காற்றின் தேசம் எங்கும் உந்தன் கானம் சென்று தங்கும்: இளையராஜாவுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து!

வாழும் லோகம் ஏழும் - உந்தன் ராகம் சென்று ஆளும், வாகை சூடும் - காதல் ஓவியம் வரிகளால் வாழ்த்துகிறேன்...
காற்றின் தேசம் எங்கும் உந்தன் கானம் சென்று தங்கும்: இளையராஜாவுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து!

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், தொழில்- வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய உயரிய விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்துக்கு முந்தைய நாள் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி, வியாழக்கிழமையன்று (ஜன.25) பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இசைஞானி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது, நாட்டிலேயே 2-ஆவது உயரிய விருதாகும். 

இதையடுத்து கவிஞர் வைரமுத்து, இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் எழுதியுள்ளதாவது:

பத்ம விருதுகள்  பெறும் 85 இந்திய ஆளுமைகளுக்கும் என் வாழ்த்துக்கள்.

பத்ம விபூஷண் விருது பெறும் இளையராஜாவை
“காற்றின் தேசம் எங்கும் - உந்தன்
கானம் சென்று தங்கும்
வாழும் லோகம் ஏழும் - உந்தன்
ராகம் சென்று ஆளும்
வாகை சூடும்” 
- என்ற காதல் ஓவியம்  வரிகளால் வாழ்த்துகிறேன் என்று வைரமுத்து வாழ்த்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com