பாகம்-21: முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்-அரசாணை சொல்லும் நெறிமுறைகள்

“முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் கீழ் 2017-18-ஆம் ஆண்டில் ரூ.420 கோடி தொகையில் 20,000 வீடுகள் கட்டப்படும்” என அரசு அறிவித்துள்ளது.
பாகம்-21: முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்-அரசாணை சொல்லும் நெறிமுறைகள்

“முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் கீழ் 2017-18-ஆம் ஆண்டில் ரூ.420 கோடி தொகையில் 20,000 வீடுகள் கட்டப்படும்” என அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பிற்கிணங்க, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர், 2017-18 ஆம் ஆண்டிற்கு முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தினை ரூ.420 கோடி மதிப்பீட்டில் 20,000 வீடுகள் கட்டுவதற்கு ஏதுவாக வழிகாட்டு நெறிமுறைகளை அரசிற்கு அனுப்பி, இத்திட்டத்தினை செயல்படுத்த உரிய ஆணை வழங்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமாக ஆய்வு செய்து, அதனை ஏற்றுக் கொள்ளலாம் என முடிவு செய்து, அதன்படி 2017-2018-ஆம் ஆண்டில் முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் கீழ் ரூ.2.10 இலட்சம் அலகுத் தொகையில் 20,000 வீடுகள் கட்டுவதற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்படுகிறது. 2017-2018-ஆம் ஆண்டு முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய 

1. அரசாணை (நிலை) எண். 24, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (மா.அதி-)துறை நாள். 24.02.2017 மற்றும் 2. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் கடித நக.எண்:20322/2017/RHS 1-1, நாள்.06.04.2017 பார்வையுடன் நிதித் துறையின் அசா.எண். 30382/ நிதி (ஊ.வ) 2017, நாள். 06.06.2017-ல் பெற்ற இசைவுடன் அரசாணைநிலை) எண்.60 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (மாஅதி-) துறை நாள்: 06.06.2017 வெளியிடப்படுகிறது.

முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தினை செயல்படுத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள்-2017-18

முன்னுரை:
முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் 2011-12 ஆண்டில் துவக்கப்பட்டது. முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் தமிழக அரசின் சிறப்புமிக்க முயற்சியாகும். இத்திட்டம் கிராமப்புற ஏழை மக்களின் வீட்டு வசதி தேவைகளை பூர்த்தி செய்வதோடு பசுமை எரிசக்தியை ஊக்குவிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இலவச வீடு வழங்கும் இத்திட்டத்தின் கீழ் 2011-12 ஆம் ஆண்டு முதல் 2015 -16 வரை உள்ள 5 ஆண்டுகளில் ரூ.5940 கோடி மதிப்பீட்டில் 3 இலட்சம் பசுமை வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

இலவச வீடுகள் கட்டித்தரப்படும் திட்டங்களில், 300 சதுர அடி பரப்பளவில் சூரிய மின்சக்தியுடன் கூடிய இவ்வீடுகள் கட்டும் திட்டத்தைப் போல் நாட்டிலேயே வேறேங்கும் செயல்படுத்தப்படவில்லை. இத்திட்டமானது பயனாளிகள் நலன் கருதியே உள்ளதாலும் மற்றும் இதர குடியிருப்புத் திட்டங்களைக் காட்டிலும் அலகுத் தொகை கூடுதலாக உள்ளதாலும் தமிழக மக்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றிருப்பதால் மேலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ஊரகப் பகுதியில் உள்ள ஏழை மக்களின் நலனுக்காக 2016-17 முதல் அடுத்த ஐந்தாண்டுகளில் வருடத்திற்கு 20,000 வீடுகள் வீதம் 1 இலட்சம் வீடுகள் ரூ.2.10 இலட்சம் அலகுத் தொகையில் (ரூ.180 இலட்சம் கட்டுமானத்திற்கும், ரூ.30,000 சூரிய மின்சக்தி விளக்கு அமைப்பதற்கும்) கட்டப்படும்.

2016-17 ஆம் ஆண்டில் ரூ.420 கோடி மதிப்பீட்டில் 20,000 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. 2016-17 ஆம் ஆண்டு முதல் கட்டுமான பணிகளுடன் சூரிய மின்சக்தி விளக்குகள் பொருத்தும் பணிகளும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையாலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2017-18ஆம் ஆண்டில் 20,000 வீடுகள் கட்டப்பட உள்ளன.

2. இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்:

(i) ஊரகப் பகுதிகளில் வாழும் ஏழை மக்கள் அனைவரும் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியானவர்கள்.
(ii) சூரிய ஒளி முகப்புப் பலகை மற்றும் விளக்குகள் வழங்குதல், நிறுவுதல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றை நெறிமுறைபடுத்தப்பட்ட நடைமுறைகளின்படி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைகளின் திட்ட இயக்குநர்களால் செயல்படுத்தப்படும். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலருடன் கலந்தாலோசித்து சூரிய மின்சக்தி விளக்குகள் பொருத்துவதை செயல்படுத்துவதற்கு தேவையான அறிவுரைகளை வழங்குவதற்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் அவர்கள் தகுதியானவர் ஆவார்.
(iii) ஒவ்வொரு வீடும் 300 சதுர அடி பரப்பளவில், ரூ. 2.10 லட்சம் அலகுத் தொகையில் மாநில அரசின் முழுமையான நிதி உதவியுடன் கட்டப்படுகிறது.
(iv) ஒவ்வொரு வீடும், வசிக்கும் அறை, படுக்கை அறை, சமையல் அறை, கழிப்பறை மற்றும் தாழ்வாரம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இவை தவிர மழைநீர் சேகரிப்பு அமைப்பும் கொண்டிருக்கும். 
(v) ஒவ்வொரு வீட்டிலும் சூரிய ஒளி சக்தியில் எரியும் 5 ஒளி உமிழும் இருமுனைய (LED) விளக்குகள் அமைக்கப்படும். இவை படுக்கை அறை, வசிக்கும் அறை, சமையல் அறை, கழிப்பறை மற்றும் தாழ்வாரம் ஆகிய பகுதிகளில் தலா ஒரு விளக்கு வீதம் அமைக்கப்படும். பயனாளிகளின் விருப்பத்தின்படி தமிழ்நாடு மின்சார வாரியத்திலிருந்து மீட்டர் அளவீடுடன் கூடிய மின் இணைப்பு பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
(vi) ஒரு வீட்டிற்கான அலகுத் தொகையான ரூ. 2.10 லட்சத்தில், ரூ.180 லட்சம் கட்டுமானத்திற்கு ஒதுக்கப்பட்டு, சூரிய சக்தி விளக்குகள் அமைப்பதற்கான நிதி தேவைக்கேற்ப ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் அவர்களால் விடுவிக்கப்படும். 
(vii) வீடுகள் கட்டும் பணி மற்றும் சூரிய சக்தி விளக்குகள் அமைக்கும் பணி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையால் செயல்படுத்தப்படும். 
(viii) பசுமை வீடுகள், பயனாளிகளின் குடியிருப்பு அமைந்துள்ள இடம் அல்லது கிராம ஊராட்சியின் பிற பகுதியில் அமைந்துள்ள பயனாளிக்கு சொந்தமான இடங்களில் கட்டப்பட வேண்டும். மேலும், இத்திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்படுவதற்கென நில எடுப்புகள் ஏதும் செய்யப்படமாட்டாது. வீட்டுமனைப்பட்டா உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானவர்கள் ஆவர்.

3. மாதிரி வடிவமைப்பு மற்றும் அலகுத்தொகை:

(i) இத்திட்டத்திற்கென ஏற்கனவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட மாதிரி வடிவமைப்பு தற்போதும் தொடரப்படும். ஒவ்வொரு பசுமை வீடும் அனுமதிக்கப்பட்ட பரப்பளவான 300 சதுர அடிக்கு மிகாமல் கட்டப்பட வேண்டும்.
(ii) மேலும், ஒரே மாதிரியான வடிவமைப்பில் கட்டவேண்டும் என்பதால் வடிவமைப்பில் மாறுதல்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும், அனுமதிக்கப்பட்ட வீட்டின் பரப்பளவான 300 சதுர அடியில் வீட்டின் வடிவமைப்பில் மாறுதல் செய்யாமல் சமையலறை மற்றும் படுக்கை அறையின் திசையினை இட அமைவிற்கேற்ப மாற்றி அமைக்க அனுமதிக்கப்படும். 
(iii) இத்திட்டத்திற்கான சின்னம் செராமிக் ஒடுகளில் வடிவமைக்கப்பட்டு அனைத்து வீடுகளிலும் அனைவரும் பார்க்கும் வகையில் பதிக்கப்பட வேண்டும். 
(iv) இத்திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட அனைத்து வீடுகளிலும், திட்டத்தின் பெயர், பயனாளியின் பெயர் மற்றும் வீடு கட்டப்பட்ட ஆண்டு ஆகிய விபரங்கள் தெளிவாக தெரியும் வகையில் வண்ணத்தினால் எழுதப்படவேண்டும்.

4. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துடன் ஒருங்கிணைப்பு
(i) ரூ.2.10 இலட்சம் அலகுத் தொகையுடன் கூடுதலாக மற்ற திட்டங்களுடன் ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் ஒவ்வொரு பயனாளிக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துடன் ஒருங்கிணைந்து தினக்கூலி அடிப்படையில் 90 மனித நாட்களுக்கான ஊதியம் அளிக்கப்பட வேண்டும்.
(ii) மேலும் பயனாளிக்கு தனி நபர் இல்லக் கழிப்பறை கட்ட ரூ.12,000/- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துடன் ஒருங்கிணைந்து வழங்கப்பட வேண்டும்.

5. பயனாளிகளின் தகுதிகள்:
பயனாளிகள் கீழ்க்கண்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.
i) சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சியில் வசிப்பவராக இருக்க வேண்டும். 
ii) 300 சதுர அடிக்கு குறையாத வீட்டு மனை சொந்தமாக இருக்க வேண்டும்.
iii) குடும்ப தலைவரின் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர் எவரேனும் ஒருவர் பெயரிலோ வில்லங்கமற்ற வீட்டு மனைப்பட்டா இருக்க வேண்டும்.
iv) தொடர்புடைய கிராம ஊராட்சியில் அல்லது வேறு எங்கும் கான்கிரீட் கூரை போடப்பட்ட சொந்த வீடு எதுவும் இருக்கக் கூடாது.
v). அரசின் இதர வீடு கட்டும் திட்டங்களில் பயன் பெற்றவராக இருக்கக் கூடாது.

6. பயனாளிகளை தெரிவு செய்யும் முறை:

i) ஒவ்வொரு கிராம ஊராட்சியில் வாழும் ஏழை மக்களிலிருந்து பயனாளிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவை கிராம சபையில் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். அவ்வாறு பயனாளிகள் தெரிவு செய்யப்படும் போது தமிழ்நாடு வாழ்வாதார திட்டம் மற்றும் புது வாழ்வு திட்டத்தின் கீழ் நலிவுற்றவர்கள் என்று தெரிவு செய்யப்பட்ட பட்டியலில் (PIP) இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். 
ii) ஒராண்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்தம் 20,000 வீடுகளில் 29 விழுக்காடு அதாவது 5,800 வீடுகள், ஆதி திராவிடர்களுக்கும், 1 விழுக்காடு அதாவது 200 வீடுகள், பழங்குடியினர்களுக்கும், மீதமுள்ள 70 விழுக்காடு அதாவது 14,000 வீடுகள் இதர இனங்களில் (ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாதோர்) வழங்கப்படவேண்டும்.
iii) மாவட்ட வாரியான ஒதுக்கீட்டில் 3 விழுக்காடு மாற்று திறனாளிகளுக்கு பிரத்தியேகமாக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். 
iv) பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்படும் போது, மாற்றுத் திறனாளிகள், விதவைகள், ஆதரவற்ற மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், பெண்களைத் தலைவராகக் கொண்ட குடும்பங்கள், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் ஒய்வு பெற்ற முன்னாள் துணை இராணுவ படையினர், ஊரகப் பகுதிகளில் வாழும் ஊட்டச்சத்து குறைவினால் பாதிக்கப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத் துறையால் (CDS) அடையாளம் காணப்பட்ட குழந்தைகளை கொண்ட குடும்பங்கள், திருநங்கைகள், துணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) அவர்களால் சான்றிதழ் வழங்கப்பட்ட ஹெச்ஐவி/எய்ட்ஸ்/காசநோய் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், தீ விபத்து, வெள்ளம் போன்ற இதர பிற இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். மேலும், மனநலம் குன்றியோர் உள்ள குடும்பங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.

7. வீடுகள் ஒதுக்கீடு செய்தல்:

(i) மாநில அளவில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் இத்திட்டத்தின் கீழ் ஒவ்வோர் ஆண்டும் கட்டப்படவுள்ள வீடுகளின் எண்ணிக்கையை மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்வார்.
(ii) மாவட்ட ஆட்சியர் மேலே கூறியவாறு பயனாளிகளை தெரிவு செய்யும் முறையை கடைபிடித்து அதன் அடிப்படையில் மாவட்ட அளவில் ஊராட்சிகளுக்கான வீடுகளை ஒதுக்கீடு செய்ய முடிவெடுக்க வேண்டும்.
(iii)  தகுதியான பயனாளிகள் பட்டியல் தெரிவு செய்யப்படுவதற்கு கிராம அளவிலான குழு அமைக்கப்பட வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி), மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம ஊராட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய குழு, கிராம ஊராட்சியில் வசிக்கும் ஏழை மக்களிலிருந்து வழிகாட்டி நெறிமுறைகளின் படி தெரிவு செய்து, அவ்வாறு குழுவால் இறுதி செய்யப்பட்ட பயனாளிகளின் பட்டியலை கிராம சபைக் கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெறப்பட வேண்டும். ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கிராம அளவிலான குழுவில் சிறப்பு அழைப்பாளராக இருப்பார்.
(iv) கிராம சபையில் ஒப்புதல் பெறப்பட்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு முன்னுரிமைப்பிரிவின் அடிப்படையில் வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி), வீடுகள் ஒதுக்கீடு செய்வார்.

