நியூட்ரினோ 4 : 40 கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கிய மத்திய வனத்துறை

தமிழகத்தில் செயல்படுத்தப்படவிருக்கும் நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய வனத்துறை அளித்திருக்கும் முதல் நிலை அனுமதிக் கடிதத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல 40 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நியூட்ரினோ 4 : 40 கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கிய மத்திய வனத்துறை

தமிழகத்தில் செயல்படுத்தப்படவிருக்கும் நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய வனத்துறை அளித்திருக்கும் முதல் நிலை அனுமதிக் கடிதத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல 40 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

நியூட்ரினோ திட்ட அனுமதிக் கடிதம் சொல்வதென்ன..?

மத்திய வனத்துறை அனுமதி F. No.21-67/2010-1A-III மூலம் மற்றும் இயக்குனர், குஷால் வாஷிஸ்ட் நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய வனத்துறையின் முதல்நிலை அனுமதி letter No. 4-TNC729/2010- BAN/8111 dated 27/29.10.2010 மூலம் கிடைக்கப் பெற்றுள்ளது. 11 பக்க அனுமதிக் கடிதத்தில் சுமார் 40 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஜூலை, 2017 மத்திய வனத்துறை இயக்குனராக, பணியில் சேர்ந்த  குஷால் வாஷிஸ்ட்(No.A.19011/4/2017-P.11 ) அடிப்படையில் ஒரு இந்திய அஞ்சல் பணி அலுவலர்(Indian Postal Service) என்பது ஒரு கூடுதல் தகவல்.

திட்டத்தை நிறுவுதல் / செயல்படுத்துவதற்கான ஒப்புதல் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் காற்று (தடுப்பு மற்றும் மாசுபாடு கட்டுப்பாடு) சட்டம், 1981 மற்றும் நீர் (மாசு தடுப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு) சட்டம் 1974 கீழ் தேவைப்படுகிறது.

மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (State Environment Impact Assessment Authority)/ மாநில நிபுணர் மதிப்பீட்டுக் குழு (State Expert Appraisal Committee)  அனுமதி பெற வேண்டும்.

திட்ட முன்மொழிவுகளை அமல்படுத்த அவசியமான வனத்துறை அனுமதி மற்றும் தேசிய வனவிலங்கு வாரியத்தின் அனுமதியை (National Board for Wildlife)பெற வேண்டும்.

தேசிய கட்டிடம் விதிகளின் படி, பூகம்பம், தீ, மின்னல் போன்றவற்றைப் பொறுத்தவரை பாதுகாப்பு நடவடிக்கைகள் உட்பட கட்டமைப்பு பாதுகாப்புக்காக தகுதிவாய்ந்த அதிகாரியிடம் அங்கீகாரம் பெற வேண்டும்.

திட்ட முன்மொழிவாளர்களின் பணி துவக்கப்படுவதற்கு முன்பாக நகர திட்ட ஆணையம், உள்ளூர் கட்டடத்திற்கு ஏற்ப அனைத்து கட்டுமானத்துக்கும் சம்பந்தப்பட்ட முகவர்கள் எல்லாவற்றுக்கும் தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற வேண்டும்.

பேரிடர் மேலாண்மை வாரியத்தித்தின் இணக்கத்துடன் மேலாண்மை திட்டம் அமைக்க வேண்டும்.

இத்திட்டத்திற்கு தமிழக அரசின் அனுமதி பெற வேண்டிய துறைகள் என்ன?
அனுமதி கொடுத்ததோடு மத்திய அரசின் வேலை முடிந்து விடுகிறது. எனவே, தமிழக அரசு தான் நியூட்ரினோ திட்டத்துக்கான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டியுள்ளது. 

முதலில், தமிழக வனத்திற்குச் சொந்தமான இடத்தில் இவர்களின் பூர்வீக சொத்து போல் வேலி அமைத்துக் கொண்டனர்.

