மங்காளியம்மன் திருவிழா

கும்பகோணத்தில் அம்மன் பண்டிகை எனப்படும் மங்காளியம்மன் திருவிழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

கும்பகோணத்தில் அம்மன் பண்டிகை எனப்படும் மங்காளியம்மன் திருவிழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
கும்பேஸ்வரர் கோயில் தெற்கு வீதியிலுள்ள ஸ்ரீபவானி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் பாவ்ஸார் சத்திரிய சமூகத்தினர் பக்தி சிரத்தையுடன் இவ்விழாவைக் கொண்டாடுகின்றனர்.
அதன்படி இவ்விழா கடந்த 1 -ம் தேதி கலசபூஜையுடன் தொடங்கியது.
செவ்வாய்க்கிழமை அம்மன் பிரதிஷ்டை நடைபெற்றது. புதன்கிழமை காலை பாவ்ஸார் சத்ரிய மண்டலி கட்டடத்தில் இருந்து தொடங்கிய அம்மன் திருவீதியுலாவில் மணமாகாத இளைஞரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து, அவருக்கு பெண் உடை அணிவித்து, அம்மன்போல வேடமிட்டு  அம்மன் முகக் கவசம் வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
நகர முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலம் காவிரி சக்கரப்படித்துறையை வந்தடைந்து,  சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இரவு விடையாற்றி உற்சவம் நடைபெற்றது.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com