பாகம்-6: சொத்தின் உண்மை தன்மை அறிவது எப்படி?

வீடு, மனை எஸ்டேட், வணிக சொத்துகள் வாங்கும் போது, என்னதான் விவரமாக இருந்தாலும் பெரும் பணம் செலவழித்து வாங்கும் சொத்தில் பிரச்சினை வந்துவிடுகிறது.
பாகம்-6: சொத்தின் உண்மை தன்மை அறிவது எப்படி?

வீடு, மனை எஸ்டேட், வணிக சொத்துகள் வாங்கும் போது, என்னதான் விவரமாக இருந்தாலும் பெரும் பணம் செலவழித்து வாங்கும் சொத்தில் பிரச்சினை வந்துவிடுகிறது.

ஆரோக்கியத்திற்கு எப்படி உடலை டாக்டரிடம் காண்பித்து அவர் சொல்லும் சோதனைகளை செய்து கொள்கிறோமோ அதே போல், சொத்து விவகாரங்களில் வழக்கறிஞரை அணுகி சட்ட ஆலோசனையும், சட்டக் கருத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும். இதை செலவென்று பார்த்தால், பின்னால் சொத்தும் இல்லாமல், பெரும் பணம் நீதிமன்றத்துக்கு செலவிட நேரிடும்.

அவ்வாறு வழக்கறிஞரை நாடும் முன் தேவையான ஆவணங்களை, விற்பவர்/முகவரிடம் பெற்று அவரை அணுகுதல் நேரத்தை மிச்சப்படுத்தும். இப்போது துறைவாரியாக தாயாரிக்க வேண்டிய ஆவணங்களப் பார்ப்போம்.

A) பதிவுத்துறை ஆவணங்கள்

  1. விற்பனை ஆவணம்/பிற ஆவணம் (சொத்தின் உரிமையை பெற்றவழி-செட்டில்மெண்ட் ஆவணம், கொடை ஆவணம், பாகப்பிரிவினை ஆவணம்) [Title Deed- Settlement Deed, Gift deed, Partition Deed]
  2. தாய் ஆவணம் (Mother Document)
  3. மூல ஆவணம் (Parent Document)
  4. ‘படி’ ஆவணங்கள் (Duplicate Copy if any)
  5. கூர்சீட்டு Coorchit (பஞ்சாயத்தார் முன்னிலையில் எழுதப்பட்ட பாகப்பிரிவினை)
  6. அதிகார ஆவணம் Power of Attorney 
  7. வில்லங்கச் சான்றிதழ் 30-தேவையான ஆண்டுகளுக்கு[Encumberance Certificate for 30 years to the necessity]

B) சொத்தை விற்பவர் மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய பின் வரும் ஆவணங்கள்

  1. குடும்ப அட்டை (Family Card )
  2. இறப்புச் சான்றிதழ்(Death Certificate)
  3. வாரிசுச் சான்றிதழ் (Legal heir Certificate)
  4. முதல்வரின் வாழும் சான்றிதழ் (Life Certificate of the Principal in GPA)
  5. சம்மந்தப்பட்ட நபர்களின் ஆதார் அட்டைகள் (Aadhar Cards)

C) வருவாய்த்துறை ஆவணங்கள்

  1. பட்டா (Patta)
  2. சிட்டா (Chitta)
  3. “அ” பதிவேட்டின் சாறு (“A” Register Extract)
  4. புல அளவு வரைபடம் (FMB)
  5. கிராம நிர்வாக அலுவலரின் தற்போதைய சான்று (VAO’s Certificate)

D) நில அளவைத்துறை ஆவணங்கள் (Survey and Land Records)

  1. 1908 ஆம் வருட “அ” பதிவேட்டின் சாறு (1908 year “A” Register Extract)
  2. நிரந்தர நில உடைமை பதிவேடு Permanent Land Records (PLR)
  3. நகர நில அளவை பதிவேடு or Town Survey Land Records (TSLR)

E) உள்ளாட்சி அமைப்பின் ஆவணங்கள் (Local Authority’s Documents)

  1. வீட்டுவரி/மனைவரி ரசீது (House/Plot Tax receipt)
  2. சொத்து ரசீது (Property Tax Receipt)
  3. தண்ணீர் ரசீது( Water tax Receipt)
  4. கழிவுநீர் ரசீது (Drainage Tax Receipt)

F) நகரமைப்புத் துறை ஆவணங்கள் (Planning Authority)

  1. உள்ளாட்சி அமைப்பின் மனை/மனைப்பிரிவு ஒப்புதழ் (Plan Permit)
  2. சென்னைப் பெருநகரப் பகுதிக்கான வளர்ச்சி குழும/நகர-ஊரமைப்புத்துறை அனுமதி 
  3. கட்டிட அனுமதி ஆணை (CMDA or DTCP Plan Permit)
  4. அனுமதிக்கப்பட்ட திட்ட வரைபடம் (Approved Plan Sketch)
  5. நிறைவுச் சான்றிதழ் (Completion Certificate)

பிற ஆவணங்கள்

  1. மின் பயனீட்டு கட்டண அட்டை (EB Card)
  2. மின் பயனீட்டாளர் ரசீது (EB receipt)

இத்தனை ஆவணங்களை ஆய்ந்தும், சொத்து வாங்குவதில் சிக்கல் வருவதுண்டு. தற்காலத்தில் நிறைய சொத்து நிபுணத்துவம் கொண்ட வழக்கறிஞர்கள் (Property Experts) உண்டு. அவர்களிடம் அனைத்து ஆவணங்களுடன் வழக்கறிஞர் ஆலோசனை மற்றும் சட்ட கருத்து (Legal Opinion) கேட்டு முடிவெடுத்தால் வாங்கிய சொத்தை நிம்மதியாக அனுபவிக்கலாம்.

தொடரும்……

C.P.சரவணன், வழக்கறிஞர் 
தொடர்புக்கு - 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com