர்சனம்,யுக்த ஹோமம்,வசோதார ஹோமம்,பூர்ணாஹூதி,விஷேச ஆராதனம்,கோஷ்டி நடைபெறுகிறது.
28 ஆம் தேதி காலை 4 மணிக்கு தொடங்கும் ஐந்தாம் காலம் பூஜையில், கோ பூஜை, யாகசாலை புண்ணியாக வாசனம், அக்னிஆராதனம், கும்ப ஆராதனம், யுக்த ஹோமம்,பூர்ணாஹூதி,ஆராதனம்,யாத்திரதான சங்கல்பம்,6.30 மணிக்கு குடங்கள் யாகாசலையில் இருந்து புறப்படுதல், 7
மணிக்கு விமானம் மற்றும் ராஜகோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை,ஸ்ரீ நரசிம்மர் டிரஸ்ட் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com