பாகம்-15 கட்டிடத்தில் மழைநீர் சேகரிப்பு அவசியமா?

நகர ஊரமைப்புத்துறையோ, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமமோ, உள்ளாட்சி அமைப்புகளோ, நிறைவுச் சான்றிதழ் வழங்காது.
பாகம்-15 கட்டிடத்தில் மழைநீர் சேகரிப்பு அவசியமா?


தமிழ்நாடு அரசு அரசாணை நிலை எண்.56 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்குத் துறை நாள்.21.07.2003-ல், தமிழ்நாடு மாவட்ட நகராட்சி சட்டம்,1920 பிரிவு 191 உட்பிரிவு 1303 இல் கொடுக்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழ்நாடு மாவட்ட கட்டிட விதிகள், 1972- பிரிவு-3B மற்றும் 16B- மாற்றம் செய்யப்பட்டு மழைநீர் சேகரிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு மாவட்ட கட்டிட விதிகள், 1972- பிரிவு-7A இல் கூறப்பட்டுள்ளவாறு அமைக்கப்பட வேண்டும்.

சென்னைப் பெருநகரப் பகுதிக்கான வளர்ச்சி விதிமுறைகள் விதி.25 இல். நிர்ணயிக்கப்பட்ட  திட்ட அளவுகள், கூறு-ஓ, இணைப்பு XIX-ல் கொடுக்கப்பட்டுள்ள படி மழைநீர் சேகரிப்பு வசதிகள் செய்யப்பட வேண்டும்.

மழைநீர் சேகரிப்பு அமைக்காததால் விளைவுகள்

நகர ஊரமைப்புத்துறையோ, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமமோ, உள்ளாட்சி அமைப்புகளோ, நிறைவுச் சான்றிதழ் வழங்காது. நிறைவுச் சான்றிதழ் பெறாமல் கட்டிடத்தை உபயோகப்படுத்த முடியாது.

இணைப்பு – XIX இல் கூறப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு முறைகள்

நீர் சேகரிப்பு

(1) மழைநீர் சேகரிப்பதற்கு ஒவ்வொரு வளாகத்திலும் மழைநீர் சேகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கீழ்காணும் தர நிலைகளுக்கு ஏற்றவாறு மழைநீர் சேகரிப்பு அமைக்க வேண்டும்.  திட்ட அனுமதிக்கான வரைபடத்தில் இவ்வமைப்பு காண்பிக்கவேண்டும்.

அ) தரை மற்றும் முதல் தளம் வரையுள்ள கட்டிடங்கள் :

30 செ.மீ விட்டம் மற்றும் 3 மீ ஆழமான வடிகட்டு / கசிவு குழிகள் அமைக்க 2.85 மீட்டருக்கு உடைந்த செங்கற்களால் அல்லது கூழாங்கற்களால் நிரப்பப்பட்டு துளையிடப்பதிட்ட வலுஊட்டிய திண்காரையால் அதன்மேல் பகுதி  மூடியிருக்க வேண்டும். கட்டிட பரப்பினுடைய மையத்திலிருந்து, மையத்திற்கு மையம் 3 மீ இடைவெளியில் இத்தகைய கசிவு குழிகள் அமைத்திட வேண்டும்.  திறந்தநிலை குழாய்மூலம் மேல்தளத்தில் சேகரிக்கப்பட்ட மழைநீர், தரையில் அமைக்கப்பட்டுள்ள 150 மி.மீ அகலமுள்ள பாலிவினைல் குளோரைடு குழாயின் மூலம் சேகரித்து, கசிவு நீர் குழாய்களில் விழச்செய்யலாம் அல்லது நிலத்தடிநீர் அளவை அதிகரிக்கும்  திறந்தநிலை கிணற்றின்முன்பு அமைக்கப்பட்டுள்ள 60 செ.மீ ஒ 60 செ.மீ வடிகட்டி குழாய் மூலம் திறந்தவெளி கிணற்றில் விழச்செய்யலாம். நீரைத்தக்க வைத்து அவற்றிற்குள் வடிய வைப்பதற்காக நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களின் குறுக்கே 7.5 செ.மீ உயரமுள்ளதொரு தடுப்பு சுவர் அமைக்கலாம்.

