பாகம்-20: சென்னை மாநகராட்சி நகரமைப்புத்துறையில் கட்டிட அனுமதி பெறுவது எப்படி?

சென்னை மாநகராட்சி நகரமைப்புத்துறையில் கட்டிட அனுமதி பெறுவது குறித்து அறிய வேண்டிய பல முக்கியத் தகவல்களை இங்கே அறிந்து கொள்ளலாம்.
பாகம்-20: சென்னை மாநகராட்சி நகரமைப்புத்துறையில் கட்டிட அனுமதி பெறுவது எப்படி?

சென்னை மாநகராட்சி நகரமைப்புத்துறையில் கட்டிட அனுமதி பெறுவது குறித்து அறிய வேண்டிய பல முக்கியத் தகவல்களை இங்கே அறிந்து கொள்ளலாம்.

சென்னை மாநகராட்சி நகரமைப்புத்துறை எந்தெந்த கட்டிடங்களுக்கு அனுமதி அளிக்கிறது?

(1) பெருநகர  சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கீழ்கண்டவாறு உள்ளவைகளுக்கு, தமிழ் நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டம் 1971 மற்றும் பெருநகர  சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம், 1919-ன்படி ஒப்புதல் பெறலாம்.

    (அ) குடியிருப்பு, வணிகவளாகம், தொழிற்ச்சாலை, நிறுவனம் ஆகிய பல்வேறு வகையான கட்டுமான கட்டிட பணிகள்.
     (ஆ) மனை உட்பிரிவு (8 மனைகளுக்கு மிகாமல்)
     (இ) மனைப் பிரிவு (8 மனைகளுக்கு மேல் உள்ளவை)

(2) பெருநகர  சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு சட்டங்களை, பெருநகர  சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஆகியவை செயல்படுத்துகின்றன. சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் தமிழ் நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டம், 1971-னை வளர்ச்சி விதிமுறைகளை கொண்டும், பெருநகர  சென்னை மாநகராட்சி சென்னை மாநகர முனிசிபல் சட்டம், 1919-னை சென்னை மாநகர கட்டிட விதி, 1972ல் உள்ளதை கொண்டும் இதனை செயல்படுத்துகின்றன.

(3) பெருநகர  சென்னை மாநகராட்சியில் செய்யப்படும் கட்டுமானம் சம்மந்தமானவைகளுக்கு இரண்டு வகையான ஒப்புதல் பெற வேண்டும். முதலில் திட்ட அனுமதி பெற வேண்டும். இதனை தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டம், 1971-ன் படியும், இரண்டாம் முழுமைத் திட்டத்தில் உள்ள வளர்ச்சி விதிமுறைகனை கொண்டும் ஒப்புதல் வழங்கப்படுகிறது. இரண்டாவது ஒப்புதல் கட்டிட அனுமதி இதனை சென்னை மாநகர முனிசிபல் சட்டம், 1919-ன் படியும், சென்னை மாநகர கட்டிட விதிகளை கொண்டும் ஒப்புதல் வழங்கப்படுகின்றது.

(4) பெருநகர  சென்னை மாநகராட்சி யில் அனைத்து விதமான கட்டிடங்களுக்கு கட்டிட அனுமதி வழங்கப்படுகின்றது. இவற்றில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் சிறப்பு கட்டிடங்கள், தொகுப்பு கட்டிடங்கள், பலமாடி கட்டிடங்கள் ஆகியவற்றிற்கு வழங்கப்படும் திட்ட அனுமதி விண்ணப்பங்களும் அடங்கும்.