8. திட்ட செயலாக்கம்:

(i) ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்திற்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் திட்டத்திற்கான நிர்வாக அனுமதி மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட வேண்டும். 
(ii) திட்ட செயலாக்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
(iii) வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) தகுதியுள்ள பயனாளிகளுக்கு வேலை உத்திரவு வழங்குவதற்கு, நிலத்தின் சொந்த உரிமை மற்றும் கட்டுமானப் பணிக்கு தேவைப்படும் இடத்தின் அளவு ஆகியவற்றை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்களால் பார்வையிடப்பட்டு உறுதி செய்யப்பட வேண்டும். 
(iv) இடத்தை குறியீடு செய்தல்: சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சியின் ஒன்றிய மேற்பார்வையாளர்/ஒன்றிய பொறியாளர் அரசினால் ஒப்புதலளிக்கப்பட்ட வடிவமைப்புக்கேற்றவாறு வேலையைத் துவக்குவதற்காக நிலத்தில் குறியீடு செய்வார்.
(v) வட்டாரப் பொறியாளர்கள் / ஒன்றிய பொறியாளர்கள் வீடுகளைக் கட்டுவதற்கும் மற்றும் இதர தொழில்நுட்ப வேலைகளுக்கும் அரசாணை (நிலை) எண்.54, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (ப.ரா.1) துறை நாள். 22.05.2014-ன்படி பொறுப்பாவார்கள். ஒன்றிய மேற்பார்வையாளர்கள் நிலத்தை குறியீடு செய்வதற்கும், மாதிரி வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப குறியீடுகளின்படி வீடுகள் கட்டும் பணிகளை மேற்பார்வையிடவும் உதவியாக இருப்பார்கள்.
(vi) உதவி செயற்பொறியாளர்கள் (ஊ.வ) அவர்களால் மேல் அளவீடு செய்யப்படவேண்டும். 
(vii) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்கள், செயற்பொறியாளர்கள்(ஊ.வ) மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் (ஊ.வ) வீடுகளின் பணி முன்னேற்றத்தை அடிக்கடி ஆய்வு செய்து வீடுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாதிரி வடிவமைப்பிலும் அல்லது இத்திட்டத்திற்கான செயல்பாடு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள்/அறிவுரைகளிலிலிருந்து மாறுபாடாக இல்லை என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

9. கட்டுமானப் பொருட்கள் விநியோகம்:

(1) சிமெண்ட்: மாநில அளவில், கிராம ஊராட்சிகளுக்குத் தேவையான சிமெண்ட் தங்குதடையின்றி விநியோகம் செய்ய தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிமெண்ட் வழங்குதலை டான்சம் (M/s.TANCEM) மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டு மாவட்ட அளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையால் அதற்கான தொகை வழங்கப்பட்டு அத்தொகை திட்ட நிதியில் ஈடுசெய்யப்படும். மேலும் அரசாணை (நிலை) எண். 188 தொழிற் (MID2) துறை, நாள் 11.12.2014-ன்படி அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு குடியிருப்புத் திட்டங்களுக்கு பயன்பெறும் வகையில் “அம்மா சிமெண்ட் வழங்கும் திட்டத்தின் கீழ்" பயனாளிகளுக்கு அம்மா சிமெண்ட் விநியோகம் செய்யப்படும். ஒவ்வொரு பயனாளிக்கும் 14 சிமெண்ட் மூட்டைகள் வழங்கப்பட வேண்டும்.
(ii) இரும்புக் கம்பி: இதேபோன்று, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைகளின் திட்ட இயக்குநர்கள் அவர்களது மாவட்டங்களின் தேவைக்கேற்ப இரும்புக் கம்பிகளை கொள்முதல் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அதற்கான தொகையை மாவட்ட அளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையால் வழங்கப்பட்டு அத்தொகை திட்ட நிதியில் நேர்செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 300 கிலோ கிராம் இரும்பு கம்பி ஒவ்வொரு பயனாளிக்கும் வழங்கப்பட வேண்டும்.
(iii) கதவுகள் மற்றும் ஜன்னல்கள் பயனாளிகள்: கதவுகள் மற்றும் ஜன்னல்களைத் தாங்களே ஏற்பாடு செய்துகொள்ளலாம். பயனாளிகளால் கதவுகள் மற்றும் ஜன்னல்களை ஏற்பாடு செய்ய இயலாத நிலையில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் கதவுகள் மற்றும் ஜன்னல்களை ஏற்பாடு செய்து வழங்கிவிட்டு அதற்கான தொகையினை திட்ட நிதியிலிருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம்.
ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மேற்காணும் கொள்முதல்களுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்கள் தங்கள் மாவட்டங்களுக்குத் தேவையான மொத்த அளவினை கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். மேலும் தடங்களின்றி கட்டுமானப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு, குறித்த நேரத்திற்குள் வீடுகள் கட்டி முடிப்பதனை உறுதி செய்ய வேண்டும்.

