'ஹாட்ரிக் ஹீரோ'- ஒரே ஆண்டில் 3 ஐசிசி விருதுகளை வென்று விராட் கோலி புது சாதனை!

ஐசிசி-யின் 3 உயரிய விருதுகளையும் ஒரே ஆண்டில் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி செவ்வாய்கிழமை படைத்தார்.
'ஹாட்ரிக் ஹீரோ'- ஒரே ஆண்டில் 3 ஐசிசி விருதுகளை வென்று விராட் கோலி புது சாதனை!

ஐசிசி-யின் 3 உயரிய விருதுகளையும் ஒரே ஆண்டில் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி செவ்வாய்கிழமை படைத்தார்.

2018-ஆம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள் செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்டன. அவற்றில் 3 உயரிய விருதுகளான ஐசிசி-யின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர் கார்ஃபீல்ட் சாபர்ஸ் விருது, சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது மற்றும் சிறந்த ஒருநாள் வீரருக்கான விருது ஆகியவற்றுக்கு விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். 

இதன்மூலம் ஐசிசி-யின் 3 உயரிய விருதுகளையும் ஒரே ஆண்டில் வென்ற முதல் வீரர் என்ற புதிய சாதனையை விராட் கோலி படைத்தார்.

அதுமட்டுமல்லாமல் 2018-ஆம் ஆண்டுக்கான ஐசிசி சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கான கேப்டனாகவும் விராட் கோலி நியமிக்கப்பட்டார். 

முன்னதாக, 2017-ஆம் ஆண்டுக்கான ஐசிசி-யின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர் கார்ஃபீல்ட் சாபர்ஸ் விருதையும் விராட் கோலி வென்றிருந்தார். அதுபோன்று 2012 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் சிறந்த ஒருநாள் வீரருக்கான விருதுகளையும் விராட் கோலி வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com