(5) மேலே குறிப்பிட்டுள்ள கட்டிட அனுமதி தவிர, பெருநகர  சென்னை மாநகராட்சி யில், உறுப்பினர்-செயலர், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் அவர்களால் வட்டார இணை/துணை ஆணையர்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரப் பகிர்வின் படி கீழ்கண்ட இனங்களுக்கும் திட்ட அனுமதி வழங்கப்படுகின்றது:

     (அ) 6 குடியிறுப்பிற்கு மிகாமலும், 9.0 மீட்டர் உயரத்திற்கு மிகாமல் உள்ள சாதாரண குடியிருப்பு கட்டிடங்கள் ( தரைதளம் + முதல் தளம் / வாகனம் நிறுத்தும் தளம் + இரண்டு தளம்)
     (ஆ) 300 சதுர மீட்டர் கட்டிட பரப்பளவிற்கு மிகாமல் உள்ள வணிக கட்டிடங்கள் ( தரைதளம் + முதல் தளம் / வாகனம் நிறுத்தும் தளம் + இரண்டு தளம்)
     (இ) தொழிற்ச்சாலை மற்றும் நிறுவன கட்டிடங்கள், 15.25 மீ உயரத்திற்கு மிகாமல்
     (ஈ) மனைப்பிரிவு (அல்லது) மனை உட்பிரிவு, (குடியிருப்பு கட்டிடங்களுக்கு)  மொத்த பரப்பளவு 20,000 சதுர மீட்டருக்கு மிகாமல்

(6) பெருநகர  சென்னை மாநகராட்சி யில் திட்ட அனுமதி மற்றும் கட்டிட அனுமதி ஒப்புதல் ஒருங்கிணைந்து வரிசை எண்.5 (அ) முதல் (ஈ) வரை உள்ள கட்டிடம் / மனை ஆகிய முன்னேற்றங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படுகின்றது.

(7) இதற்கான விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட வட்டார அலுவலகங்களில் விண்ணப்பதாரர் / மனை உரிமையாளர் சமர்ப்பிக்கலாம்.


 இது தொடர்பாக உள்ள வழிமுறைகள் மற்றும் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் ஆகியவை இணைப்பு-1ல் காட்டப்பட்டுள்ளது. 

(8) பெருநகர  சென்னை மாநகராட்சி யில் சமர்ப்பிக்கப்படும் திட்ட அனுமதி விண்ணப்பங்களை உடனடியாக கூர்ந்தாய்வு செய்து ஒப்புதல் வழங்க வேண்டி அனைத்து பணிகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்யப்படும் ஒவ்வொரு நிகழ்வுகளும் கணினியில் பதிவு செய்யப்படுகிறது. திட்ட அனுமதி விண்ணப்பஙகளின் நிலையினை விண்ணப்பதாரர் / மனை உரிமையாளர் பெருநகர  சென்னை மாநகராட்சி இணையதளத்தில், விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் பொழுது அளிக்கப்பட்ட எண் கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

மேலும், திட்ட அனுமதி விண்ணப்பத்தின் ஒவ்வொரு நிலையினையும் குறுஞ் செய்தி / மின் அஞ்சல் வாயிலாக விண்ணப்பதாரர் / மனை உரிமையாளருக்கு தெரிவிக்கப்படும். இதன் மூலம் அவர்கள் கூடுதல் ஆவணங்கள் மற்றும் விவரங்கள் தேவைப்படுமாயின் உடனடியாக சமர்ப்பிக்கலாம். திட்ட அனுமதி விண்ணப்பம் ஒப்புதல் அளித்தவுடன் செலுத்த வேண்டிய கட்டணம் தெரிந்து கொள்வதால், அவர்கள் உடனடியாக அதனை செலுத்தி திட்ட அனுமதி / கட்டிட அனுமதி பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

(9) திட்ட அனுமதி / கட்டிட அனுமதி பெறுவதற்கு மனையின் தன்மைக்கு ஏற்ப கீழ்கண்ட கட்டணங்கள் வசூலிக்கப்படும்:

     1. திட்ட அனுமதி விண்ணப்பங்களுக்கு:
          (அ) சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் வளர்ச்சி கட்டணம்
          (ஆ) திறந்த வெளி ஒதுக்கீடு கட்டணம்
          (இ) உள்கட்டமைப்பு மற்றும் வசதி கட்டணம்
          (ஈ) மனை / வரன் முறைப்படுத்தும் கட்டணம் 
     2. கட்டிட அனுமதி விண்ணப்பங்களுக்கு
          (அ) கட்டிட அனுமதி கட்டணம்
          (ஆ) கூர்ந்தாய்வு கட்டணம்
          (இ) தகர்ப்பு கட்டணம்
          (ஈ) தோராய அபிவிருத்தி கட்டணம்
        (உ) சேவை இணைப்பு வேண்டி சாலை வெட்டுக்களை சீர் செய்ய வேண்டி கட்டணம் (குடிநீர், கழிவுநீர் மற்றும் மின்சார இணைப்புகள் )
          (ஊ) வரைபட கட்டணம்
        (எ) பெருநகர  சென்னை மாநகராட்சி முனிசிபில் சட்டம், 1919-ல் விதி எண்.244(A)ன் கீழ் கட்டிடங்களை வரன்முறைப்படுத்தும் கட்டணம்
          (ஏ) தொழிலாளர் நல வாரியத்திற்கான கட்டணம்
          (ஐ) மனை வரி

(10) பெருநகர  சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கட்டிடங்களை தகர்ப்பதற்கு பெருநகர  சென்னை மாநகராட்சி யில் ஒப்புதல் பெற வேண்டும். அவ்வாறு தகர்ப்பதற்கு முன்னரே ஒப்புதல் பெற வேண்டும். இது தொடர்பாக, விண்ணப்பம் சமர்ப்பித்து, கீழ்கண்ட கட்டணம் செலுத்திய பின்பு ஒப்புதல் வழங்கப்படும்.
          (அ) கூர்ந்தாய்வு கட்டணம்
          (ஆ) தகர்ப்பு கட்டணம்

(11) அனைத்து வகையான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் பொழுது விண்ணப்பத்தில் பெருநகர  சென்னை மாநகராட்சியில் பதிவு செய்த உரிமம் பெற்ற அளவையர் சான்றொப்பம் இட வேண்டும். அவ்வாறான பதிவு பெற்ற உரிம அளவாளர்களின் பட்டியல் இணைப்பு II –ல் தெரிந்துக் கொள்ளலாம்.

(12) பல்வேறு வகையான விண்ணப்பங்கள் :
          (அ) திட்ட அனுமதி (வரிசை எண்.5 (அ) முதல் (ஈ) வரை உள்ளவைகளுக்கு –இந்த வகை திட்ட அனுமதி விண்ணப்பம் 
          (ஆ) மனைப்பிரிவு / மனை உட்பிரிவு செய்வதற்கான திட்ட அனுமதி (20,000 சதுர மீட்டர் நிலம் பரப்பளவிற்கு மிகாமல்) இந்த வகை மனை உட்பிரிவு விண்ணப்பம் .
          (இ) அனைத்து வகையான கட்டிடங்கள் தகர்ப்பதற்கு, (எல்லையற்ற கட்டிட  பரப்பளவிற்கு ) இந்த வகை தகர்ப்பு விண்ணப்பம் என்று வகைப்படும்.
          (ஈ) சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தால் சிறப்பு கட்டிடம், தொகுப்பு கட்டிடம் மற்றும் பல மாடி கட்டிடங்களுக்கு வழங்கப்படும் திட்ட அனுமதிகளுக்கான கட்டிட அனுமதி – இந்த வகை கட்டிட அனுமதி விண்ணப்பம் என்று வகைப்படும்.

(13) அனைத்து வகையான கட்டிடங்களுக்கு (தொழிற்சாலை கட்டிடம் நீங்கலாக) ஒப்புல் வழங்குவதற்கு வட்டார இணை/துணை ஆணையர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை கட்டிடங்களுக்கு ஆணையாளர், பெருநகர  சென்னை மாநகராட்சி அவர்களால் ஒப்புதல் வழங்கப்படும்.