10. வீடுகளுக்கு சூரிய சக்தி விளக்குகள் (SPV) அமைத்தல்:

இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிலும் சூரிய மின் சக்தி விளக்குகள் பொருத்தப்படும். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தங்களுடைய மாவட்டத்தில் சூரிய மின்சக்தி விளக்குகள் பொருத்தும் பணியினை செயல்படுத்துவதற்கு பொறுப்பாவர்.
பசுமை வீடுகளுக்கான சூரிய சக்தி விளக்குகள் அமைக்கவும், செயல்படுத்தவும் மற்றும் பராமரிக்கவும் கீழே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

10.1 வீடுகளுக்கு சூரிய சக்தி விளக்குகள் (SPV)அமைப்பதற்கான வழிமுறைகள்

ஒளி உமிழும் இரு முனைய (LED) சூரிய சக்தி விளக்குகள் 2017-18 ஆம் ஆண்டில் 20,000 வீடுகளுக்கு கீழ்க்கண்ட வடிவமைப்பின்படி அமைக்கப்படும்:-
(i) தலா 5 ஒளி உமிழும் இரு முனைய விளக்குகள் (LED) ஒரு நாளைக்கு 5 மணி நேரம் எரியும் வகையில் அமைக்கப்படும். (7 வாட் திறன் கொண்ட இரண்டு ஒளி உமிழும் இரு முனைய விளக்குகள் (LED) வசிக்கும் அறை மற்றும் தாழ்வாரம் ஆகியவற்றிலும் அமைக்கப்படும். 5 வாட் திறன் கொண்ட தலா இரண்டு ஒளி உமிழும் இரு முனைய விளக்குகள் (LED) சமையல் அறை மற்றும் படுக்கை அறையிலும் அமைக்கப்படும் மற்றும் ஒரு 3 வாட் திறன் கொண்ட இருமுனை விளக்கு (LED) ஒன்று கழிவறையில்அமைக்கப்படும்).
(ii) 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் மற்றும் 2000-ம் ஆண்டு விதிகள் சட்டத்தின் படி, மாவட்ட அளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரால் இதற்குரிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும்.
(iii) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் வீடுகளுக்கான சூரிய சக்தி ஒளி உமிழும் விளக்குகளுக்கான தொகையினை பெற்று திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு விடுவிப்பார்.
(iv) இத்திட்டத்தினை செயல்படுத்தும்போது பெறப்படும் வட்டி மற்றும் இதர சேமிப்புத்தொகை ஏதேனும் இருப்பின் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதனை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்திற்கு செலுத்த வேண்டும். ஊரக வளர்ச்சி இயக்குநர் அவர்களால் மேற்படி தொகை தமிழ்நாடு அரசுக் கணக்கில் செலுத்தப்பட வேண்டும்.

10.2 வீடுகளில் பொருத்தப்படும் ஒளி உமிழும் இருமுனைய (LED) விளக்குகளின் தொழில்நுட்ப குறிப்புகள்
 வீடுகளில் பொருத்தப்படும் ஒளி உமிழும் இருமுனைய (LED) விளக்குகளின் தொழில்நுட்ப குறிப்புகள் கீழ்க்கண்ட தொழில்நுட்ப குறிப்புகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

10.3 ஒப்பந்த அழைப்பு:
வீடுகளில் பொருத்தப்படும் ஒளி உமிழும் இருமுனைய (LED) விளக்குகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த புள்ளி அழைப்பினை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அவர்கள் மேற்கொள்வார். வீடுகளில் பொருத்தப்படும் ஒளி உமிழும் இருமுனைய (LED) விளக்குகளை கொள்முதல் செய்வதற்கான மாதிரி ஒப்பந்த படிவங்கள்/ஆவணங்கள் ஊரக வளர்ச்சி இயக்குநர் அவர்களால் தயார் செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் தெரிவிக்கப்படும்.

