

தேசிய பங்குச் சந்தையின் புதிய தலைவரான விக்ரம் லிமாயேவுக்கு ஆண்டுக்கு ரூ.8 கோடி ஊதியம் வழங்கப்படவுள்ளது.
உலகின் அதிக மதிப்பு கொண்ட பங்குச் சந்தைகளுள் ஒன்றான தேசிய பங்குச் சந்தையின் தலைமைப் பொறுப்பில் இருந்த சித்ரா ராமகிருஷ்ணா தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த ஆண்டு டிசம்பரில் பதவி விலகினார்.
இதையடுத்து, ஐ.டி.எப்.சி.யில் தலைமைப் பொறுப்பில் இருந்த விக்ரம் லிமாயேவை தேசிய பங்குச் சந்தைக்கு புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
தேசிய பங்குச் சந்தையின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விக்ரம் லிமாயேவுக்கு ஆண்டுக்கு ரூ.8 கோடி ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அடிப்படை ஊதியம், வீட்டு வாடகைப்படி, பயணப்படி உள்ளிட்ட நிலையான ஊதியத்துக்காக ரூ.6 கோடியும், செயல்பாடுகளின் அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.2 கோடியும் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ரூ.8 கோடி தவிர, ஓட்டுநருடன் கார், தொலைபேசி, விடுப்பிற்கீடாக பணம் பெறுதல், கிளப் உறுப்பினர், மருத்துவம் மற்றும் தனிநபர் விபத்து காப்பீடு உள்ளிட்ட பிற சலுகைகளும் வழங்கப்படும்.
இதற்கான ஒப்புதல் வரும் மார்ச் மாதம் 7-ஆம் தேதி நடைபெற உள்ள பங்குதாரர்களின் கூட்டத்தில் பெறப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.