விக்ராந்த், விஷ்ணு இல்லாத சென்னை சிசிஎல் அணி முதல் போட்டியில் தோல்வி!

முதல் போட்டியில் விளையாடிய சென்னை ரைனோஸ் அணியை பெங்கால் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது...
விக்ராந்த், விஷ்ணு இல்லாத சென்னை சிசிஎல் அணி முதல் போட்டியில் தோல்வி!

திரை நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் நட்சத்திர கிரிக்கெட் எனப்படும் சி.சி.எல் போட்டி நேற்று முதல் தொடங்கியது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் விளையாடிய சென்னை ரைனோஸ் அணியை பெங்கால் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 

பெங்கால் அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. ஷாம் சென்னை சென்னை அணியின் கேப்டனாகவும் ஜாய் பெங்கால் அணி கேப்டனாகவும் செயல்பட்டார்கள்.

நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் பெங்கால் அணி அதிரடியாக விளையாடி 2 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் குவித்தது. அந்த அணியின் யூசுப் 31 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து அசத்தினார். 

கடினமான இலக்கை எதிர்கொண்ட சென்னை ரைனோஸ் அணி, 10 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க வீரர் ரமணா 19 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். பெங்கால் அணியின் மோகன் பிரமாதமாகப் பந்துவீசி 2 ஓவர்களில் 8 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார். இதனால் பெங்கால் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை ரைனோஸ் அணியின் பிரபல வீரர்களான விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகிய இருவரும் இந்த வருட சிசிஎல் போட்டியில் கலந்துகொள்வதில்லை என்று முடிவெடுத்துள்ளார்கள். அவர்களுடைய அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்துள்ளது. சென்னை ரைனோஸ் அணியில் உள்ள நடிகர்களிடையே கருத்துவேறுபாடுகள் தோன்றியதால் இருவரும் இந்த முடிவை எடுத்துள்ளார்கள். இதுகுறித்து இருவரும் ட்விட்டர் வழியாகத் தங்கள் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். இந்நிலையில் சென்னை ரைனோஸ் அணியின் கேப்டன் ஆர்யாவும் இந்த வருட போட்டியிலிருந்து விலகியுள்ளார். சென்னை அணியின் கேப்டனாக ஷாம் செயல்பட்டார். இதையடுத்து விக்ராந்த், விஷ்ணு விஷாலைப் போல ஆர்யாவும் இந்த வருட சிசிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் சிசிஎல் அணியின் இணையத்தளத்தில் சென்னை அணியின் கேப்டனாக ஆர்யாவின் பெயர்தான் இடம்பெற்றுள்ளது. இதனால் ஆர்யாவின் நிலை குறித்து குழப்பங்கள் உருவாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com