பாகம்-13: DTCP எனப்படும் நகர் ஊரமைப்பு இயக்ககம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

மேற்கண்ட சட்டத்தின்படி மண்டலத்  திட்டங்கள் தயாரிக்கவும் வழிவகை செய்கிறது.
பாகம்-13: DTCP எனப்படும் நகர் ஊரமைப்பு இயக்ககம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

 DTCP - நகர் ஊரமைப்பு இயக்ககம் (Directorate of Town and Country Planning) 

நகர் ஊரமைப்பு துறையின் திட்ட குழுமங்கள், நகர் ஊரமைப்பு சட்டம், 1971-இன்கீழ், முழுமைத்  திட்டம், புதுநகர் வளர்ச்சித்  திட்டம் மற்றும் விரிவு அபிவிருத்தித்  திட்டங்கள் ஆகியவற்றை தயாரிக்கவும் மற்றும் அதனை  திட்டப் பகுதியில் அமல்படுத்துவதற்கும் வழிவகை உள்ளது.

மேற்கண்ட சட்டத்தின்படி மண்டலத்  திட்டங்கள் தயாரிக்கவும் வழிவகை செய்கிறது. உள்ளூர் திட்டக் குழுமங்களால் முழுமைத்  திட்டம், புதுநகர் வளர்ச்சித்  திட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதல் பெறப்படுகிறது. முழுமைத் திட்டத்தின் நில உபயோக மாற்றம் உத்தேசம் இத்துறையால் பெறப்பட்டு அரசுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. விரிவு அபிவிருத்தி திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதுடன், அதில் நில உபயோக மாற்றத்திற்கான அனுமதியும் நகர் ஊரமைப்பு இயக்குநரால் அளிக்கப்படுகிறது. 

மனைப்பிரிவு மற்றும் கட்டட உத்தேசங்களுக்கு தொழில்நுட்ப அனுமதி/ திட்ட அனுமதி வழங்கப்படுகிறது.

கீழ்க்காணும் மூன்று விதமான விண்ணப்பங்களுக்கு இத்துறையால் ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

1) மனைப்பிரிவு தொடர்பான தொழில்நுட்ப ஒப்புதலுக்கான விண்ணப்பப் படிவம்.
2) நகர் ஊரமைப்பு சதிட்டம், 1971 பிரிவு 49-இன்கீழ் திட்ட அனுமதிக்கான விண்ணப்ப படிவம்.
3) முழுமைத் திட்டத்தில் நில உபயோக மாற்றத்திற்கான விண்ணப்பப் படிவம்.

மனைப்பிரிவு ஒப்புதலுக்கான நடைமுறைகள் 

விண்ணப்பதாரர் சரிபார்க்கும் பட்டியலில் கண்டுள்ள அனைத்து  ஆவணங்களுடன் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். ஆவணங்களின் பரிசீலணைக்குப் பின் சாலைகள் மற்றும் பூங்காக்கள் மற்றும் விளையாடுமிடங்கள் போன்ற  திறந்த வெளியிடங்கள் கூடிய சாலை வடிவமைப்பு வரைபடம் மனுதாரருக்கு வழங்கப்பட்டு, உத்தேச சாலை அமைக்கப்பட்டு சாலை மற்றும் திறந்தவெளியிடம் உரிய உள்ளாட்சியிடம் தானப் பத்திரம் மூலமாக ஒப்படைக்க வேண்டும்.

உள்ளாட்சியிடமிருந்து உரிய சான்று பெறப்பட்டதும், தொழில்நுட்ப ஒப்புதல்/ திட்ட அனுமதி மனை ஒன்றிற்கு நன்னிலை வரியாக ரூ.300/- வீதம் அரசு கணக்கில் செலுத்திய பின் மனைப்பிரிவிற்கான தொழில்நுட்ப ஒப்புதல்/திட்ட அனுமதி ஒப்புதல் வழங்கப்படுகிறது.

மனைப்பிரிவு தொழில்நுட்ப அனுமதி
 
மனைப்பிரிவு விண்ணப்பங்களை நகர் ஊரமைப்பு இயக்குநர் அவர்களின் அனுமதி  கோரி பெறப்படுபவைகளில் கீழேகண்ட வரைபடங்களும் விபரங்களும் இணைத்து அனுப்பப்பட வேண்டும். 