பிறகு, தமிழ்நாடு குடிநீர் வாரியத்திடம் (TWAD) தண்ணீருக்காக கோரிக்கை வைத்தார்கள். அப்போது என்ன பேச்சு வார்த்தை நடந்ததோ, நீர் வளத் துறை (WRD) மூலம் முல்லைப்பெரியார் அணையிலிருந்து 3,50,000 லிட்டர் தண்ணீர் முல்லைவெளியிலிருந்து கொண்டு வர ஏற்பாடு செய்துவிட்டார்கள். 

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) இதுவரை எந்த அழிவு திட்டங்களுக்கும் அனுமதி மறுத்ததில்லை. எனவே, அதைச் சிறப்பாகச் செய்து அனுமதியை வழங்கியது.

மலை பகுதி பாதுகாப்பு அதிகார அமைப்பு (HACA) 
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர் மானக் கழகம்(TANGEDCO)
தமிழ்நாடு வனத்துறை, வன உயிர்கள் பிரிவு
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை வாரியம் ஆகியவற்றின்  அனுமதி பெற வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சட்டபூர்வமாக செயல்படுத்த முடியுமா?
1. யுனெஸ்கோ முடிவு: 36 COM 8B.10 இல் பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளதால், அவர்களின் ஒப்புதல் பெற வேண்டும். யுனஸ்கோ நிச்சயம் தராது.

2. 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பேணத்தகு நீடித்த அபிவிருத்திக்கான (Sustainable Development Goals (SDGs)) ஐக்கிய நாடுகள் சபையின் (Rio + 20) மாநாட்டில் ஐ.நா. உறுப்பு நாடுகளின் அபிவிருத்தி இலக்குகள் (SDG க்கள்) செய்யப்பட்டு கையாப்பமிட்டுள்ளது. இது இத்திட்டம் இலக்குகளுக்கு எதிரானது.

3. இப்பகுதி சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சக வரைவு அறிவிப்பு S.O. 667(E) 27 நாள். பிப்ரவரி, 2017 இன் படி சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதி என அறிவிக்கப்பட்டது

4. பாதுகாப்பிற்கான அரசியலமைப்பு சரத்து  48 –A இன் படி சுற்றுச் சூழலை காக்க வேண்டியது ஒரு அரசின் கடமை என்கிறது.

5. அரசியலமைப்பு சரத்து 51-A (g) இன் படி சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது நமது அரசியலமைப்பின் 51-ஏ (ஜி) சட்டத்தின் கீழ் இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை கடமையாகும்.

6. இத்திட்டம் அணுசக்தி சட்டம், 1962 த்தின் கீழ் ஒப்புதல் கொடுத்தால்..

என்னென்ன சட்டங்கள் எல்லாம் மீறப்படும் தெரியுமா?

கீழே இருக்கின்றன பட்டியல்
பாறைகள் வெட்டுவது மற்றும்  ஆராய்ச்சி வேலைகள் 
I. சத்த மாசுபாடு விதிகள் 2000 க்கு எதிராக உள்ளன.
II. காற்று (தடுப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு) சட்டம், 1981 
III. அபாயகரமான மற்றும் பிற கழிவுகள் (மேலாண்மை மற்றும் எல்லை கடந்த இயக்கம்) விதிகள், 2016
IV. பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள், 2016 
V. கட்டுமான மற்றும் இடிப்பு கழிவு மேலாண்மை விதிகள், 2016
VI. நீர் (தடுப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு) சட்டம், 1974
VII. திட கழிவு (மேலாண்மை) விதிகள், 2016
VIII. e- கழிவு (மேலாண்மை) விதிகள், 2016
IX. பிளாஸ்டிக் கழிவு (மேலாண்மை) விதிகள், 2016
X. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், 1986 
XI. பொதுப் பொறுப்பு (காப்பீடு) சட்டம், 1991 
XII. வன பாதுகாப்பு சட்டம், 1980
XIII. வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972 
அனைத்தையும் மீறித்தான் நடக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

பணம், சொத்து என்பதை விட தமிழ்நாட்டின் மக்கள்  இயற்கை வளங்களை நம்வழித்தோன்றல்களுக்கு பாதுகாப்பாக ஒப்படைக்க வேண்டும் என்பதே முக்கியம்.

முற்றும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com