10.4 ஒப்பந்தத்தினை இறுதி செய்தல்:
ஒப்பந்தத்தினை இறுதி செய்யவும், ஒளி உமிழும் இருமுனைய (LED) விளக்குகள் பொருத்தப்படுவதை மேற்பார்வையிடவும் கீழ்க்கண்ட அலுவலர்களைக் கொண்டு மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட வேண்டும்.

1) மாவட்ட ஆட்சியர் / பெருந்தலைவர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை :தலைவர்
2) திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை                    : உபதலைவர்
3) செயற்பொறியாளர் (ஊ.வ)                   : உறுப்பினர்
4) கண்காணிப்புப் பொறியாளர் (த.மி.உ.ப.கழகம்)                         :  உறுப்பினர்
அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட 
செயற்பொறியாளர் (த.மி.உ.ப.கழகம்)
5) உதவி திட்ட அலுவலர் (வீட்டு வசதி மற்றும்  :  செயல் உறுப்பினர் சுகாதாரம்)

மாவட்ட அளவிலான குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்ததாரருக்கு ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான வேலை உத்தரவு மாவட்ட ஆட்சியர்/பெருந்தலைவர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அவர்களால் வழங்கப்படும்.

10.5 பணிகளை செயல்படுத்துதல்:
வீடுகளில் சூரிய மின்சக்தி விளக்குகள் பொருத்தப்படும் போது தினசரி செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவும், கண்காணிக்கவும் ஒரு உதவி திட்ட அலுவலர் (வீட்டு வசதி மற்றும் சுகாதாரம்) மற்றும் ஒரு இளநிலை உதவியாளர்/கணினி இயக்குநர் ஆகியோரை பொறுப்பாக்கி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அவர்களால் உத்தரவிடப்பட வேண்டும். -

10.6 உத்தரவாதம்
வீடுகளில் பொருத்தப்படும் ஒளி உமிழும் இருமுனைய (LED) விளக்குகள் மற்றும் அமைப்புகள் நிறுவப்பட்டு மற்றும் நடைமுறைபடுத்தப்பட்டவுடன் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். 5 ஆண்டுகளுக்குள் குறைகள் ஏற்படின் சம்மந்தப்பட்ட நிறுவனம் / ஒப்பந்ததாரரால் குறைகள் நிவர்த்தி செய்து தரப்பட வேண்டும்.

10.7 அமைப்பினை பராமரித்தல்:
5 ஆண்டுகள் உத்தரவாதம் என்பது சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரர் அவர்களால் வழங்கப்படும் உபகரணங்களுக்கான முழுமையான வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தத்தினையும் (CAMC) உள்ளடக்கியதாகும்.

ஒப்பந்தப்புள்ளியின் ஒரு கூறாக, ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள பயனாளிகள் மற்றும் 4 சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு அமைப்புகளை ஒழுங்காக பராமரிப்பு செய்யும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களால் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

மாவட்ட அளவில் / வட்டார அளவில் சேவை மையங்கள் விநியோகஸ்தர்கள்களால் நிறுவப்பட வேண்டும். தயாரிப்பாளர்கள் / விநியோகஸ்தர்களால் மாவட்ட அளவிலான அவசர உதவி (தொடர்பு) எண்கள் அடங்கிய விவரங்களை, அவசர உதவிக்கு அல்லது குறைகளை தெரிவிக்கும் பொருட்டு பயனாளிகளுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

10.8 தரக்கட்டுபாடு மற்றும் ஆய்வு
ஒளி உமிழும் இரு முனைய (LED) சூரிய மின்சக்தி விளக்குகள் (SPV)அமைப்பதற்கு உபயோகப்படுத்தப்படும் பொருட்களின் தரம் மற்றும் முடிக்கப்பட்ட வேலைகளின் தன்மை, அளவுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ள விவரக் குறியீட்டின்படி உள்ளதா என்பதை உறுதி செய்ய தகுதியான ஆலோசகர்/பொருத்தமான அலுவலர்களை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அவர்களால் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார். மேற்படி அலுவலர்/ஆலோசகர் ஒளி உமிழும் இரு முனைய (LED) சூரிய மின்சக்தி விளக்குகள் (SPV) பொருத்துவதை மேற்பார்வையிடவும், நடைமுறைப்படுத்தவும் மற்றும் பொருத்தப்பட்ட அமைப்பின் அளவுகள் நிர்ணயிக்கப்பட்ட விபரக் குறியீட்டின்படி உள்ளதா என்பது குறித்து விரிவான ஆய்வு குறிப்பு தயார் செய்ய வேண்டும்.

