பாகம்-11: அரசு அலுவலர்கள் வாடகைக்கு குடியிருக்க அரசு செய்துள்ள வசதிகள் என்னென்ன?

தமிழக அரசுத் துறையில் பணியாற்றும் அரசு அலுவலர்கள் வாடகைக்கு குடியிருக்க அரசு செய்திருக்கும் வசதிகள் மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
file photo
file photo

தமிழக அரசுத் துறையில் பணியாற்றும் அரசு அலுவலர்கள் வாடகைக்கு குடியிருக்க அரசு செய்திருக்கும் வசதிகள் மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

தமிழ்நாடு அரசு அலுவலர்கள் வாடகை குடியிருப்புத் திட்டம் சென்னை மாநகரத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் வாடகைக் குடியிருப்பு ஒதுக்கீடு பெறுவதற்கான விண்ணப்பங்கள் யாவும் தமிழக அரசு, வீட்டுவசதி  மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையிடமிருந்து பெற்று, பூர்த்தி  செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைத் தலைமை அலுவலர் மூலமாக அரசுக்கு அனுப்பப்பட வேண்டும்.

பூர்த்தி  செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, முதுநிலை வரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். இந்த முதுநிலைப் பட்டியல் வரிசைப்படி அரசு அலுவலர்களுக்கு அவர்களின் ஊதிய தகுதிக்கேற்ப அரசால் ஒதுக்கீடு செய்யப்படும். அரசாணை பெறப்பட்டவுடன் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் குடியிருப்புகளை ஒதுக்கீடுதாரர்களுக்கு ஒப்படைக்க உடனடி நடவடிக்கை எடுக்கும்.

சென்னை தவிர புறநகர் பகுதிகள்
புற நகரங்களில்  திட்டங்களுக்கு உரிய செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு ஒதுக்கீடு பெறுவதற்கான விண்ணப்பங்களை வழங்குவர். பூர்த்தி  செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, சம்மந்தப்பட்ட செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலரால், பதிவு செய்து அதனடிப்படையில் முதுநிலைப் பட்டியல் தயாரிக்கப்படும்.

இந்த முதுநிலைப் பட்டியல் வரிசைப்படி, அரசு ஊழியர்களின் ஊதிய தகுதிக்கேற்ப ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும். சில தகுதியுள்ள நேர்வுகளில் சுழற்சிமுறை அல்லாமல் அரசினால் ஒதுக்கீடு செய்யப்படும்.

நீதித் துறை பணியாளர்களுக்கான ஒதுக்கீடு

அரசாணை (நிலை) எண்.202, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, நாள் 23.12.2016-இன் படி, தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்புகள் ஒவ்வொரு  திட்டத்தின், ஒவ்வொரு பிரிவிலும், நீதித் துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு, 15 விழுக்காடு அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும்.

நீதித் துறை பணியாளர் அல்லாத அரசு அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் முறை 

அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு பின்வரும் சுழற்சி முறையில் அரசு அலுவலர்களுக்கு அளிக்கப்படுகிறது:-

மேற்குறிப்பிட்ட சுழற்சி முறையிலான ஒதுக்கீட்டில் 3 மற்றும் 6-வது சுழற்சியில் 9-வது காலி இடம் மாற்றுத் திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னை நகரத்தில் அரசு அலுவலர்கள் வாடகை குடியிருப்புகள் கீழ்க்காணும் இடங்களில் உள்ளன

தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டு கிராமம், டெய்லர்ஸ் சாலை கோபுரகட்டடம், அரசினர் தோட்டம், பீட்டர்ஸ் காலனி, லாயிட்ஸ் காலனி, ஆர்.ஏ.புரம், தாடண்டர் நகர், வெங்கடாபுரம், பட்டினம்பாக்கம், பி.வி.ஆர்.சாலை, ஏ.பி. பத்ரோ சாலை, கோடம்பாக்கம் புதூர், டிரஸ்ட்புரம், திருவான்மியூரில் சி.டி.ஒ. காலனி, அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம்,  திருமங்கலம், எம்.கே.பி. நகர், முகப்பேர் கிழக்கு, சாய  காலனி, செனாய் நகர், கீழ்ப்பாக்க தோட்ட காலனி மற்றும் அயனாவரம்.

