மைக்ரோ ஃபைபர் எனும் பிளாஸ்டிக் அரக்கனின் சுயரூபம்! தடை செய்வது எப்போது?

நம்மூரில் தான் கழிவு நீர்க் கால்வாய்கள் அனைத்தும் முடிவில் கடலைத்தான் சென்றடைய வேண்டும் என்ற விதி இருக்கிறதே. ஆக உடைகளின் வழியே இந்த மைக்ரோ ஃபைபர்கள் கழிவுநீர்க் குழாய் வழியே வெளியேறி கடல் மட்டுமல்ல க
மைக்ரோ ஃபைபர் எனும் பிளாஸ்டிக் அரக்கனின் சுயரூபம்! தடை செய்வது எப்போது?

நமது ஆடைகளிலுள்ள மைக்ரோ ஃபைபர்களால் உலகக் கடல்கள் அனைத்தும் வெகு விரைவாக அசுத்தமடைந்து வருகிறதாம். நைலான், பாலியெஸ்டர். ஸ்பாண்டெக்ஸ் உள்ளிட்ட மைக்ரோ ஃபைபர் இழைகள் பிளாஸ்டிக்கில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இப்படித் தயாராகும் இந்த உடைகளை நாம் துவைக்கும் போது ஒவ்வொருமுறையும் சிறிது, சிறிதாக கணிசமான அளவு ஃபைபர் நூலிழைகள் வெளியாகி அவை கழிவு நீருடன் கலந்து கழிவு நீர்க்கால்வாய்களைச் சென்றடைகின்றன.

நம்மூரில் தான் கழிவு நீர்க் கால்வாய்கள் அனைத்தும் முடிவில் கடலைத்தான் சென்றடைய வேண்டும் என்ற விதி இருக்கிறதே. ஆக உடைகளின் வழியே இந்த மைக்ரோ ஃபைபர்கள் கழிவுநீர்க் குழாய் வழியே வெளியேறி கடல் மட்டுமல்ல குளம், குட்டை, ஏரி என நீர் ஆதாரங்கள் அனைத்திலும் கலந்து விடுகின்றன. அதனால் தான் கடல் உணவுகளை உண்பவர்கள் ஆண்டுதோறும் 11,000 ஃபைபர் பிளாஸ்டிக் இழைகளையும் சேர்த்தே உட்கொள்கிறார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வகையான மைக்ரோ ஃபைபர்கள் மீன், நண்டு உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களில் மட்டுமல்ல நாம் தினந்தோறும் பயன்படுத்தும் தேன், சர்க்கரை, உப்பு, பீர் போன்ற பொருட்களிலும் கூட கலப்படம் ஆகின்றன. இதில் பீதியூட்டக் கூடிய விஷயம் என்னவென்றால் இந்த மைக்ரோ ஃபைபர்கள் நச்சு ரசாயணங்களை காந்தம் போல தன்னகத்தே ஈர்த்துக் கொள்ளக் கூடியவை என்பதால் இவற்றை அறியாமல் உட்கொள்ளும் உயிரினங்களின் நிலை மிக அபாயகரமானதாக மாறுகிறது. மைக்ரோ ஃபைபர்களை உட்கொள்வதில் பிற எந்த உயிரினத்தைக் காட்டிலும் மனித இனமே மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேர்கிறது. மைக்ரோ ஃபைபர்கள் நமக்கே தெரியாமல் நம் உடலில் கலந்து விடுவதால் மிக மோசமான உடல்நலக் கோளாறுகளில் எல்லாம் மாட்டிக் கொள்கிறோம்.

இந்தக் காரணத்தை முன்னிட்டே அமெரிக்கா அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் மைக்ரோ பீட்ஸ் எனப்படும் மைக்ரோ ஃபைபர் பயன்பாட்டைத் தடை செய்துள்ளதாக அறிவித்திருக்கிறது. இப்போதே சுதாரித்துக் கொண்டு இந்த மோசமான மைக்ரோ ஃபைபர்களை நாம் தடை செய்யத் தொடங்கினோமென்றால் எதிர்காலத்தில் வரக்கூடிய பல ஆரோக்யப் பிரச்னைகளுக்கு முன்கூட்டியே தீர்வு கண்டவர்களாவோம். இல்லையேல், பிரச்னை தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com