தர ஆய்வின் போது பொருத்தப்பட்ட விளக்குகளின் அமைப்பில் திருப்தியின்மை கண்டறியப்பட்டால் தொடர்புடைய ஒப்பந்ததாரர் குறிப்பிட்ட காலத்திற்குள் பழுதான பொருளை மாற்றித் தருவதையும் அல்லது சரியாக செய்யப்படாத வேலையை சரி செய்வதையும் செயல்படுத்திடும் நிறுவனத்தால் (திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) உறுதி செய்யப்பட வேண்டும். அனைத்து பணிகளுமே நிறைவாக இல்லையெனில் அவ்வினங்களில் பழுது நீக்கம் செய்தபின் நிறுவனத்திடமிருந்துஒப்பந்ததாரரிடமிருந்து பழுது நீக்கம் செய்யப்பட்டதென அறிக்கை பெற்ற பின்னர் அப்பணி மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். பழுது நீக்கம் செய்த பின் பணி திருப்திகரமாக முடிக்கப்பட்டுள்ளதென அறிக்கை வரப்பெற்றால் மட்டுமே நிறுவனங்களுக்கு நிதி விடுவிக்கப்பட வேண்டும். உபகரணங்கள் வழங்கப்படுவது, விளக்குகள் பொருத்துவது மற்றும் ஒளி உமிழும் இரு முனைய (LED) சூரிய மின்சக்தி விளக்குகள் (SPV)அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளை உதவி திட்ட அலுவலர் (வீட்டு வசதி) அவர்களால் கண்காணிக்கப்பட வேண்டும்.

ஒளி உமிழும் இரு முனைய (LED) சூரிய மின்சக்தி விளக்குகள் (SPV) பொருத்துவது குறித்து ஏதேனும் குறைகள் ஏற்படின் அதனை உடன் சரி செய்யும் பொருட்டு பயனாளி/ஊராட்சி/வட்டாரlமாவட்ட நிர்வாகத்தால் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அவர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

10.9 நிதி விடுவித்தல் மற்றும் அரசு மானியம் கோருதல்:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் இத்திட்டத்திற்கான நிதியை பெற்று திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு விடுவிப்பார். சூரிய மின்சக்தி விளக்குகள் பொருத்தும் பணியின் முன்னேற்றத்தின் அடிப்படையில் நிதி விடுவிக்கப்படும். பணிகள் திருப்திகரமாக முடிக்கப்பட்டதென தகுதிவாய்ந்த அலுவலரிடமிருந்து உரிய சான்றிதழ் வழங்கப்பட்டவுடன், இறுதித் தொகை வழங்கப்படும். திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அவர்களால் சூரிய மின்சக்தி விளக்குகள் பொருத்துவதற்கு தேவைப்படும் மானியத் தொகையினை மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்திடமிருந்து (MNRE) பெறுவதற்கான கருத்துருவை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமைக்கு(TEDA) அனுப்பி அதனை பெற்று தமிழ்நாடு அரசு தலைப்பில் மீள செலுத்தப்பட வேண்டும்.

10.10 பயிற்சிக்கான உபகரணங்கள்:
சூரிய மின்சக்தி விளக்குகளின் உபகரணங்களை பயன்படுத்துவது மற்றும் பராமரிப்பது தொடர்பான பயிற்சி கையேடுகள், சிற்றேடுகள், துண்டு பிரசுரங்கள் மற்றும் இதர பயிற்சி உபகரணங்கள் ஆகியவற்றினை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரால் தயாரித்து வெளியிடவேண்டும். மேலும், "செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை குறித்த கையேடுகளை தமிழில் தயார் செய்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரால் பயனாளிகள்/கிராம ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டும்.

(i) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரால் பயிற்சி முறைகள்/தொகுதி தயார் செய்யப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் தகுதி வாய்ந்த ஊராட்சி பிரதிநிதிகள் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அனைவரும் பயனாளிகளுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் பாலமாக செயல்படுவார்கள்.