கட்டிடங்களின் வகைப்பாடும் அவற்றிக்கான அதிகாரப் பகிர்வும்:

(16) விண்ணப்ப படிவங்கள்:
     (அ) திட்ட அனுமதி விண்ணப்பம்:
          (i) படிவம் “ஆ” சரிபார்க்கும் பட்டியலோடு (சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தில் பெற்றுக் கொள்ளலாம் )

        (ii) கட்டிட அனுமதி படிவம் (பெருநகர  சென்னை மாநகராட்சி இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்)

     (ஆ) மனைப்பிரிவு / மனை உட்பிரிவு விண்ணப்பம்: 
          (i) படிவம் “ஆ” சரிபார்க்கும் பட்டியலோடு (சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தில் பெற்றுக் கொள்ளலாம் )

     (இ) சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தால் திட்ட அனுமதி 
வழங்கப்பட்டதற்கான கட்டிட அனுமதி
          (i) கட்டிட அனுமதி படிவம் ( பெருநகர  சென்னை மாநகராட்சி இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்)

     (ஈ) தகர்ப்பு விண்ணப்பம் :
          (i) கீழ்கண்டவாறு ஒரு கடிதம் மாதிரி மூலம் விண்ணப்பம் செய்யலாம்.
 

அனுப்புநர்
          விண்ணப்பதாரரின்
          (பெயர் மற்றும் முகவரி)

பெறுநர்
          வட்டார இணை/ துணை ஆணையர்
          (சம்மந்தப்பட்ட வட்டாரஅலுவலக முகவரியோடு)

ஐயா/அம்மையீர்,

          பொருள்: தகர்ப்பு விண்ணப்பம் - (கட்டிட முகவரி) அமைந்துள்ள கட்டிடம் தகர்ப்பு ஒப்புதல் வேண்டி – தொடர்பாக 
                                              ******

          மேலே குறிப்பிட்டுள்ள இடத்தில் அமைந்துள்ள கட்டிடத்தை தகர்ப்பதற்கான ஒப்புதலை வழங்குவது தொடர்பாக தேவையான ஆவணங்களை இணைத்து இத்துடன் சமர்ப்பிக்கப்படுகிறது. 

          தகர்ப்பு விண்ணப்பத்தினை ஒப்புதல் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

குறிப்பு : இக்கடிதம் கட்டிடம் தகர்ப்பதற்கு மட்டும் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு தான் பொருந்தும். தகர்த்து விட்டு மீண்டும் புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பாக விண்ணப்பங்கள், திட்ட அனுமதி விண்ணப்பங்களாக அளிக்க வேண்டும்.

இணைப்பு-I

வட்டார அலுவலகங்களில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு தேவையான வழிமுறைகள் மற்றும் ஆவணங்கள் : வழிமுறைகள்:

          (அ) விண்ணப்பங்கள் விண்ணப்பதாரர் / மனை உரிமையாளர் மற்றும் உரிமம் பெற்ற அளவாளர் கையொப்பத்தோடு, பெருநகர  சென்னை மாநகராட்சி இணையதளத்தில் ஆன்லைன் (online) முறையில் கட்டிட வரைபட ஒப்புதல் அறிக்கை மற்றும் தேவையான ஆவணங்களோடு சம்மந்தப்பட்ட வட்டார அலுவலகத்தில் அளிக்க வேண்டும் (online முறையில் கட்டிட வரைபட ஒப்புதல் வழங்குவது தொடர்பாக கீழே (இ) வரிசையில் குறிப்பிடப்பட்டுள்ளது) விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் பொழுது கீழ்கண்ட விண்ணப்பம் கட்டணமாக, வரைவு காசோலை மூலம் செலுத்த வேண்டும்.வரைவு காசோலை “ஆணையாளர், பெருநகர  சென்னை மாநகராட்சி ” என்கின்ற பெயரில் இருக்க வேண்டும். 

(ஆ) இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் மற்றும் விண்ணப்பங்கள்



நிபந்தனைகள்

(1) பெருநகர  சென்னை மாநகராட்சி ச் சட்டம் -1919-இன் 237-ஆவது பிரிவின்படி ஆணையாளர் ஒப்புதல் தெரிவித்தாலன்றி அல்லது மேற்கூறிய சட்டத்தின் 238- ஆவது பிரிவின்படி அவராலோ அல்லது 239-ஆவது பிரிவின் நிலைக்குழுவினராலோ தமிழ்நாடு நகரத்திட்டச் சட்டம் 1920-இன் 17-ஆவது பிரிவின்படி அனுமதி வழங்கப்பட்டாலன்றி நான் இப்பணியைச் செய்ய ஆரம்பிக்கமாட்டேன் என ஒப்புக் கொள்கிறேன்.

