இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: மொஹாலியில் நாளை தொடக்கம்!

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொஹாலியில் நாளை தொடங்குகிறது.
இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: மொஹாலியில் நாளை தொடக்கம்!

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொஹாலியில் நாளை தொடங்குகிறது.

முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றியடைந்தது. இதனால் இந்தப் போட்டியிலும் வென்று தொடரில் முன்னிலை பெறும் முனைப்பில் களமிறங்குகிறது இந்தியா. அதேநேரத்தில் இங்கிலாந்து அணி, கடந்தப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்ததால் மொஹாலியில் ஜெயிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

இந்திய அணியைப் பொறுத்தவரையில் காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்துவிட்ட தொடக்க வீரர் கே.எல்.ராகுல் இந்த ஆட்டத்திலும் களமிறங்குகிறார். ரஞ்சி கிரிக்கெட்டில் சதமடித்த கையோடு களமிறங்கும் ராகுல், கடந்த போட்டியில் ஏமாற்றமளித்தாலும் இந்தப் போட்டியில் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு தொடக்க வீரரான முரளி விஜய் நல்ல ஃபார்மில் இருக்கிறார். இருவரும் இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கம் ஏற்படுத்தித் தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிடில் ஆர்டரில் சேதேஷ்வர் புஜாரா, கேப்டன் விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, அஸ்வின் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். இந்தப் போட்டியில் சாஹாவுக்குப் பதிலாக பார்தீவ் படேல் களமிறங்குகிறார். 

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் உமேஷ் யாதவுக்குப் பதிலாக புவனேஸ்வர் குமார் இடம்பெறக்கூடும். சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வினும் ரவீந்திர ஜடேஜாவும் சிறப்பாக செயல்படும்பட்சத்தில் இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுக்க முடியும். புதுமுகம் ஜெயந்த் யாதவுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணி பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் வலுவாகவே இருந்தாலும் அந்த அணியால் இந்தத் தொடரில் வெற்றியைத் தொடமுடியவில்லை. கேப்டன் குக், ஹஸீப் ஹமீது, ஜோ ரூட், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பேட்டிங்கில் மிகப்பெரிய பலம் சேர்க்கின்றனர். டக்கெட்டுக்குப் பதிலாக ஜோஸ் பட்லெர் அணியில் விளையாடவுள்ளார். இங்கிலாந்து அணியில் எப்படியும் மூன்று மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com