கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த அன்புமணிக்கு அனுமதி மறுப்பு: அரூரில் போலீஸார் குவிப்பு

பசுமை வழிச் சாலைத் திட்டம் குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் அன்புமணிக்கு அனுமதி

பசுமை வழிச் சாலைத் திட்டம் குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் அன்புமணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரூர், பாப்பிரெட்டிப்பட்டிப் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் புதன்கிழமை
குவிக்கப்பட்டுள்ளனர்.
அரூர் வழியாகச் செல்லும் சென்னை முதல் சேலம் வரையிலான பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, அரசுக்குத் தெரிவிப்பதற்காக தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், பா.ம.க இளைஞரணிச் செயலருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ஆனால், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டியில் புதன்கிழமை நடைபெற இருந்த கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர்.
இதையடுத்து,  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரூர் டிஎஸ்பி ஏ.சி. செல்லப்பாண்டியன் தலைமையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் இவ்விருப் பகுதியிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், வஜ்ரா வாகனம் உள்ளிட்ட கலவரத் தடுப்பு வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com