1. ஆணையர்/செயல் அலுவலரின் முகப்புக் கடிதம்

2. பூர்த்தி செய்யப்பட்ட வினாப்படிவம்

3. மனுதாரர் விண்ணப்பம – 3 நகல்கள் (ஒரு நகலில் ரூ.2/- மதிப்புக்கான நீ மன்ற வில்லை ஒட்டப்பட்டிருக்க வேண்டும்)

4. நில அளவு வரைபட (எப்.எம்.பி) நகல் (சான்றொப்பம் செய்திருத்தல் வேண்டும், (வரைபடங்களில் குறிக்கப்படும் அளவுகள் அனைத்தும் மீட்டரில் அளித்தல் வேண்டும்).

5. மனைப்பிரிவு கோரும் இடம் அனைத்தும் மனுதாரருக்குச்  சொந்தமானதென்பதை நிரூபணம் செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட ஆவணங்களின் நகல் ஒன்று இணைத்து அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.

6. சுற்றுச் சார்பு வரைபடம் (Topo sketch)

மனுதாரர் மனையின் ஒவ்வொரு பக்க எல்லையிலிருந்தும் அனைத்து முனைகளிலிருந்தும் 100 மீட்டர் சுற்றளவில் உள்ள நில உபயோகங்கள், மின்பாதை, சாலை, இரயில் பாதை, கட்டடம், ஆறு, ஏரி,குளம், மலை, இடுகாடு, சுடுகாடு, கல்லுடைக்கும் இடம், பாறை முதலியவற்றைக் காட்டும் சுற்றுச் சார்பு வரைபடம் 1 செ.மீட்டருக்கு 1600 மீட்டர் (1 அங்குலத்திற்கு 132 அடி) என்ற அளவில் இருத்தல் வேண்டும்.

வரைபடங்களில் குறிக்கப்படும் அளவுகள் அனைத்தும் மீட்டரில் அளித்தல் வேண்டும்.

ஒவ்வொரு வரைபடத்திலும் மனுதாரரும் மற்றும் உரிமம் பெற்ற அளவையரும் கையொப்பம் செய்திருத்தல் வேண்டும்.

7. நிலையில் உள்ள சாலைகள் (Existing roads) அமைப்பு, அகலம், பராமரிப்புத் துறை, தேசிய நெடுஞ்சாலையா,மாநில நெடுஞ்சாலையா, மேஜர் மாவட்ட சாலையா, இதர மாவட்ட சாலையா, நகராட்சி சாலையா, பேரூராட்சி சாலையா, ஊராட்சி ஒன்றிய சாலையா, ஊராட்சி சாலையா போன்ற விவரம் குறிக்கப்படல் வேண்டும்.

8. மின்பாதை (L.T/H.T) குறையத அழுத்தமா? உயர்யத மின் அழுத்தமா என்ற விபரம் உயர் மின் அழுத்தம் என்றால் அதன் மின் அழுத்தத்தின் அளவு மற்றும் கோபுர கம்பமா? தனிக்கம்பமா? என்ற விபரமும், மனையின் அனைத்து எல்லைகளுக்கும் மின்கம்பிகளுக்கும் இடையே உள்ள இடைவெளி, அளவு ஆகியவையும் குறிக்கப்படவேண்டும்.

9. மனைப்பிரிவு வரைபடம் (Layout plan) (அளவுகள் அனைத்தும் மீட்டரில் அளித்தல் வேண்டும்) மனைப்பிரிவு பரப்பளவு 5 ஏக்கருக்குக் குறைவாக இருந்தால் 1:400 மீட்டர் (1 அங்குலத்திற்கு 33 அடி) என்ற அளவிலும், மனைப்பிரிவ பரப்பளவு 5 ஏக்கருக்கு மேற்பட்டு 25 ஏக்கருக்குள் இருந்தால் 1:800 மீட்டர் (1அங்குலத்திற்கு 66 அடி) என்ற அளவிலும், மனைப்பிரிவு 25 ஏக்கருக்கு மேல் இருந்தல் 1:1600 மீட்டர்(1 அங்குலத் ற்கு 132 அடி) என்ற அளவிலும் இருத்தல் வேண்டும்.

மனுதாரரும் உரிமம் பெற்ற அளவையாளரும் கையொப்பமிட்டிருக்க வேண்டும்.

10. நகரமைப்பு அலுவலரின் நேராய்வு குறிப்புரை அல்லது செயல் அலுவலரின் நேராய்வு குறிப்புரை.

