மரமே நடாம குழந்தைங்களைப் பெத்துப் போட்டுட்டு இருந்தா அதுங்க தண்ணிக்காக அடிச்சிக்கிட்டு செத்துராது?!

இந்தக் கேள்வி யாரோ, யாரிடமோ கேட்டது இல்லை. நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டியது.
மரமே நடாம குழந்தைங்களைப் பெத்துப் போட்டுட்டு இருந்தா அதுங்க தண்ணிக்காக அடிச்சிக்கிட்டு செத்துராது?!

‘மரமும் நட மாட்டீங்க, தண்ணியையும் சிக்கனமா பயன்படுத்த மாட்டீங்க. மழைத்தண்ணியையும் சேமிக்க மாட்டீங்க. நிலத்தடி நீரையும் உறிஞ்சி எடுத்துடுவீங்க... அப்புறம் எப்படி எதிர்காலத் தலைமுறைக்கு தண்ணீர் கிடைக்கும்?! இருக்கற தண்ணியையும் அசுத்தம் பண்ணீட்டீங்க, அதுக்கும் இப்போ போராடிக்கிட்டு இருக்கீங்க. அப்போ 2080 லயும் 90 லயும் வாழப்போற தலைமுறை எதைத் தான் தண்ணீர் என்று குடிக்க, குளிக்க, சுத்தம் செய்ய எனப் பயன்படுத்தப் போகிறதோ?’

இந்தக் கேள்வி யாரோ, யாரிடமோ கேட்டது இல்லை. நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டியது.

யூ டியூபில் ஹரி பாஸ்கரின் ஜம்ப் கட்ஸ் வீடியோக்களைப் பார்த்திருக்கிறீர்களா? அவை நகைச்சுவையாக, எடிட்டிங் முறையில் யுனிக்காகத் தெரிந்தாலும் இதுவரை பார்த்ததும் சிரித்து விட்டு நகரத் தோன்றியிருக்கிறதே தவிர பாராட்டத் தோன்றியதில்லை. ஆனால் இம்முறை அவர்கள் லேட்டஸ்டாக தமிழகத்தின் நீராதாரங்கள் சார்ந்து வெளியிட்டுள்ள விழிப்புணர்வு ஜம்ப் கட் வீடியோ ரசிக்கும் படியாகவும், பாராட்டும் படியாகவும் அமைந்துள்ளது.

ஜம்ப் கட்ஸ் வீடியோ...

ஜம்ப் கட்ஸ் என்பது ஒரு வகை எடிட்டிங் பிராசஸ். ஒரு காட்சி தொடர்ச்சியாக இல்லாமல் ரேண்டமாக எடிட்டிங் செய்யும் முறை தான் இது.ஹரிபாஸ்கரும் அவரது நண்பர் நரேஷும் தங்களது யூ டியூப் வீடியோக்களை அதே விதமாக எடிட்டிங் செய்வதால் தான் அதற்கு ஜம்ப் கட் என்று பெயர் வைத்துள்ளார்கள்.

இம்முறை தனது ஜம்ப் கட்ஸ் வீடியோ மூலமாக ஹரிபாஸ்கர் வைத்துள்ள கோரிக்கை, மெட்ராஸ் ரோட்டரி சங்கத்தினர் ஏப்ரல் 15 முதல் 22 ஆம் தேதி வரை வாட்டர் க்விஸ் என்றொரு நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். இதில் கலந்து கொள்ள 100 ரூபாய் கொடுத்து யார் வேண்டுமானாலும் பதிவு செய்துகொள்ளலாம். அப்படிச் சேரும் தொகையைக் கொண்டு ஒரு சாரிட்டி மூலமாக அசுத்தப்படுத்தப்பட்ட நீராதாரங்களைச் சீரமைக்கப் பயன்படுத்தப் போகிறார்களாம். தமிழ்நாட்டின் நீராதாரங்கள் அனைத்தும் எதிர்காலத் தலைமுறையினருக்காக மட்டுமல்ல நமது இன்றைய தலைமுறையினரின் சிக்கலற்ற ஆரோக்யமான வாழ்வாதாரங்களுக்காகவும் நிச்சயம் தூர்வாரப்பட வேண்டும். அதில் உங்களது பங்கு என்ன?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com