

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
அடிலெய்டில் சனிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 149 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 442 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் ஷான் மார்ஷ் 15 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 126 ரன்கள், நாதன் லயன் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து ஞாயிற்றுக்கிழமை ஆட்டநேர முடிவில் 9.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் எடுத்தது. அலாஸ்டர் குக் 11, ஜேம்ஸ் வின்ஸ் ரன்கள் இன்றி களத்தில் இருந்தார்கள். முன்னதாக ஸ்டோன்மேன் 18 ரன்களில் வீழ்ந்தார்.
இன்று தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 76.1 ஓவர்களில் 227 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஓவர்டன் 41 ரன்களும் குக் 37 ரன்களும் எடுத்தார்கள். ஆஸ்திரேலியத் தரப்பில் நாதன் லயன் 4 விக்கெட்டுகளும் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார்கள். மொயீன் அலி 25 ரன்களில் இருந்தபோது பந்துவீசிய லயன், அற்புதமாக கேட்ச் பிடித்து அசத்தினார்.
இங்கிலாந்து அணி ஃபாலோ ஆன் பெற்றாலும் ஆஸ்திரேலியா மீண்டும் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.