பாகம் 14: மலைப்பகுதி மற்றும் புராதன நகரங்களில் கட்டிட அனுமதி பெறுவது எப்படி?

நகர் ஊரமைப்புத் துறையின் கீழ் புராதன நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ள 38 நகரங்கள் மற்றும் மலைப்பகுதியில் கட்டிடங்கள் கட்டும்பொழுது,
பாகம் 14: மலைப்பகுதி மற்றும் புராதன நகரங்களில் கட்டிட அனுமதி பெறுவது எப்படி?

நகர் ஊரமைப்புத் துறையின் கீழ் புராதன நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ள 38 நகரங்கள் மற்றும் மலைப்பகுதியில் கட்டிடங்கள் கட்டும்பொழுது, சுற்றுச்சூழல் மற்றும் புராதன விசயங்களை பாதுகாக்கும் முனைப்பில் சிறப்பு விதிகள் மற்றும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அவற்றைப் பார்ப்போம்.
புராதன நகரங்களில் கட்டிட அனுமதி பெறுதல்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்குதல் (நிதி.1) துறை, அரசாணை (நிலை) எண்.22 நாள்: 30.01.97-இன் படி,  ஸ்ரீரங்கம் நகரத்தில் ஸ்ரீரங்கம் கோவில் சுற்றுச் சுவரிலிருந்து 1கி மீட்டர் சுற்றளவுக்குள் கட்டப்படும் கட்டிடங்கள் தரை மற்றும் முதல் தளம் சேர்ந்து உயரம் 9 மீட்டருக்குள் இருக்க வேண்டும் என்றும், இந்த வரையறைக்குட்படாத அதாவது 1 கி மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள கட்டிடங்கள் உட்பட அனைத்து கட்டிடங்களுக்கான விண்ணப்பங்களும் அரசுக்கு பரிசீலனைக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் அரசாணை நிலை எண்.233 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்குத் துறை நாள்.27.11.95ல் உத்தரவிடப்பட்டது. 27.11.95 நாளிட்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கு துறையின் அரசாணை எண்.234-ல் ஸ்ரீரங்கம் நகரத்தைப் போலவே மற்ற இணைப்பில் கண்ட புராதன நகரங்களில் கட்டப்படும் கட்டிடங்களை முறைப்படுத்துவதை கருத்தில் கொண்டு மற்ற புராதன நகரங்களுக்கும் அவைகளின் தனித்தன்மையை கணக்கில் எடுத்துக்கொண்டு விதிமுறைகளை முடிவு செய்து அரசுக்கு பரிசீலனைக்கு அனுப்புமாறும் மேற்கண்ட முறைகளை முடிவு செய்யும் வரை எல்லா புராதன நகரங்களுக்கும் கட்டிட அனுமதி  கோரும் செயற்குறிப்பினை அரசின் ஒப்புதலுக்கு அனுப்புமாறும் நகர் ஊரமைப்பு இயக்குநர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

2. மேற்படி ஆணைகளின்படி புராதன நகரங்களில் கட்டக்கூடிய கட்டிடங்களுக்கென அனுமதியை அரசிடம் பெற வேண்டும் என்பதில் நடைமுறையில் ஏற்படுகிற பல சிக்கல்களையும் காலதாமதங்களையும் பொதுமக்களுக்கு ஏற்படுகிற பிரச்சனைகளையும் தவிர்க்கும் பொருட்டு மேற்படி அரசாணைகளை இரத்து செய்வது பற்றி அரசு பரிசீலனை செய்தது.

3. பரிசீலனைக்குப் பின், 1. அரசாணை (நிலை) எண். 163 நிதி &கு.வ. துறை நாள் 06.07.93. 2. அரசாணை (நிலை) எண். 191 நிதி  & கு.வ.துறை நாள் 18.07.94. 3. அரசாணை (நிலை) எண். 233 நிதி  & கு.வ.துறை நாள் 27.11.95 4. அரசாணை (நிலை) எண். 234 நிதி & கு.வ. துறை நாள் 27.11.95  அரசாணைகளை அரசு இரத்து செய்கிறது. மேலும் இணைப்பில் கண்டுள்ள 38 புராதன நகரங்களிலும் புராதன கோவிலின் சுற்றுச் சுவரிலிருந்து 1 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் கட்டப்படும் கட்டிடங்கள் (தரை தளம் மற்றும் முதல் தளம்) 9 மீட்டர் உயரத்திற்கு மிகாமல் கட்டப்பட வேண்டும் எனவும் இந்தக் கட்டுப்பாட்டின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிறுவனங்கள் கட்டிடங்களுக்கான அனுமதியை வழங்கலாம் எனவும் அரசாணை பிறப்பிக்கிறது.