(2) அனுமதிக்கப்பட்ட மனைக்கட்ட உருவரைகள் வேலைமான திட்டத் தனிக்குறிப்புகள் இவற்றுக்குப் புறம்பாகவோ, அல்லது பெருநகர  சென்னை மாநகராட்சி சட்டம் 1919-இன் கட்டுப்பாட்டு விதிகளக்கு மாறாகவோ அல்லது அதன்படி செய்யப்பட்டுள்ள எந்த ஒரு விதி, துணை விதி, ஆணை அல்லது பிற அறிவிக்கப்பட்ட அறிக்கை, அல்லது அச்சட்டத்தின் கீழ்ச் செய்யப்பட்டுள்ள எந்த
ஒரு கட்டளை அல்லது சட்ட வரம்புக்குட்பட்ட வேண்டுதற் கோரிக்கை இவற்றுக்கு மாறாகவே எப்பணியையும் செய்யமாட்டேன் என ஒப்புக் கொள்கிறேன்.

(3) பெருநகர  சென்னை மாநகராட்சி ச் சட்டம் 1919-இன் 244-ஆவது பிரிவு அல்லது 256 ஆவது பிரிவுகளுக்கு ஏற்ப ஆணையாளரால் அனுப்பப்படும் முறைப்படியான ஏதாவது தகவலறிவிப்பு மற்றம் அவரால் உறுதி செய்யப்பட்ட ஏதாவது ஆணை இவற்றுக்கேற்ப ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டி வந்தால் அதைச் செய்ய ஒப்புக்கொள்கிறேன்.

(4) ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலைவரைப் படிவத்தில் ஒரு நகலும், ஒப்புதல் பெற்ற கட்டட உருவரைப் படங்களின் ஒரு தொகுதியும் கட்டடம் கட்டும் இடத்தில் எப்பொழுதும் பணிநடைபெறும் நேரங்களில் வைத்துக் கொண்டிருப்பேன் என்றும். அத்தகைய வரைபடங்கள் பார்வைக்குக் கிடைக்குமாறு செய்யவும், நேரிய காலங்களில் கட்டடத்தை ஆணையாளரோ அல்லது அவர் சார்பில் அவரால் அதிகாரம் பெற்ற அலுவலரோ மேற்பார்வை செய்யத் திறந்திருக்குமாறு செய்யவும் ஒப்புக் கொள்கிறேன்.

(5) பெருநகர  சென்னை மாநகராட்சி ச் சட்டம் 1919-இன் 107-ஆவது பிரிவுப்படி ஆணையாளருக்கு முன்னறிவிப்புச் செய்யவும் மற்றும் கட்டடநிறைவு வரைப்படிவத் தொகுதி ஒன்றையும் கட்டடம் கட்டி முடிந்த பதினைந்து நாட்களுக்குள்ளோ அல்லது கட்டடத்தில் குடியேறிய உடனோ எது முன்னதாக நிகழினும் அப்போது அளிக்க ஒப்புக்கொள்கிறேன்.

(6) மேலும் சென்னைப் பொதுச் சுகாதாரச் சட்டம் 1939-இன் 26 மற்றும் 33 பிரிவுகளின்படி பெருநகர  சென்னை மாநகராட்சி ப் பொதுச் சுகாதாரத் துறையின் சான்றிதழ் பெறும் வரை கட்டப்போகும் கட்டடம் அல்லது மீண்டும் கட்டப்போகும் கட்டடத்தில் குடியேறுவதில்லை என்றும் அல்லது பிறரைக் குடியமர்த்துவதோ, குடியேறுவதற்கு அனுமதி வழங்குவதோ இல்லை என்றும் ஒப்புக் கொள்கிறேன்.