11. தாசில்தாரரால் வழங்கப்படவேண்டிய சான்றிதழ்கள்:

அ. மனுதாரருக்கு நில உரிமம் சம்பந்தமான சான்றிதழ்

ஆ. நிலச்சீர்திருத்தச் சட்டம் 1961-ன்படி பாதிப்பு உள்ளதா என்கிற சான்றிதழ்

இ. நகர்புற நில உச்ச வரம்பு சட்டம் 1978-ன்படி பாதிப்பு உள்ளதா என்கிற சான்றிதழ்

ஈ. நில ஆர்ஜிதம் சட்டம் 1984-ன் படி நில ஆர்ஜிதம் ஏதும் உள்ளதா என்பதற்கான சான்றிதழ்

உ. அரசு புறம்போக்கு நிலப்பகுதியில் மனுதாரர் இடம் அமைந்துள்ளதா என்பதற்கான சான்றிதழ்.

12. ஆணையர் / செயல் அலுவலரால் வழங்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்:-

  • அ) பொது நிறுவன (Public body) நிலப்பகுதி யில் மனுதாரர் இடம் அமைகின்றதா என்பதற்கான சான்றிதழ்
  • ஆ) அரசுச்சார்பு நிறுவன (Quasi Government)) நிலப் பகுதியில் மனுதாரர் இடம் அமைகின்றதா என்பதற்கான சான்றிதழ்
  • இ) தடை (BAN) செய்யப்பட்ட பகுதியில் மனுதாரர் இடம் அமைகின்றதா என்பதற்கான சான்றிதழ்.
  • ஈ) மனைப்பிரிவு அமையும் இடம் கல் உடைக்கும் (Quary)) பகுதி யை மற்றும் மலைப்பகுதி யை ஒட்டி அமைகின்றதா என்பதற்கான சான்றிதழ்.

13. விரிவு அபிவிருத்தி திட்டம்

விரிவு அபிவிருத்தித் திட்டப் பகுதியில் அமைந்தால்,திட்டத்தின்  தன்மையை அதாவது வரைவு நிலையா அல்லது அங்கீகாக்கப்பட்டதா என்ற விபரம்.
அ) திட்ட உபயோகத்திற்கு ஏற்ப அமைந்துள்ளதா? அல்லது மாற்றம் ஏதும்
தேவையா?  திட்ட உத்தேசங்களை அனுசரித்துள்ளதா? அவற்றுக்கு மாற்றம் ஏதும் தேவைப்படுகின்றதா என்கிற விவரங்கள் அனுப்பப்படல் வேண்டும்.
ஆ) மாற்றம் தேவையெனில், வரைபடம்,  திட்டச்சுருக்க வரைபடம் மற்றும் சுற்றுச் சார்பு வரைபடம், உள்ளூர் திட்டக் குழுமத் தீர்மானம் முதலியன இணைத்து அனுப்பப்படல் வேண்டும்.

14. முழுமைத் திட்டம்

முழுமைத் திட்டப் பகுதியில் அமைந்தால் முழுமைத் திட்டத்தின் தற்போதைய நிலை அதாவது வரைவு நிலையா, இணக்கம் அளிக்கப்பட்டதா அல்லது அங்கீகரிக்கப்பட்டதா என்ற விபரம். நில ஒதுக்கீட்டிற்கு ஏற்ப உள்ளதா? மாற்றம் தேவையா? என்ற விபரம்.

15. குடியிருப்பு பகுதி  தொழிற்பகுதி  (Public Health Act)

பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் குடியிருப்புப் பகுதியாக அல்லது தொழிற்பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதியில் அமைகிறதா என்ற விபரம் குறிக்கப்பட வேண்டும். தொழிற்பகுதி  எனில் முழுமைத் திட்டம் அல்லது விரிவு அபிவிருத்தித் திட்ட ஒதுக்கீடா அல்லது அரசுஅறிவிப்பு செய்த தொழிற்ப் பகுதியாக என்ற விபரம் குறிக்கப்பட வேண்டும். நிலப்பயன் உபயோக மாற்றம் என்றால் உள்ளாட்சித் தீர்மானம்/உள்ளூர் திட்டக் குழுமத் தீர்மானம் இணைக்கப்பட வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை அடங்கிய விண்ணப்பத்தை, நகர் ஊரமைப்பு இயக்குநருக்கு முகவரியிட்டு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மூலமாக உள்ளூர் திட்டக் குழுமம் மூலமாக/புதுநகர் வளர்ச்சிக் குழுமம் முலமாக/நகர் ஊரமைப்பு இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

