கிராமப்புற இளைஞர்களுக்கு ஆடு வளர்ப்பு இலவசப் பயிற்சி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் ஆடு வளர்ப்பு தொழில்நுட்பம் குறித்த ஆறு நாட்கள் இலவசப் பயிற்சி அளிக்கப்படுமென அறிவித்துள்ளது.
கிராமப்புற இளைஞர்களுக்கு ஆடு வளர்ப்பு இலவசப் பயிற்சி
Updated on
1 min read

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் ஆடு வளர்ப்பு தொழில்நுட்பம் குறித்த ஆறு நாட்கள் இலவசப் பயிற்சி அளிக்கப்படுமென அறிவித்துள்ளது.
இதுகுறித்து பயிற்சி நிலைய இயக்குநர் ஆர். சரண்யா வெளியிட்ட தகவல்:
 கிராமப்புறத்தைச் சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற ஆண்கள், பெண்களுக்கு இலவச மதிய உணவு, தரமான குறிப்பேடுகளுடன் பல்வேறு தொழில் பயற்சிகளை அளித்து அவர்களது எதிர்காலத்துக்கு வழிகாட்டி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஆடு வளர்ப்பு தொழில்நுட்பம் குறித்து 6 நாட்கள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதில் சேர விரும்பும் 18 முதல் 40 வயது வரையுள்ள 8 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள கிராமப்புற இளைஞர்கள்  3 புகைப்படங்கள், மாற்றுச்சான்று, மதிப்பெண் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல்களுடன் செல்லிடப்பேசி எண் ஆகியவைகளைக் குறிப்பிட்டு நவ. 22-ம் தேதிக்குள், நிலைய இயக்குநர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், 15062, மேல நான்காம் வீதி, திலகர் திடல், புதுக்கோட்டை. 622001 என்ற முகவரியில் நேரில் விண்ணப்பிக்கலாம். தொடர்புக்கு. 04322-225 339, 70109-57772.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com