நிலம் மற்றும் கட்டட உரிமையாளர்
(அல்) விண்ணப்பதாரர் ஒப்பம்

விண்ணப்பதாரருக்கு ஒரு முக்கிய தகவல்

கீழ்காணும் பெருநகர  சென்னை மாநகராட்சி சட்டம் பிரிவு 356 (10) சிறப்புக் கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது. துணைப்பிரிவு இரண்டின்படி உரிமை (அல்) அனுமதி (அல்) பதிவு இவற்றிற்காகச் செலுத்தப்படும் முன் கட்டணம், சட்ட விதியின் கூறு (அல்) வில் குறிக்கப்பட்டது (அல்) துணை வாசகம் (அல்) குறிக்கப்பட்ட தொகை அவ்வாறு செலுத்துபவரை அவ்வுரிமை (அல்) அனுமதி (அல்) பதிவுக்கு உரியவராக்காது. ஆனால் உரிமை (அல்) அனுமதி (அல்) பதிவு நிராகரிக்கப்பட்டால்அக்கட்டணத்தில் பாதிக்கு மேற்படாததையோ (அல்) பெருமன்றத்தால் முடிவு செய்யப்பட்ட மேற்கூறிய தொகையோ திருப்பிக் கொடுத்தற்குரியது.

பிறசேர்க்கை –ஆ

(பார்க்க விதி 27) (1) பெருநகர  சென்னை மாநகராட்சி க் கட்டட விதிகள் (1972) பெருநகர  சென்னை மாநகராட்சி சட்டம் 1919-இன் 248-ஆம் பிரிவுப்படி அல்லது தமிழ்நாடு நகரத் திட்டச் சட்டம் 1920-இன் 17-ஆம் பிரிவுப்படியான விண்ணப்பம்.

 

அனுப்புநர்
     உரிமையாளர் (அல்) விண்ணப்பதாரர் பெயர்
       முகவரி

பெறுநர்
         ஆணையாளர்,
         பெருநகர  சென்னை மாநகராட்சி , சென்னை

ஐயா,
        நான் அடியிற்கண்ட கோட்ட எண் ... இல் உள்ள . தெரு அல்லது சாலையில், மாநகராட்சி மதிப்பீட்டு எண் ...... நகர/மறு நில அளவீட்டு எண் ...
 
இவற்றைக் கொண்ட மனையில் குடிசை / குடிசைகள் கட்ட / மீண்டும் கட்ட / அதில் மாற்றங்கள் செய்ய / விரிவாக்கச் பெருநகர  சென்னை மாநகராட்சிச் சட்டம்   1919-இன் 248-ஆவது பிரிவின் கட்டுப்பாட்டு விதிகளோடு, பெருநகர  சென்னை மாநகராட்சி க் கட்டட விதிகள் 1972-இன் படியும் தமிழ்நாடு நகரத் திட்டச் சட்டம் 1920-இன் 17-ஆவது பிரிவின்படியும் எண்ணுகிறேன்.


நான் இத்துடன் குடிசை / குடிசைகள் கட்டப்போகும் / மீண்டும் கட்டப்போகும் / மாற்றங்கள் செய்யப்போகும் / விரிவாக்கப்போகும் மனையின் வரைப்படத் தேவைப்படும் அளவுக்கு உடன்பட்டு அனுப்புகிறேன்.

               நிலம் மற்றும் குடிசையின் உரிமையாளர்
                (அல்) விண்ணப்பதாரர் ஒப்பம்


 நிபந்தனைகள்

(1) பெருநகர  சென்னை மாநகராட்சி ச் சட்டம் 1919-இன் 250, 251 பிரிவுகள்படி தமிழ்நாடு நகரத்திட்டச் சட்டம் 1920-இன் 17-ஆவது பிரிவுப்படி  ஆணையாளர் அல்லது நிலைக்குழுவினர் அனுமதி கிடைக்கும் வரை இப்பணியை தொடங்க மாட்டேன் என ஒப்புதல் கொள்கிறேன்.