10.11 மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் வசதி செய்தல்:

(i) சூரிய மின்சக்தி விளக்குகள் (SPV) அமைக்கப்பட உள்ள வீடுகளின் விவரங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளின் விவரங்கள் போன்றவற்றை திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையால் முன் கூட்டியே இறுதி செய்யப்பட வேண்டும்.
(ii) சூரிய மின் சக்தி விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தயாரிப்பாளர்கள் / விநியோகஸ்தர்கள் / ஒப்பந்ததாரர்கள் (AMC holders) பற்றிய முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் அடங்கிய விவரங்களை தேவையான நேரத்தில் எளிதில் தொடர்பு கொள்வதற்கு மாவட்ட அளவில், ஊராட்சி ஒன்றிய அளவில் மற்றும் ஊராட்சிகள் அளவில் வழிவகை செய்யப்பட வேண்டும்.

11. ஆவணப்படுத்துதல்:

பயனாளி தற்போது தான் வசிக்கும் வீட்டின் முன்பாக நின்று புகைப்படம் எடுக்கப்பட வேண்டும். இதே முறையில் வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட பின்னரும் புகைப்படம் எடுக்கப்பட வேண்டும். இறுதி பணப் பட்டுவாடா செய்யும் முன்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) இந்தப் பதிவினை ஆவணப்படுத்த வேண்டும். இத்திட்டத்தின் மொத்த நிதி ஒதுக்கீட்டில் 1 விழுக்காடு ஆவணப்படுத்துதல் மற்றும் செய்தி, கல்வி மற்றும் தொடர்பு (Information Education and Communication) நடவடிக்கைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 

12.கண்காணித்தல்:

மாவட்ட ஆட்சியர் இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளின் பணி முன்னேற்றம் மற்றும் ஒளி உமிழும் இரு முனைய (LED) சூரிய மின்சக்தி விளக்குகள் (SPV) நிறுவும் பணியின் முன்னேற்றம் ஆகியவற்றை வட்டார அலுவலர்கள் மற்றும் விளக்குகள் பொருத்தும் பணியினை மேற்கொள்ளும் அலுவலர்களை ஆய்வு செய்யவேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஆகியோர் மாவட்ட அளவில் இத்திட்டத்தை முறையாக செயல்படுத்துவதற்கு பொறுப்பாவர்.

13. நிதி விடுவிப்பு:

(1) பசுமை வீடுகள் திட்டத்திற்கான ஆண்டு நிதி ஒதுக்கீட்டிலிருந்து இரண்டு அரையாண்டு தவணைகளில் நிதி பெறுவதற்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு வீட்டிற்கு ரூ.1,80,000/- வீதம் மாவட்ட ஆட்சி தலைவர்/பெருந்தலைவர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அவர்களுக்கு நிதி விடுவிக்கப்படும். அதனை சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்(வஊ) க்கு மாவட்ட ஆட்சி தலைவர் பெருந்தலைவர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அவர்கள் விடுவிப்பார். (i) முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்திற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சித் தலைவர்/பெருந்தலைவர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை என்ற பெயரில் இரு தனி சேமிப்பு வங்கி கணக்கு தொடங்கப்பட வேண்டும். ஒன்று பிரத்தியேகமாக கட்டுமானப் பணிகளுக்கும் மற்றொன்று பசுமை வீடுகளுக்கான விளக்குகளுக்கும் கணக்குகள் தொடங்கப்பட வேண்டும். (i) வட்டார அளவில், முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்ட கணக்கு’ என்ற பெயரில் சிமெண்ட், இரும்புக் கம்பிகளுக்கான தொகை வழங்குவதற்கும் மற்றும் பயனாளிகளுக்கு தொகை வழங்குவதற்கும் ஒரு வங்கிக் கணக்கு துவக்கப்பட வேண்டும். பொருட்களுக்கான தொகை போக மீதமுள்ள தொகையினை பயனாளிகளுக்கு காசோலை/மின்னணு பரிவர்த்தனை (ECS) மூலமாக வழங்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் ரொக்கமாக தொகை வழங்கக் கூடாது. மேற்படி கணக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) அவர்களால் நடைமுறையிலுள்ள விதிகளின்படி தகுந்த முறையில் பராமரிக்கப்பட வேண்டும்.
(iv) சூரிய மின் சக்தி விளக்குகள் அமைக்கும் நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவர்/பெருந்தலைவர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அவர்களால் மாவட்ட அளவில் பணி முடிக்கப்பட்டதன் அடிப்படையில் தொகை விடுவிக்கப்படும்.

14. தேவையின் அடிப்படையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநருடன் கலந்தாலோசனை செய்து, மேற்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கூடுதல் தலைமை செயலாளருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.

தொடரும்……

Lr. C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com