பெரம்பலூர் மாவட்டத்தில்  ஊராட்சித் தலைவர் பதவி இன சுழற்சி முறை ஒதுக்கீடு விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சித் தலைவர் பதவிக்கான இனசுழற்சி முறை ஒதுக்கீடு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.   
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சித் தலைவர் பதவிக்கான இனசுழற்சி முறை ஒதுக்கீடு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.   
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளில் கூடலூர், இரூர், கூத்தூர், குரும்பாபாளையம், பாடாலூர், தேனூர் ஆகிய ஊராட்சித் தலைவர் பதவி எஸ்.சி (பெண்) பிரிவினருக்கும், ஆதனூர், அல்லிநகரம், கொட்டரை, நாட்டார்மங்கலம், திம்மூர் ஆகிய ஊராட்சித் தலைவர் பதவி எஸ்.சி (பொது) பிரிவினருக்கும், புஜயங்கராயநல்லூர், செட்டிக்குளம், இலந்தங்குழி, எலந்தளப்பட்டி, கீழமாத்தூர், கொளத்தூர், குரூர், நக்கசேலம், நாரணமங்கலம், நொச்சிக்குளம், சில்லக்குடி, சிறுகன்பூர், சிறுவயலூர், டி.களத்தூர் ஆகிய ஊராட்சித் தலைவர் பதவி பொது (பெண்) பிரிவினருக்கும், அயினாபுரம், அருணாகிரிமங்கலம், ஜமீன் ஆத்தூர், கண்ணப்பாடி, காரை, கொளக்கநாத்தம், மாவிலங்கை, மேலமாத்தூர், ஜமின்பேரையூர், பிலிமிசை, ராமலிங்கபுரம், சாத்தனூர், தெரணி, வரகுபாடி ஆகிய ஊராட்சித் தலைவர் பதவி பொது பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வேப்பந்தட்டை ஒன்றியம்:      வேப்பந்தட்டை ஒன்றியத்தில் உள்ள 29 ஊராட்சிகளில் மலையாளப்பட்டி, பாண்டகப்பாடி, தொண்டபாடி, வாலிகண்டபுரம், வேப்பந்தட்டை ஆகிய ஊராட்சித் தலைவர் பதவி எஸ்.சி (பெண்) பிரிவினருக்கும்,
அனுக்கூர், பிரம்மதேசம், மேட்டுப்பாளையம், தொண்டாமாந்துறை, வி.களத்தூர் ஆகிய ஊராட்சித் தலைவர் பதவி எஸ்.சி (பொது) பிரிவினருக்கும், அன்னமங்கலம், எறையூர், கை.களத்தூர், நெய்க்குப்பை, நூத்தப்பூர், பசும்பலூர், பில்லாங்குளம், தழுதாழை, தேவையூர், திருவாளந்துறை ஆகிய ஊராட்சித் தலைவர் பதவி பொது (பெண்) பிரிவினருக்கும், இனாம் அகரம், காரியானூர், அயன்பேரையூர், பெரியம்மாபாளையம், பெரியவடகரை, பிம்பலூர், உடும்பியம், வெண்பாவூர், வெங்கலம் ஆகிய ஊராட்சித் தலைவர் பதவி பொது பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வேப்பூர் ஒன்றியம்: வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள 33 ஊராட்சிகளில் துங்கபுரம், வசிஸ்டபுரம், மூங்கில்பாடி, பேரளி, பெரியவெண்மணி, வயலப்பாடி ஆகிய ஊராட்சித் தலைவர் பதவி எஸ்.சி (பெண்) பிரிவினருக்கும், கிழுமத்தூர், பெரியம்மாபாளையம், சித்தளி, எஸ்.ஆடுதுறை, வரகூர், ஆண்டிக்குரும்பலூர் ஆகிய ஊராட்சித் தலைவர் பதவி எஸ்.சி (பொது) பிரிவினருக்கும், அந்தூர், அசூர், காடூர், கீழப்பெரம்பலூர், கீழப்புலியூர், குன்னம்,
ஓலைப்பாடி, பெண்ணக்கோணம், புதுவேட்டக்குடி, சிறுமத்தூர், திருமாந்துரை ஆகிய ஊராட்சித் தலைவர் பதவி பொது (பெண்) பிரிவினருக்கும், அகரம்சிகூர், அத்தியூர், எழுமூர், கொளப்பாடி, நன்னை, ஒதியம், ஒகளூர், பரவாய், பெருமத்தூர், வடக்கலூர் ஆகிய ஊராட்சித் தலைவர் பதவி பொது பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com