(2) ஆணையாளரின் அனுமதிக்குப் புறம்பான எத்தகைய பணியையோ அல்லது பெருநகர  சென்னை மாநகராட்சி சட்டம் 1919-இன் கட்டுப்பாட்டு விதிகளுக்கு மாறாகவோ, அல்லது அதன்படி செய்யப்பட்டுள்ள எந்த ஒரு விதி / துணை விதி / ஆணை அல்லது பிற அறிவிக்கப்பட்ட அறிக்கை, அல்லது அச்சட்டத்தின் கீழ்ச் செய்யப்பட்டுள்ள எந்த ஒரு கட்டளை அல்லது சட்ட வரம்புக்குட்பட்ட வேண்டுதல் கோரிக்கை இவற்றிற்கு மாறாகவோ எப்பணியையும் செய்யமாட்டேன் என ஒப்புக்கொள்கிறேன்.

(3) பெருநகர  சென்னை மாநகராட்சிச் சட்டம் 1919-இன் 256-ஆவது பிரிவுக்கு ஏற்ப ஆணையாளரால் அனுப்பப்படும் முறைப்படியான தகவலறிவிப்பு மற்றும் அவரால் உறுதி செய்யப்ட்ட ஏதாவது ஆணை அவற்றுக்கேற்ப ஏதாவது மாற்றங்கள் செய்ய வந்தால் அதைச் செய்ய ஒப்புக்கொள்கிறேன்.

(4) பெருநகர சென்னை மாநகராட்சி ச் சட்டம் 1919-இன் 107-ஆவது பிரிவுப்படி ஆணையாளருக்கு குடிசை கட்டி முடிந்த பதினைந்து நாட்களுக்குள்ளோ அல்லது குடிசையில் குடியேறிய உடனோ எது முன்னதாக நிகழினும் அப்போது முன்னறிவிப்புச் செய்ய ஒப்புக்கொள்கிறேன்.

(5) பெருநகர  சென்னை மாநகராட்சி ச் சட்டம் 1939-இன் 26 மற்றம் 33 பிரிவுகளின்படி சென்னை மாநகாரட்சி பொதுச் சுகாதாரத் துறையின் சான்றிதழ் பெறும் வரை கட்டப்போகும் கட்டடம் அல்லது மீண்டும் கட்டப்போகும் குடிசையில் குடியேறுவதில்லை என்றும் அல்லது பிறரைக் குடியமர்த்துவதோ, குடியேறுவதற்கு அனுமதி வழங்குவதோ இல்லை என்றும் ஒப்புக் கொள்கிறேன்.

நிலம் மற்றும் குடிசையின் உரிமையாளர் 
(அல்) விண்ணப்பதாரர் ஒப்பம் 

பிறசேர்க்கை- (அ)
உரிமம் பெற்ற அளவையருக்கும் மற்றும் கட்டடம் கட்ட மீண்டும் கட்ட, சேர்க்க அல்லது மாற்றம் செய்யக் கருதும் உரிமையாளருக்கும் இடையிலான ஒப்பந்தம்.

.. என்னும் உரிமம் பெற்ற அளவாயர் பெருநகர  சென்னை மாநகராட்சி ஆணையாளரால் முறையாக அளிக்கப்பட்ட உரிமம் எண் வகுப்பு .......... பெற்றிருப்பவர் இனி உரிமம் பெற்ற அளவாயர் என்றழைக்கப்படுபவரால் ஒரு தரப்பிலும் . வசிக்கும் ... இனி உரிமையாளரென்று அழைக்கப்படுபவரால் (அச்சொல் சந்தர்ப்பத்திற்கு முரண்பட்டாலன்றி அவருடைய மரபு வழி உரிமைக்குடையோரையும் நிருவாகிகளையும் நிறைவேற்றுபவர்கள் மற்றும் சட்டபடியான பிரதிநிதிகளையும், பேற்றுரிமையாளர்களையும் உட்கொண்டதெனப் பொருள்படும்) மறுதரப்பினரும் 20............ ஆண்டு . மாதம் .. தேதியாகிய இன்று இவ்வொப்பந்தம் செய்யப்பட்டது.