தேவையான விபரங்கள் அனைத்தும் பெறப்பட்டு விதிகளுக்கு உட்பட்டிருந்தால் மனைப்பிரிவுக்கு அனுமதி  கோரி பெறப்படும் விண்ணப்பங்கள் நகர் ஊரமைப்புத் துறையில் பரிசீலிக்கப்பட்டு, அனுமதி  அளிக்க இத்துறையால் ஏற்றுக் கொள்ளப்பட்டால், நகர் ஊரமைப்புத் துறையில் தொழில்நுட்ப ஒப்புதல் அளிப்பதற்காக அரசாணை எண்.138, வீட்டுவசதி  மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை நாள் 4.6.04-ன்படி ஒரு மனைக்கு ரூ.300/- வீதம் நன்னிலைத் தொகைச் செலுத்துமாறு மனுதாரருக்கு கடிதம் மூலம் விவரம் தெரிவிக்கப்படும். அக்கடிதம் கிடைக்கப் பெற்றதும், அக்கடிதத்தில் தெரிவித்தவாறு செலுத்தக் கோரும் தொகையை

கணக்குத் தலைப்பு [Head of Account]

0217 – Urban Development – 03 IDSMT – 800 – Other Receipts – AA AA. Director of Town Planning 1. Collection of Payments for Services rendered (0217-03-800-AA.0102). 

என்ற தலைப்பில், தமிழ்நாடு அரசிற்குட்பட்ட ஏதேனும் ஓர் கருவூலத்தில்/பாரத ஸ்டேட் வங்கியில் கட்டி அதன் அசல் செலுத்துச் சீட்டினை 807, அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரியில் உள்ள நகர் ஊரமைப்பு இயக்குநர்/ஆணையர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டும். அசல் செலுத்துச் சீட்டு கிடைக்கப் பெற்றதும் தொழில் நுட்ப அனுமதிக்கான நகர் ஊரமைப்புத் துறையின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டபின் சம்பந்தப்பட்ட உள்ளூர் திட்டக்குழுமம்/புதுநகர் வளர்ச்சிக் குழுமம்/உள்ளாட்சி அலுவலகத்திற்கு வரைபடங்களும் இணைப்புகளும் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

மனை உட்பிரிவு அனுமதி /மனை ஒருங்கிணைப்பு அனுமதி / இட அனுமதி 

மனை உட்பிரிவு, மனைகள் ஒருங்கிணைப்பு அல்லது இட அனுமதி  கோரி நகர் ஊரமைப்பு இயக்ககத்திற்கு அனுப்பப்படும் விண்ணப்பங்களுடன், கீழே குறிப்பிட்டுள்ளவாறு வரைபடங்களையும், விபரங்களையும் இணைத்து, நகர் ஊரமைப்பு இயக்குநர், 807 அண்ணா சாலை, சென்னை 600 002 என்ற முகவரியிட்டு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலகம், உள்ளூர் திட்டக் குழும அலுவலகம்/புதுநகர் வளர்ச்சிக் குழும அலுவலகம் மூலமாக பெறப்படவேண்டும்.

மனுதாரரால் கொடுக்கப்பட வேண்டிய இணைப்புகள்

1. மனை உட்பிரிவுக்கா, மனைகள் ஒருங்கிணைப்புக்கா அல்லது மனை உட்பிரிவு/மனைகள் ஒருங்கிணைப்புடன் பாதிக்கும் கட்டட விதிகளுக்கு விதிவிலக்கா, மனைப்பிரிவு நிபந்தனைகள் அல்லது திட்ட விதிகளைத் தளர்த்த அனுமதியா? என்ற தெளிவான விபரத்துடன் மனுதாரர் கையொப்பமிட்ட விண்ணப்பம் 3 நகல்கள்

2. மனைப்படம் (site plan)

(வரைபடங்கள் 1:00 மீட்டர் அளவிலும், அளவுகள் அனைத்தும் மீட்டரிலும் அளித்தல் வேண்டும்) 

மனையின் நீள அகல அளவுகளைத தெளிவாகக் குறித்து, மனையின் எல்லைகளை தனி வண்ணமிட்டு காண்பித்து, மனைக்கு அணுகுவழியாக அமையும் சாலை/தெரு ஆகியவைகளை அகல மற்றும் நீள அளவுகளுடன் காட்டும் வரைபடங்கள். 3. நகல்


அணுகு சாலையின் தரம் மற்றும் பராமரிப்பு குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

மனையின் மொத்த பரப்பளவு அதில் அடங்குகின்ற அளவை எண்கள், அதில் உட்பிரிவு கோரப்படுகின்ற மனையின் பரப்பளவு மற்றும் சரியான அளவுகளுடன் கூடிய வரைபடங்கள் அனுப்பப்படல் வேண்டும்.

