தேவையானவை:
காளான் - 1 பாக்கெட்
பெரிய வெங்காயம் - 1
குடை மிளகாய் - 1
தக்காளி - 2
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்துமல்லி - சிறிது
வெங்காயத்தாள் - 1
எண்ணெய் - 1 தேக்கரண்டி
துருவிய சீஸ் - அரை கிண்ணம்
செய்முறை:
காளானைச் சுத்தம் செய்து மெல்லிய வில்லைகளாக நறுக்கவும். பெரிய வெங்காயத்தை உரித்து, நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளி மற்றும் குடைமிளகாயைப் பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயத்தாளையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர், குடைமிளகாயைச் சேர்த்து வதக்கவும். அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கி கூழானதும், நறுக்கி வைத்துள்ள காளான் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும். காளான் வதங்கியதும் உப்பு, மிளகாய்த் தூள், மல்லி தூள், சீரகத் தூள் சேர்த்து வதக்கி ஒரு மூடிபோட்டு, அனலை குறைத்து வைத்து வேகவிடவும். தக்காளியில் உள்ள தண்ணீரிலேயே காளான் முழுவதுமாக வெந்துவிடும். (தனியாக தண்ணீர் சேர்க்க தேவையில்லை)
காளான் மசாலா கலவையுடன் நன்கு கலந்து வரும்போது, பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்துமல்லி தழை, வெங்காயத்தாளைத் தூவிவிட்டு கிளறி இறக்கவும். காளான் சாப்ஸ் தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.