உரிமையாளர் இங்கு இணைக்கப்பட்டுள்ள கட்டட விண்ணப்பத்துடன் இணைந்துள்ள மனைஉரு மாதிரியில் விவரமாக விவரிக்கப்பட்ட கட்டட மனையின் அனைத்து கூறுகள் மற்றும் பகுதிகளின் முழு மற்றும் ஏகபோக உரிமையாளராக இருப்பதாலும்,

மேலும் அவ்வுரிமையாளர், இங்கு அளிக்கப்பட்டுள்ள மாதிரிகள் குறிப்பிட்டுள்ள விவரங்களின்படிக் கட்டடத்தைக் கட்ட மீண்டும் கட்ட விரிவாக்க அல்லது மாறுதல் செய்யக் கருதுவதாலும், உரிமையாளர், கட்டட மனைக்கும் மற்றும் அத்தகைய ஒப்புதல் பெற்ற மனையின் மேற்கண்ட மாதிரிகளின் விவரிக்கப்பட்ட பணிகளை மேற்கொள்ளவும் பெருநகர  சென்னை மாநகராட்சி யின் ஆணையாளரின் ஒப்புதலை நாடுவதாலும்,

மேலும் இவ்விரு தரப்பினரும் இவ்வகையில் இவ்வாசகங்களை நிறைவேற்றும் சட்டப் பிணைப்பிற்கு உட்பட்டுள்ளமையாலும் மற்றும் இதைக் கட்ட அல்லது மீண்டும் கட்டுவதற்கான விண்ணப்பத்துடன் பணிந்து அனுப்புவதாலும்,

மேலும் ஆணையாளரால் வழங்கப்பட்ட உரிமத்தின் இணைப்பு 2-இல் வரையறுத்து ஒப்புக்கொண்ட கட்டணத்தை அளவையர், உரிமையாளருக்கு விதிக்க ஒப்புக் கொண்டுள்ளதாலும், மேலும் உரிமையாளர், கூறப்பட்ட கட்டணத்தை கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளதாலும், மேலும் அளவையர், நடைமுறையிலிருக்கும் அனைத்து விதிகளுக்கும் ஒழுங்கு முறைகளுக்கும் இணங்கி உருவரை மாதிரிகளைத் தயாரித்துள்ளதாலும், மேலும் அளவாயர், உரிமையாளர் சார்பாகப் பணி நிறைவேற்றத்தைக் கண்காணிக்க ஒப்புக் கொண்டுள்ளதாலும், மேலும் உரிமையாளர்,  ஆணையாளர் விண்ணப்பத்திற்கு அனுமதி அளிக்கும் வரை பணியை ஆரம்பிப்பதில்லை என ஒப்புக் கொண்டுள்ளதாலும், மேலும் அளவையர், ஆணையாளரால் அளிக்கப்பட்ட இசைவாணைச்சீட்டின் படி பணி செய்வதற்கான வாய்மைச் சான்றாக பணி நிறைவேற்றச் சான்றிதழை ஆணையாருக்குக் கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளதாலும்,


உரிமையாளர் ஆணையாளரால் அளிக்கப்பட்டுள்ள இசைவாணைச் சீட்டிற்கு இணங்க பணிகளை நிறைவேற்ற அவ்வப்பொழுது அளவையரின் ஆலோசனையும் பெற ஒப்புக் கொண்டுள்ளதாலும்


இப்பொழுது மேற்குறிப்பிட்டவற்றைக் கருத்திட்கொண்டும், மேலும் பெருநகர  சென்னை மாநகராட்சி சட்டம் பிரிவு 354 – (1) ன் படியான அறிக்கையில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி இதனால் பிணைப்புறும் இருதரப்பாரைக் கருத்துட்கொண்டும், சட்டப்படி உருவான ஒப்பந்தப் பத்திரத்தின் ஆணைச்சான்றாக, இதில் அளவாயரும், உரிமையாளரும் ஒன்று சேர்ந்து தங்கள் ஒப்பத்தையும் மற்றும் முத்திரையையுமிட்டு, முன் குறித்த ஆண்டு, மாதம், தேதியில் அடியிற் கண்டோர் முன்னிலையில் உறுதிப்படுத்துகின்றனர்.

சான்றளிப்பவர்களின் முன்னிலையில்
உரிமையாளர் உரிமம் பெற்ற அளவாயர்

தொடரும்……

Lr C.P.சரவணன், வழக்கறிஞர்
தொடர்புக்கு - 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com