3. சுற்றுச் சார்பு வரைபடம்

(வரைபடங்கள் 1:1600 மீட்டர் அளவிலும், அளவுகள் அனைத்தும் மீட்டரில் அளித்தல் வேண்டும்).

மனுதாரர் மனையின் ஒவ்வொரு பக்க எல்லையிலிருந்தும் 100 மீட்டர் சுற்றளவில் உள்ள நில உபயோகங்கள்,மின்பாதை, சாலை, இரயில் பாதை, கட்டடம், ஆறு, ஏரி, குளம், மலை, இடுகாடு, சுடுகாடு முதலியவைகளைக் காட்டும் சுற்றுச் சார்பு வரைபடம் - 3 நகல்கள்.
அனைத்து வரைபடங்களிலும் மனுதாரரும், உரிமம் பெற்ற அளவையாளரும் கையொப்பம் செய்திருத்தல் வேண்டும்.

4. மனுதாரருக்கு நில உரிமைச் சம்பந்தமான பத்திர நகல் ஒன்று.

5. மனைப்பிரிவுப் பகுதிக்கு 13 ஆண்டுகளுக்கான வில்லங்கச் சான்று.

6. விதிகள் பாதிப்புடன் உள்ள கட்டடத்திற்கும் சேர்த்து மனை உட்பிரிவு/ மனைகள் ஒருங்கிணைப்பு அனுமதி கோருவதாக இருந்தால் அதற்கான கட்டட வரைபடமும் இணைத்து அனுப்புதல் வேண்டும்.

7. மனை உட்பிரிவு அல்லது மனைகள் ஒருங்கிணைப்பு கோரும் இடம் அங்கீகாக்கப்பட்ட மனைப்பிரிவில் அமைந்தால் மனைப்பிரிவிற்கு நகர் ஊரமைப்புத் துறையில் ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட கோப்பு எண், மனைப்பிரிவு எண் நாள் விவரம்.

8. மனை விரிவு அபிவிருத்தித் திட்டப் பகுதியில் முழுமைத் திட்டப் பகுதியில் அமைந்தால் அத்திட்டத்தின் திட்ட சுருக்க நகல்.

9. உள்ளாட்சி அதிகாரியால் இணைத்து அனுப்பப்பட வேண்டியவை

அ) செயல் அலுவலர்/ஆணையரின் முகப்புக் கடிதம்
ஆ) நில உரிமைக் குறித்து செயல் அலுவலரின்/ஆணையரின் சான்றிதழ்
இ) முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட வினாவிடைப் படிவம்
ஈ) நகரமைப்பு அலுவலரின்/செயல் அலுவலரின் நேராய்வுக் குறிப்பு
உ) மனுதாரரால் கொடுக்கப்படட அனைத்து இணைப்புகள்.
மலை இடங்களில் மனை அமைந்தால் கீழேகண்ட விவரங்களையும் வரைபடங்களையம் இணைத்து அனுப்ப வேண்டும்.


10. கிரேடியன்ட் விவரங்கள் (Gradient of the site) அடங்கிய மனைப்படம்.

11. Geologically weak zone notified by collector-details

12. மனையின் அகலமும் பரப்பும் தமிழ்நாடு நகராட்சிகள் சட்ட மனையிடங்களுக்கான கட்டட விதிகள் 1993-ஐ நிறைவு செய்கிறதா என்ற விவரம் மனை உட்பிரிவுக்கோ, மனை ஒருங்கிணைப்பிற்கோ அல்லது கட்டட மேன்முறையீட்டு விண்ணப்பத்துடனோ அனுமதி  கோரி பெறப்படும் விண்ணப்பங்கள் இவ்வலுவலகத்தில் பரிசீலிக்கப்பட்டு, உட்பிரிவிற்கோ அல்லது ஒருங்கிணைப்பிற்கோ அனுமதி  அளிக்க இத்துறையால் ஏற்றுக் கொள்ளப்பட்டால், நகர் ஊரமைப்புத துறையின் தொழில்நுட்ப ஒப்புதல் அளிப்பதற்காக, அரசாணை எண்.138 வீட்டுவசதி  மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை நாள் 4.3.04-ன்படி ஒரு மனைக்கு ரூ.300/- வீதம் நன்னிலைத் தொகைச் செலுத்துமாறு மனுதாரருக்குக் கடிதம் மூலம் விவரம் தெரிவிக்க வேண்டும். அக்கடிதம் கிடைக்கப் பெற்றதும், அக்கடிதத் ல் தெரிவித்தவாறு செலுத்தக்கோரும் தொகையை மனுதாரர் கீழேகண்ட தலைப்பில் செலுத் யுள்ளாரா என்பதைப் பரிசீலிக்க வேண்டும்.