சென்னை நகரிலுள்ள வாரியத்தின் வாடகை குடியிருப்புத் திட்டங்கள்

சென்னை நகரில் பட்டினம்பாக்கம், லாயிட்ஸ் காலனி, நந்தனம், சி.ஐ.டி நகர், ஆலிவர் சாலை, மந்தவெளிப்பாக்கம், காக்ஸ்கொயர், அண்ணா நகர், பெசன்ட்நகர், கங்கா காலனி ஆகிய இடங்களில் வாரிய வாடகை வீடுகள்/அடுக்குமாடி குடியிருப்புகள்/தனி நபர் குடியிருப்புகள் உள்ளன.

➢  30% வாரிய வாடகை குடியிருப்புகள் அரசின் விருப்புரிமை பங்கின் கீழ் அரசு ஊழியர்களுக்கென ஒதுக்கப்பட்டு, அரசால் ஒதுக்கீடு செய்யப்படுகிறது
➢  20 % வாரிய வாடகை குடியிருப்புகள் அரசின் விருப்புரிமை பங்கின்கீழ் பொது மக்களுக்கு அரசால் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
➢  1% வாரிய வாடகைக் குடியிருப்புகள் ஓய்வு பெற்ற மாநில அரசு ஊழியர்களுக்கென ஒதுக்கப்பட்டு அரசால் ஒதுக்கீடு செய்யப்படுகிறது
➢  மீதமுள்ள 49% குடியிருப்புகள் பொது மக்களுக்கு, முதுநிலைப் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.
பூர்த்தி  செய்யப்பட்ட ஒதுக்கீடு கோரும் விண்ணப்பங்கள் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

 வாடகை குடியிருப்புகள் ஒதுக்கீடுகளுக்கான நிபந்தனைகள்

➢  விண்ணப்பங்கள் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும்.
➢  விண்ணப்பதாரர் தன் பெயரிலோ, கணவன்/மனைவி பெயரிலோ அல்லது சிறு குழந்தைகள் பெயரிலோ ஒதுக்கீடு கோரும் நகரத்தில் சொந்தமாக வீடு இல்லாதவராக இருத்தல் வேண்டும்.

➢   அரசு ஊழியர் வாடகைக் குடியிருப்புத் திட்டத்திலோ அல்லது வாரிய வாடகைக் குடியிருப்புத் திட்டத்திலோ ஒதுக்கீடு பெற்று குடியிருந்து வருபவர் சொந்தமாக வீடு ஒதுக்கீடு பெற்றாலோ/வீடு கட்டிக்கொண்டாலோ உடனடியாக வாடகைக் குடியிருப்பை காலி செய்து வாரியம் வசம் ஒப்படைக்க வேண்டும்.

வாரிய கடைகள்
மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப் புள்ளி மற்றும் பொது ஏலம் மூலம், பொது மக்களுக்கு, வியாபாரம் நடத்த மாத வாடகை அடிப்படையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

அலுவலக வளாகங்கள் 
வாரியத்திற்கு சொந்தமான அலுவலக வளாகங்கள் யாவும் அரசு/அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு மட்டும் தினசரி நாளிதழில் விளம்பரம் செய்யப்பட்டு மாத வாடகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சமுதாயக் கூடங்கள்:

நிகழ்ச்சிகள் நடத்த தினசரி வாடகை அடிப்படையில் பொது மக்களுக்கு சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பராமரிப்பு பணிகள்

கீழ்க்காணும் பிரிவுகளில் வரும் அடுக்குமாடிக் குடியிருப்புகள்/வீடுகளின் பராமரிப்புப் பணிகளை வாரியம் ஏற்றுக்கொள்கிறது.

➢  தமிழ்நாடு அரசு ஊழியர்கள் வாடகைக் குடியிருப்புத் திட்டங்கள் (TNGSRHS)
➢  வாரிய வாடகைக் குடியிருப்புத் திட்டம்
➢  தவணை முறைத் திட்ட அடுக்குமாடி குடியிருப்பு/வீடுகள்
➢  எதிர்கால பராமரிப்பு

அரசு ஊழியர் வாடகைக் குடியிருப்புத் திட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் வாடகைக் குடியிருப்பிற்கான தொடர் பராமரிப்பு தேவைகளை அதற்காக அரசினால் ஒதுக்கப்படும் நிதியிலிருந்து செய்யப்படுகிறது. பெரிய அளவிலான பழுதுபார்ப்புகளை குறைகளின் தன்மைக்குத் தகுயதவாறு “சிறப்பு பழுது பார்த்தல்’’ கணக்கு தலைப்பில் அரசின் நிதி உதவி பெற்று செயல்படுத்தப்படும்.