அரசாணை நிலை எண்.22 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்குத் துறை நாள் 30.1.97-ன்படி புராதன நகரங்கள்:

1. காஞ்சிபுரம், 2. சிதம்பரம், 3. ராமேஸ்வரம், 4. ஸ்ரீரங்கம், 5. திருவில்லிபுத்தூர், 6. மாமல்லபுரம், 7. தஞ்சாவூர் 8. கும்பகோணம் 9. கங்கைகொண்ட சோழபுரம், 10. பூம்புகார், 11. மதுரை, 12. பழனி, 13. திருச்செந்தூர், 14. திருத்தணி, 15. கன்னியாகுமரி, 16. திருவண்ணாமலை, 17. செஞ்சி, 18. செட்டிநாடு, 19. வாலிநோக்கம், 20. தரங்கம்பாடி, 21. நாகூர், 22. வேளாங்கண்ணி, 23. குற்றாலம், 24. ஸ்ரீபெரும்புதூர், 25. திருநெல்வேலி, 26. திருச்செங்கோடு, 27. காரைக்குடி, 28. பேரூர், 29. பவானி, 30. பிச்சாவரம், 31. மருதூர், 32. குறிஞ்சிப்பாடி, 33. திருமயம், 34. சித்தன்னவாசல், 35. ஆவுடையார்கோவில், 36. பத்மநாபபுரம், 37. குளச்சல், 38. மரக்காணம்.

மலைப்பகுதியில் கட்டிடம் கட்டுபவர்களுக்கு அனுமதி கொடுப்பது யார்?    

தமிழ்நாடு மலைப் பகுதிகள் பாதுகாப்பு ஆணையம் [Hill Area Conservation Authority (HACA)]

G.O.Ms.எண்.44, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை (TCII) நாள் 22.4.1990 இன் படி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க தமிழக அரசினால் குறிப்பிட்ட பணியை(Ad-hoc Authority) மட்டும் தொடர அமைக்கப்பட்டதே ”தமிழ்நாடு மலைப் பகுதிகள்  பாதுகாப்பு ஆணையம் ஆகும். இதில் பல்வேறு அரசுத் துறையின் செயலர்கள் உறுப்பினராக்கப்பட்டனர். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் செயலர் தலைவராவார். உறுப்பினர்-செயலராக , நகர் ஊரமைப்புத்துறை இயக்குனர் ஆவார். உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து பெறும் விண்ணப்பங்களை ஆணையம் ஆய்ந்து அனுமதி அளிக்கும்.

அரசாணை நிலை எண்.49 வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை நாள்.24.03.2003-இல் இணைப்பு- I இல் கொடுக்கப்பட்டுள்ள மலைப்பகுதிகளாவன.

மாவட்டம், வட்டம், கிராமம்:
கோயமுத்தூர்
மேட்டுப்பாளையம்
1.தோளம்பாளையம்
2.வெள்ளிக்காடு
3.தேக்கம்பட்டி
4.ஓடந்துறை
5.நெல்லிதுறை
6.சேக்கதாசம்பாளையம்
7.சிறுமுகை

பொள்ளாச்சி
1.பெரியபோடு
2.வேட்டைக்காரன்புதூர்
3.கலியபுரம்
4.காட்டூர்
5.அங்காலகுறிச்சி
6.தொறையூர்
7.ஜல்லிப்பட்டி
8.அர்த்தநாரிபாளையம்

வால்பாறை
ஆனைமலை

திண்டுக்கல்
கொடைக்கானல்
அனைத்து கிராமங்கள்

திண்டுக்கல்
1.சிறுமலை
2.ஆலூர்
3.பாண்டிரமலை
4.தோணிமலை
5.மணலூர்
6.கோடல்வாவி
7.சத்திரப்பட்டி
8.பறைப்பட்டி
9.அய்யம்பாளையம்
10.நரசிங்கபுரம்
11.கசவணம்பட்டி
12.சிரங்காடு

பழனி (ஒட்டன்சத்திரம் தாலுகா)
1.வடகாடு.
கோயம்புத்தூர்
கோயம்புத்தூர் தெற்கு
1.நரசிபுரம்
2.வெள்ளிமலைப்பட்டினம்
3.தேவராயபுரம்
4.கள்ளிநாயக்கன்பாளையம்
5.இக்கரைபொல்லுப்பட்டி
6.மதுவராயபுரம்
7.ஆலந்துரை
8.பூலுவப்பட்டி
9.தென்கரை
10.மாதம்பட்டி
11.தீத்திபாளையம்
12.பேரூர்செட்டிபாளையம்
13.சுண்டக்காமுத்தூர்
14.எட்டிமடை
15.மாவுதம்பட்டி
16.தொண்டாமுத்தூர்