கணக்குத் தலைப்பு Head of Account 

0217 – Urban Development – 03 IDSMT – 800 Other Receipts – AA. Director of Town Planning. 1. Collection of Payments for services rendered (0217-03-800-AA.0102) 

என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசிற்குட்பட்ட ஏதேனும் ஒரு கருவூலத்தில்/பாரத ஸ்டேட் வங்கியில் கட்டி அதன் அசல் செலுத்துசூ சீட்டினை 807. அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரியில் உள்ள நகர் ஊரமைப்பு இயக்குநர் அவர்களுக்குஅனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டும். அசல் செலுத்துச் சீட்டு கிடைக்கப் பெற்றதும் தொழில்நுட்ப அனுமதிக்கான நகர் ஊரமைப்புத் துறையின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டபின் சம்பந்தப்பட்ட உள்ளூர் திட்டக்குழுமம்/புதுநகர் வளாச்சிக்குழுமம்/உள்ளாட்சி அலுவலகத்திற்கு வரைபடங்களும் இணைப்புகளும் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

கட்டட மேல்முறையீடு

கட்டட விதி  பாதிப்பிற்கான விதி விலக்கிற்கும், மனைப்பிரிவு நிபந்தனை பாதிப்பு மற்றும் திட்ட விதி  பாதிப்பு ஆகியவைகளின் இசைவிற்குமான கட்டட மேல்முறையீட்டு விண்ணப்பங்களை நகர் ஊரமைப்பு இயக்குநர் அவர்களின்/அரசின் அனுமதி  கோரி அனுப்பப்படும்போது கீழேகண்ட விபரங்களும், இணைப்புகளும் இணைத்து அனுப்பபட்டுள்ளதா என்பதை பரிசீலித்து குறிப்பு வழங்க வேண்டும்.

1. ஆணையாளர்/நிர்வாக அலுவலரின் கடிதம்
2. மனுதாரர் விண்ணப்பம் (இரண்டு ரூபாய் நீ மன்ற வில்லையுடன்)
3. மேல்முறையீட்டு வரைபடம்.

“என்று ஆணையாளரால் அல்லது நகரமைப்பு அலுவலரால்/நிர்வாக அலுவலரால் சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

4. மேல்முறையீட்டு வினா விடைப் படிவம்.

5. என்னென்ன விதிகள் பாதிக்கின்றன என்பதை விவரிக்கும் கீழேகண்டவாரான விதி  பாதிப்பு அட்டவணை


அ. தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் கட்டட விதிகள், 1972
ஆ.  திட்ட விதிகள்:
இ. மனைப்பிரிவு நிபந்தனைகள்:
ஈ. பலமாடி மற்றும் பொதுக் கட்டட விதிகள், 1973
ஊ. வளர்ச்சிக் கட்டுப்பட்டு விதிகள்
ஊ. துணை கட்டட விதிகள்

(ஊராட்சி கட்டட விதிகள் 1970, புயல் பாதிக்கும் பகுதி  கட்டட விதிகள், 1982 போன்றவைகள்) அதில் ஆணையாளர் அல்லது நகரமைப்பு அலுவலர், நிர்வாக அலுவலர் கையொப்பமிட்டிருக்க வேண்டும்.

6. மனைக்கு அணுகு பாதையாக உள்ள சாலை தெரு யாரால் பராமரிக்கப்படுகிறது. பாதையின் அகலம், பாதை மண் பாதையா, கப்பி சாலையா, தார் சாலையா போன்ற விவரம்

7. கட்டட ஆய்வர் மற்றும் நகரமைப்பு அலுவலர் நேராய்வு குறிப்பு (அரசுக்கு
மேல்முறையீடு என்றால் ஆணையாளரின் நேராய்வு குறிப்பும் சேர்த்து)

8. கட்டட அனுமதி  மாநகராட்சியில், நகராட்சியில்/பேருராட்சியில்/நகரயத்தில்
மறுக்கப்பட்ட வரைபடம் மற்றும் உத்தரவின் நகல்.

9. விதி விலக்கிற்கு ஏற்கனவே இயக்குநரால், அரசால் மறுக்கப்படடிருந்தால்/விபரம் கோரப்பட்டிருந்தால் அந்த உத்தரவின் எண் நாள் விபரம்

10. மனுதாரரின் கட்டடம் அமையும் இடம் முழுமைத்  திட்டப் பகுதியில் அமைந்தால், முழுமைத் திட்டத்தில் உள்ள நில உபயோகங்களைக் காட்டும் முழுமைத் திட்ட சுருக்க வரைபட நகல். மனுதாரர் இடம் எந்த நில அளவு எண்ணில் அமைகிறது என்பதையும் அதன் உட்பிரிவு எண்கள் விபரத்தினையும் முழுமைத் திட்டத்தில் உத்தேச நில உபயோக விபரத்தினையும் விபரமாகத் தெரிவிக்க வேண்டும்.

