2018-ல் என் நினைவில் நின்றவை: ஐசிசி விருதுகள் குறித்து மனம் திறந்த விராட் கோலி

2018-ஆம் ஆண்டுக்கான ஐசிசி-யின் 3 உயரிய விருதுகளையும் ஒரே ஆண்டில் வென்ற முதல் வீரர் என்ற புதிய சாதனையை விராட் கோலி படைத்தார்.
2018-ல் என் நினைவில் நின்றவை: ஐசிசி விருதுகள் குறித்து மனம் திறந்த விராட் கோலி

2018-ஆம் ஆண்டுக்கான ஐசிசி-யின் 3 உயரிய விருதுகளையும் ஒரே ஆண்டில் வென்ற முதல் வீரர் என்ற புதிய சாதனையை விராட் கோலி படைத்தார்.

ஐசிசி-யின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர் கார்ஃபீல்ட் சாபர்ஸ் விருது, சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது மற்றும் சிறந்த ஒருநாள் வீரருக்கான விருது ஆகியவற்றுக்கு விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். 

மேலும், 2018-ஆம் ஆண்டுக்கான ஐசிசி சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கான கேப்டனாகவும் விராட் கோலி நியமிக்கப்பட்டார். 

இதுகுறித்து விராட் கோலி கூறுகையில், 

இந்த அனுபவம் மிகவும் அற்புதமாக உள்ளது. இந்த ஆண்டு முழுவதும் எனது கடுமையான உழைப்புக்கு வெகுமதியாக இந்த விருதுகள் அமைந்துள்ளன. என்னுடைய தனிப்பட்ட ஆட்டமும், எனது தலைமையிலான அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருவது மிகவும் மிகழ்ச்சியளிக்கிறது. கிரிக்கெட் என்பது பலர் விளையாடும் விளையாட்டு, அதுபோன்ற ஒரு விளையாட்டில் உங்களின் தனிப்பட்ட ஆட்டம் சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது மிகவும் சிறப்புக்கும், பெருமைக்கும் உரியதாகும். 

இதுபோன்ற விருதுகளால் நமது ஆட்டம் இன்னும் மேம்படும், மேலும் நமக்கு ஊக்கமளுக்கும் விதமாகவும் அமையும், கிரிக்கெட்டின் தரம் மேலும் உயரும், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த சிறந்த தூண்டுகோலாக அமையும். இதன் அடிப்படையில், இதுமாதிரியான விருதுகள் நமக்கு எப்போதும் கூடுதல் உந்துசக்தியாக அமையும்.

எந்த ஒரு சூழலிலும் இந்திய அணியின் வெற்றிக்காக மட்டுமே தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறேன். அதனால் தான் இதுபோன்ற வியக்குமளவிலான ஆட்டங்கள் வெளிப்படுகிறது. இதனை நான் கடந்த 2018-ஆம் ஆண்டில் அதிகம் உணர்ந்தேன். 2018-ஆம் ஆண்டினைப் பொறுத்தவரையில் அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றிபெற்றதை சிறப்பான தருணமாகக் கருதுகிறேன். அதுபோன்று பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியும் மிகவும் சிறப்புக்குரியதாக அமைந்தது. 

இதுபோன்ற சிறப்புகுரிய தருணங்களில் இந்திய அணி வெற்றிபெற்றதும், ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியதும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இவையே கடந்த 2018-ஆம் ஆண்டின் நினைவுகளில் என் மனதில் என்றும் நிலைத்திருக்கும்.

நமது இலக்கை சரியாக நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். அதற்காக கடினமாக உழைக்க வேண்டும், போராட வேண்டும். அவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நாம் எதிர்பார்க்காத அளவுக்கு வெற்றிகளை ஈட்ட முடியும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com