ஹோண்டாவின் ’டபிள்யூ.ஆர்-வி' கார் அறிமுகம்

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் ’டபிள்யூ.ஆர்-வி' என்ற புதிய சொகுசு காரை புது தில்லியில் வியாழக்கிழமை அறிமுகம் செய்தது.இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவரும், தலைமைச் செயல்
ஹோண்டாவின் ’டபிள்யூ.ஆர்-வி' கார் அறிமுகம்

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் ’டபிள்யூ.ஆர்-வி' என்ற புதிய சொகுசு காரை புது தில்லியில் வியாழக்கிழமை அறிமுகம் செய்தது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான யோஷிரோ யுனோ, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட சொகுசுக் கார்களுக்கான தேவை இந்திய சந்தையில் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனை நன்கு உணர்ந்தே ’டபிள்யூ.ஆர்-வி' கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்புதிய தயாரிப்பு ஹோண்டாவின் ஜாஸ் காரை அடிப்படையாகக் கொண்டது.
1.2 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்ட பெட்ரோலில் இயங்கும் ’டபிள்யூ.ஆர்-வி' கார் இரு மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் விலை ரூ.7.75 லட்சம் மற்றும் ரூ.8.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று 1.5 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்ட டீசலில் இயங்கும் ’டபிள்யூ.ஆர்-வி' காரின் விலை மாடல்களுக்கு ஏற்பட ரூ.8.79 லட்சம் மற்றும் ரூ.9.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செயற்கைகோள் உதவியுடன் வழிகாட்டும் தொழில்நுட்பம், ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி, இரட்டை காற்றுப்பைகள் உள்ளிட்ட ஏராளமான தொழில்நுட்ப அம்சங்கள் இப்புதிய காரில் இடம்பெற்றுள்ளன.
’டபிள்யூ.ஆர்-வி' கார் முற்றிலும் ஹோண்டா நிறுவனத்தின் இந்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் வடிவமைக்கப்பட்டு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. உலக அளவில் இந்த கார் இந்தியாவில் தான் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com