11. மனுதாரரின் கட்டடம் அமையும் இடம் விரிவு அபிவிருத்தித் திட்டப் பகுதியில் அமைந்தால் மனுதாரரின் மனையினை தனி வண்ணமிட்டு காட்டும் விரிவு அபிவிருத்தித் திட்ட சுருக்க வரைபட நகல். விரிவு அபிவிருத்தி திட்டத்தில் மனுதாரர் இடம் என்ன நில உபயோகத்தில் உள்ளது என்ற விபரம்.

12. மனுதாரரின் கட்டடம் அமையும் இடம் உள்ளூர் திட்டக் குழும எல்லையில் அமைந்தால் உள்ளூர் திட்டக் குழுமத் தீர்மான நகல்

13. சம்பந்தப்படட நகரவைக் கோப்பு/பேரூராட்சி கோப்பு/நகரியக் கோப்பு

14/ மனைக்கு/மனை உட்பிரிவுக்கு அனுமதி  கோரப்படும்போது, மனை அமையும் இடம் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவா? அங்கிகரிக்கப்படாத மனைப்பிரிவா? நத்தமா? தனிமனையா? என்பதற்கும், இடம் நன்செய்நிலமா என்பதற்கும் தெளிவான விபரம் அளித்தல் வேண்டும்.

15. மனை உட்பிரிவு மற்றும் மனை ஒருங்கிணைப்பு சம்பந்தமான திட்ட விதி  அல்லது மனைப்பிரிவு நிபந்தனை பாதிப்பு இருந்தால், மனுதாரர் தனது விண்ணப்பத்திலும், ஆணையாளர் தனது கடிதத்திலும் விபரம் தெரிவித்து அதற்கும் அனுமதி  கோர வேண்டும். மனுதாரர் கட்டட விண்ணப்பத்துடன் மனை ஒப்புதலுக்கும்/மனை உட்பிரிவுக்கும்/மனை ஒருங்கிணைப்புக்கும் சேர்த்து விண்ணப்பிக்கும்பொழுது மனை ஒப்புதலுக்காக/மனை உட்பிரிவுக்காக/மனை ஒருங்கிணைப்புக்காக தனியாக வரைபடங்கள் மற்றும் விபரங்கள் கட்டட விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்படல் வேண்டும்.

16. மேல்முறையீடு நகர் ஊரமைப்பு இயக்குநருக்கு முகவரியிடப்பட்டிருந்தால் நகரவை கோப்புடன், வரைபடங்கள், இணைப்புகள் ஒவ்வொன்றிலும் குறைந்தது 3 நகல்களும், மேல்முறையீடு அரசுக்கு முகவரியிடப்பட்டிருயதால், நகரவைக் கோப்புடன் வரைபடங்கள் இணைப்புகள் ஒவ்வொன்றிலும் குறைந்தது 6 நகல்களும் இணைத்து அனுப்ப வேண்டும்.

(மேலே கண்ட இணைப்புகள் அனைத்தையும் ஒரு கட்டாக தைத்தும், சம்பந்தப்பட்ட நகரவைக் கோப்பை ஒரு கட்டாகவும் தைத்து பின் இரண்டையும் ஒன்றாக வைத்து தைத்து அனுப்பினால் இணைப்புகளைப் பிரித்தெடுக்க வசதியாக அமையும்)

17. மேலே கண்டவைகள் அடங்கிய விண்ணப்பம் நகர் ஊரமைப்பு இயக்குநர், 807, அண்ணா சாலை, சென்னை – 600 002 என முகவரியிடப்பட்டு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி/உள்ளூர் திட்டக் குழுமம்/புதுநகர் வளர்ச்சிக் குழுமம் மூலமாக அனுப்ப வேண்டும். மேல்முறையீடு அரசுக்கு என்றால் அரசு செயலாளர், நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கு துறை சென்னை 9 என முகவரியிட்டு வழி நகர் ஊரமைப்பு இயக்குநர் எனக் குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி/உள்ளூர் திட்டக் குழுமம்/புதுநகர் வளர்ச்சிக் குழும் மூலமாக அனுப்ப வேண்டும்.