வாரியத்தின் வாடகை குடியிருப்புகள்
வாரியத்தின் வாடகைக் குடியிருப்புகள் பராமரிப்பிற்கு, “வருடாந்திர பராமரிப்பு பணி’’ கணக்கு தலைப்பில் வாரிய நிதி ஒப்பளிப்பு பெற்று பராமரிப்பு செயல்படுத்தப்படும்.

அடுக்குமாடி குடியிருப்புகள்/வீடுகள் 

ஒதுக்கீடு செய்யப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள்/வீடுகளின் பராமரிப்பிற்கு, ஒதுக்கீடுதாரரர்களிடமிருந்தே பராமரிப்பு நிதி  வசூல் செய்யப்பட்டு, பராமரிப்பு செய்து கொடுக்கப்படுகிறது. இப்பராமரிப்பு, குடிபுக தயார் நிலையில் இருந்து, ஆறுமாதங்கள் அல்லது குடியிருப்பு/வீடு ஒதுக்கீடுதாரர்கள் நலச்சங்கத்திடம் ஒப்படைப்பு செய்யப்படும் நாள் இதில் எது முன்னதாக வரும் வரை செய்யப்படும். மேலும், பராமரிப்புப் பணி ஒதுக்கீடுதாரர்களிடமிருந்து பெறப்படும், பராமரிப்பு தொகைக்கு உட்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

எதிர்கால பராமரிப்பு
அனைத்து உள் கட்டமைப்பு பணிகளும் முடிக்கப்பட்ட திட்டப்பகுதிகள், எதிர்கால பராமரிப்பிற்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படும்.

வாரியம் வழங்கும் பல்வேறு பணிகளுக்கு வசூலிக்கப்படும் கட்டண விவரம்

அ) மனை/அடுக்குமாடி குடியிருப்பு/வீடு இவைகளுக்கு கிரயப்பத்திரம் வழங்குவதற்காக வசூலிக்கப்படும் ஆய்வுக் கட்டணங்களின் விவரம்.


ஆ) நில ஆர்ஜிதம் தொடர்பாக நிலத்தின் தடையின்மை சான்றிதழ் வழங்க ஒவ்வொரு புல எண்ணுக்கும் ரூ. 1000/-

இ) உள்ளாட்சி நிறுவனங்களிடமிருந்து திட்ட அனுமதி பெறுவதற்காக தடையில்லா சான்றிதழ் வழங்க கீழ்க்காணுமாறு கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது:-


ஈ) “ஏ” மற்றும் “பி” சான்றிதழ் வழங்க : கட்டணம் ஏதுமில்லை.

உ) வருமான வரி தொடர்பான சான்றிதழ் வழங்க : ரூ. 100/-

ஊ) உயிருடன் இருக்கும் போது வாரிசுதாரருக்கு பெயர் மாற்றம் சான்றிதழ் வழங்க:


எ) ஒதுக்கீடுதாரர் இறந்தபின் வாரிசுதாரர் பெயருக்கு பெயர் மாற்றம் செய்ய ரூ. 1,000/-

ஏ) கட்டுமான பொருட்களை சோதனை செய்ய:


ஐ) ஒதுக்கீடுதாரர் மீதம் செலுத்த வேண்டிய தொகைக்கான கணக்கீட்டுத் தாளுக்கான கட்டணம் ரூ.25/-

ஒ) இரத்து செய்யப்பட்ட மனைகள் / அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு இரத்து நீக்கம் தொடர்பாக பெறப்படும் கட்டணம் (Revocation fee)

ஓ) ஒதுக்கீடு செய்யப்பட்ட மனை/வீடு/குடியிருப்பு மாறுதல் செய்வதற்கான கட்டணம் (Fees for change of allotment)

குறிப்பு: மேற்கண்ட கட்டணங்கள் மாற்றத்திற்குட்பட்டது.

தொடரும்…
C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com