கோயம்புத்தூர் வடக்கு
1.நாயக்கன்பாளையம்
2.குண்டலூர்
3.நரசிம்மநாயக்கன்பாளையம்
4.நஞ்சுண்டாபுரம்
5.சின்னதடங்கம்
6.வீரபாண்டி
7.சோமையம்பாளையம்

உடுமலைப்பேட்டை
1.வளயபாளையம்
2.தளி
3.ஜல்லிப்பட்டி
4.லிங்கமாவூர்
5.வெங்கிடாபுரம்
6.மனுப்பட்டி
7.கல்லாபுரம்

நீலகிரி
குடலூர்(அனைத்து கிராமங்கள்)
உதகமண்டலம் (அனைத்து கிராமங்கள்)
குன்னூர் (அனைத்து கிராமங்கள்)
கோத்தகிரி (அனைத்து கிராமங்கள்)

மலைப்பகுதியில் கட்டிடம் கட்டுபவர்கள் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியது என்ன?    

மலை இடக் கட்டட விண்ணப்பம் கொடுக்கும் போது, ஒவ்வொரு விண்ணப்பத்துடனும் இணைத்து அனுப்பப்பட வேண்டிய மாதிரி படிவம் – சம்பந்தமாக இணைக்க வேண்டியது பற்றி நகர் ஊரமைப்பு இயக்குநர் கடித எண் ந.க.எண் 33728/93 மஇகவி நாள். 12.10.94 பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

மலை இடங்களில் கட்டப்படும் கட்டுமானங்களுக்கான அனுமதி  வேண்டி அழகுணர்ச்சிக் கூறுகள் காப்புக் குழுக் கூட்டத்தின் முன் பிரேரணைகளை வைக்கும் பொருட்டு பரிசீலிக்க நகர் ஊரமைப்பு இயக்குநருக்கு /உறுப்பினர் செயலருக்கு முகவரியிட்டு அனுப்பப்படும் ஒவ்வொரு கட்டட விண்ணப்பத்துடனும்  (படிவம் `ஏ’ மற்றும் படிவம் `பி’) பூர்த்தி  செய்து இணைத்து அனுப்பப்பட வேண்டும்.

தரைப்பரப்பளவு 300 சதுர மீட்டருக்கும் (Floor Area) குறைவாக உள்ள குடியிருப்பு உபயோகக் கட்டடங்களுக்கு மட்டும் படிவம் ஏ-யில் உள்ள அனைத்து விவரங்களையும் தெளிவுற பூர்த்தி  செய்து உள்ளாட்சி நிர்வாக அதிகாரி கையொப்பமிட்டு இணைத்து அனுப்ப வேண்டும்.

தரைப்பரப்பளவு 300 சதுர மீட்டருக்கு (Floor Area) அதிகமாக உள்ள குடியிருப்புகளுக்கும் மற்றும் 300 சதுர மீட்டருக்கு (Floor Area) குறைவாக இருப்பினும் இதர அனைத்து உபயோக கட்டடங்களுக்குமான கோரிக்கை வரப்பெறுமேயானால் படிவம் பி-யில் உள்ள அனைத்து விவரங்களுடன் தெளிவுற பூர்த்தி  செய்து உள்ளாட்சி நிர்வாக அதிகாரி கையொப்பமிட்டு இணைத்து அனுப்பவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கட்டடக்கலை மற்றும் அழகியல் அம்சங்கள் குழு [Architectural and Aesthetics Aspects (AAA) Committee]

G.O. Ms. No.106 நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை நாள் 1.3.2004 இன் படி, தமிழக அரசு நீலகிரி, திண்டுக்கல், சேலம் மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களுக்கு, கட்டிட அனுமதி வழங்குவதில் உதவுவதற்காகவே கட்டடக்கலை மற்றும் அழகியல் அம்சங்கள் குழுவை அமைத்தது. கட்டடக்கலை மற்றும் அழகியல் அம்சங்கள் குழுவில் மாவட்ட ஆட்சியர்கள் தலைவர்களாகவும், நகர் ஊரமைப்புத் துறையின் மண்டல துணை இயக்குனர் நடத்தாளர்களாகவும் (Convenors), வனத்துறை, கனிம வளத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய, நகராட்சி அலுவலர்கள் உறுப்பினர்களாகவும் கொண்டது. கட்டடக்கலை மற்றும் அழகியல் அம்சங்கள் குழு அனுமதிக்கு முன், மலைப் பகுதிகள் பாதுகாப்பு ஆணைய அனுமதியும் அவசியமாகும்.
தொடரும்……

C.P.சரவணன்,வழக்கறிஞர் 
தொடர்புக்கு - 9840052475
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com