முழுமைத் திட்டம் மற்றும் விரிவு அபிவிருத்தி திட்டத்தில் நில உபயோக மாற்றம் குறித்த  நடைமுறைகள்

விண்ணப்பதாரர், அரசு செயலர், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அவர்களுக்கு முகவரியிட்டு திட்டக் குழுமம்/மண்டல அலுவலகம் வழியாக பெறப்படும் விண்ணப்பங்கள் நகர் ஊரமைப்புத் துறையின் குறிப்புரையுடன் அரசுக்கு அனுப்பபடுகிறது. ஆட்சேபனை மற்றும் பரிந்துரை அறிவிப்பினை விண்ணப்பதாரர் பிரசுரக் கட்டணம் செலுத்தி  தமிழ்நாடு அரசிதழிலும் மற்றும் உள்ளூர் தமிழ் மற்றும் ஆங்கில தினசரி நாளிதழ்களிலும் வெளியிடப்படவேண்டும். விண்ணப்பம் பரிசீலனைக்கு பின்னர், திட்டக் குழும தீர்மானத்துடன் நகர் ஊரமைப்பு இயக்குநருக்கு அனுப்பப்படுகிறது. நகர் ஊரமைப்பு இயக்குநரின் குறிப்பான பரிந்துரையுடன் அரசின் ஆணைக்கு உத்தேசம் அனுப்பப்படுகிறது. மேற்கண்ட நடவடிக்கைகள் விரிவு அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் வரும் நில உபயோக மாற்றத்திற்கான விண்ணப்பங்களுக்கும் பின்பற்றப்படுகிறது. எனினும், நகர் ஊரமைப்பு இயக்குநரால் அனுமதி அளிக்கப்படுகிறது.

அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை முறைப்படுத்துதல் நடைமுறைகள் ஒரு தனி மனையின் உரிமையாளர் மற்றும் அனுமதியற்ற மனைப்பிரிவினை உருவாக்குபவர்கள், அம்மனை மற்றும் மனைப்பிரிவினை முறைப்படுத்துவதற்கான விண்ணப்பத்தினை இணையதளம் (www.tnlayoutreg.in) மூலம் படிவம்-I-இல் விண்ணப்பித்து, அதனுடன் கட்டணமும் செலுத்தப்பட வேண்டும். ஒரு மனைப்பிரிவில் உள்ள தனிப்பட்ட ஒரு மனையினை முறைப்படுத்த வேண்டுமாயின் அம்மனைப்பிரிவிற்கு தகுந்த அதிகாரியால் ஒப்புதல் வழங்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், 20.10.2016-க்கு முன்பு அனுமதியற்ற மனை பதிவு செய்யப்பட்டிருப்பின், அம்மனைப்பிரிவு மனைகளுக்கு மட்டுமே இம்முறைப்படுத்தும் வசதி  பொருந்தும்.

திட்டமில்லாத பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை, விவசாயம் அல்லாத  உபயோகங்களுக்கு, நிலப்பயன் மாற்றம் செய்ய செயல் முறைகள்  திட்டமில்லாப் பகுதியில் உள்ள நிலங்களை எந்த ஒரு பயன்பாட்டிற்கும் மாற்ற முற்படுபவர்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி பகுதியின் அதிகாரியிடம் விண்ணப்பிக்க வேண்டும். உள்ளாட்சியிடமிருந்து விண்ணப்பம் பெறப்பட்ட பின்னர், நன்செய் நிலம் எனில் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் பெறப்பட்ட சான்று மற்றும் புன்செய் நிலம் எனில் இணை இயக்குநர் (வேளாண்மை) அவர்களின் அறிக்கை ஆகியவற்றை இயக்குநரால் பெறப்பட வேண்டும்.

கால அட்டவணை 
முழு வடிவில் பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலணை செய்து இசைவு அளிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு
 


தலைமை அலுவலக முகவரி
நகர் ஊரமைப்பு இயக்ககம்
4-வது தளம், செங்கல்வராயன் கட்டிடம், 
LIC எதிர்புறம்
807, அண்ணா சாலை, சென்னை-600 002.
தொலைபேசி: 044- 2852 1115 or 2852 1116; Fax: 2852 0582

தலைமை அலுவலகம் மட்டுமன்றி தமிழகம் முழுதும் 35 இடங்களில் துணை இயக்குனர் அலுவலகம் அல்லது திட்ட அலுவலகம் இயங்கி வருகிறது.

தொடரும்……

C.P.சரவணன், வழக்கறிஞர்
தொடர்புக்கு- 9840052475
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com