ஆ) சிறப்புக் கட்டிடங்கள், தொகுப்பு அபிவிருத்தி , பலமாடிக் கட்டிடங்கள், தொழிற்சாலைகள், நிறுவன கட்டிடங்கள்:

கட்டிடத்தை சுற்றிலும் 1 மீ அகலமும், 1.5 மீ ஆழமுள்ள கூழாங்கற்கள் படுக்கை அமைக்க வேண்டும். இக் கூழாங்கற்கள் 5 செ.மீட்டரிலிருந்து 7.5 செ.மீட்டர்வரை உள்ள உருண்ட கூழாங்கற்களால் நிரப்பப்பட வேண்டும். கட்டிடத்தைச் சுற்றிலும் உள்ள நடைபாதை தளம் கூழாங்கற்கள் படுக்கையை நோக்கி 1ல் 20க்கான முறையில் சாய்வாக அமைக்கப்பட்டு, மேல்தளத்திலிருந்தும், பக்கவாட்டுத் திறந்த வெளியிலிருந்தும் வரும் மழைநீர், இந்தப் பாதையின் மீது வழிந்தோடி கூழாங்கற்கள் படுக்கையைச்சுற்றிலும் பரவ வேண்டும். வளாகத்தினுள் சேரும் மழைநீர் சாலைக்கு வழிந்தோடி, வெளியில் செல்லுவதிலிருந்து தடுத்திட, 7.5 செ.மீ உயரத்தில் கல்கட்டுகளால் அமைந்த தடுப்புச் சுவர்கள், நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களில் அமைக்கப்பட வேண்டும்.

இ) வளர்ச்சியின் சூழ்நிலைகள் அல்லது வகைக்கு ஏற்ப இணைக்கப்பட்டுள்ள வரைபடங்களில் காட்டப்பட்டுள்ள முறைகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

2. அனைத்துக் கட்டிடங்களுக்கான கூடுதல் விதிமுறைகள்:

அ. தரை தளத்தில், கழிப்பிடத்தின் தள அளவு, எளிதாக வழிந்தோடுவதை உறுதி செய்ய சாலை நிலைக்குமேலே 0.9 மீட்டர்களாவது இருக்க வேண்டும்.

ஆ. அனைத்து மையக்குளிர்பதன வசதி  செய்யப்பட்ட கட்டிடங்கள், தமக்காக சொந்த கழிவுநீர் சீராக்கும் / சுத்திகரிக்கும் நிலையத்தைக்கொண்டு, குளிர்படுத்தும் நோக்கத்துக்காக சீராக்கப்பட்ட / சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைப் பயன்படுத்த வேண்டும்.

இ. சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தால் வழங்கப்படும் குடிநீரைச் சேமிப்பதற்கு ஒரு தனி நீர்த்தொட்டி கட்டப்படவேண்டும். நீர்த்தொட்டியின் கொள் அளவு, குடியிருப்பு ஒன்றுக்கு 1,000 லிட்டர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த நீர்த்தொட்டி, பிற ஆதாரங்களிலிருந்து பெறப்படும் நீரைச் சேகரிப்பதற்காகக் கட்டியிருக்கக்கூடிய தொட்டியிலிருந்து தனித்து இருக்கவேண்டும்.

மழைநீர் சேகரிப்பு முறைகள்

முறை-I


முறை –II

முறை –III

முறை –IV

முறை –V

முறை –VI

முறை -VII

10.0 மீ ஆழத்திற்கு 1.2 மீ அகலமுள்ள கிணற்றை அமைத்து, மழைநீரைக்கீழே கொண்டு செல்லும் குழாய்களின்மூலம் மேல்தளத்திலிருந்து கிணற்றிற்கு செல்ல அமைக்க வேண்டும். கட்டிடத்தைச் சுற்றியுள்ள திறந்த வெளியில் பொழியும் மழைநீரைச் சேகரிக்க துளையிடப்பட்ட பலகையுடன் 1.0 மீ ஆழத்திற்கும், 0.6 மீ அகலத்திற்கும் உரியதொரு வடிகால் அமைக்க வேண்டும். வாயிலின் முன் உள்ள வடிகால் அமைப்பில் வந்து சேரும் மழைநீரை தேவையான குழாய் மூலமாக 10 மீ ஆழம் மற்றும் 1.20 மீ விட்டமுடைய மற்றுமொரு செறிவூட்டு கிணற்றுடன் இணைக்க வேண்டும்.

தொடரும்……

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com