ரஷ்யக் காதலரைத் திருமணம் செய்த நடிகை ஸ்ரேயா (புகைப்படங்கள் & விடியோ)

ஸ்ரேயாவின் திருமணப் புகைப்படங்களும் அதன் காணொளியும் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன...
ரஷ்யக் காதலரைத் திருமணம் செய்த நடிகை ஸ்ரேயா (புகைப்படங்கள் & விடியோ)
Updated on
1 min read

2001-ல் திரையுலகில் அறிமுகமான ஸ்ரேயா, தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகங்களில் பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் ஸ்ரேயாவுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரரும் தொழிலதிபருமான ஆண்ட்ரே கோஷ்சீவை திருமணம் செய்துள்ளார் ஸ்ரேயா. 

ஷபனா அஸ்மி, மனோஜ் பாஜ்பயி என திரையுலகைச் சேர்ந்த இருவர் மட்டுமே ஸ்ரேயாவின் திருமணத்தில் கலந்துகொண்டுள்ளார்கள். மிக நெருங்கிய நண்பர்கள், உறவினர்களை மட்டுமே திருமணத்துக்கு அழைத்துள்ளார் ஸ்ரேயா. 

இத்தகவல்கள் மும்பை ஊடகங்களில் வெளியானாலும் தனது திருமணம் குறித்து இதுவரை ஸ்ரேயா அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. எனவே விரைவில் அதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஸ்ரேயாவின் திருமணப் புகைப்படங்களும் அதன் காணொளியும் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

திருமணக் காணொளி - https://www.instagram.com/p/BghO_kMBHK0/?taken-by=shriyasaran.fc

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com