

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றால் பெரிய நூலகம் ஒன்றைக் கட்டவுள்ளதாகக் கவிஞர் சிநேகன் கூறியுள்ளார்.
நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவிஞர் சிநேகன் - நடிகர் வையாபுரி இடையேயான உரையாடலின்போது கவிஞர் சிநேகன் கூறியதாவது:
100 நாள் இங்கிருந்து நிகழ்ச்சியில் ஒருவேளை வெற்றி பெற்றுவிட்டால், நூறு கிராமங்களுக்கு பொதுவாக ஒரு நூலகம் கட்டவேண்டும். பிக் பாஸ் நூலகம் என்று பெயரிட்டு தலைவனை (கமல்) வைத்து திறப்புவிழா நடத்த வேண்டும். அதிலிருந்து ஒரு பைசா நம் சொந்தச் செலவுக்கென்று எடுத்துக்கொள்ளக்கூடாது என்று கூறினார்.
சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி - பிக் பாஸ். தற்பொழுது இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சில மாதங்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.