குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய நூல் வெளியீடு

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமித் திருக்கோவிலில் அண்மையில் நடைபெற்ற திருமுறை மாநாட்டில் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய் நூல் வெளியிடப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமித் திருக்கோவிலில் அண்மையில் நடைபெற்ற திருமுறை மாநாட்டில் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய் நூல் வெளியிடப்பட்டது.

மஞ்சக்குடி தயானந்த கல்வி அறக்கட்டளை சார்பில் அச்சிடப்பட்ட முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோவில் (ராஜராஜேச்சரம்) என்ற நூலை சுவாமி தயானந்த சரஸ்வதி வெளியிட, அதன் முதல் பிரதியை தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் இரா. நாகசாமி பெற்றுக் கொண்டார். மடாதிபதிகள் நூலின் சிறப்புகளை எடுத்துரைத்தனர்.

இந்த நூலில் பெரியபுராணத்தின் சிறப்புகளை எடுத்துக்காட்டும் வகையில் அனுமந்த தாராசுரம் திருக்கோவில் 108 ஓதுவார்களின் உருவச் சிற்பங்கள் கல்வெட்டு பொறிப்புகளுடன் இருப்பது பற்றியும், திருநாவுக்கரசர் திருவையாறில் பாடிய மாதற் பிறைக் கண்ணியானை எனத் தொடங்கும் 11 பாடல்களில் உள்ள அப்பதிகத்துக்கென 11 சிற்பக் காட்சிகள் அக்கோவிலில் இருப்பது பற்றியும், கட்டடக்கலை, சிற்பம் உள்ளிட்டவை குறித்தும் நூலாசிரியர் குடவாயில் பாலசுப்பிரமணியன் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com