முதல் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ள தென் ஆப்பிரிக்க அணி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
முதல் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதையடுத்து 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது.

ஜனவரி 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை முதல் டெஸ்ட், ஜனவரி 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 2-ஆவது டெஸ்ட் மற்றும் ஜனவரி 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை 3-ஆவது டெஸ்ட் போட்டியும் நடைபெறவுள்ளது.

இந்த டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி டிசம்பர் 4-ந் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்திய அணி விவரம் பின்வருமாறு:

விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், ஷிகர் தவன், கே.எல்.ராகுல், சேத்தேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே (துணைக் கேப்டன்), ரோஹித் ஷர்மா, ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, பார்திவ் படேல், ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஜஸ்ப்ரீத் பும்ரா.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக நியூலான்ட்ஸில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ள தென் ஆப்பிரிக்க அணி வெள்ளிக்கிழமை (இன்று) அறிவிக்கப்பட்டது.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக விளையாடாமல் இருந்த டேல் ஸ்டெயின், டிவில்லியர்ஸ், மார்க்கல் ஆகியோர் தென் ஆப்பிரிக்க அணிக்கு திரும்பியுள்ளனர். மேலும் கடந்த 2015-ம் ஆண்டுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க அணி முழு பலத்துடன் களமிறங்கவுள்ளது. 

முதல் டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி விவரம் பின்வருமாறு:

ஃபாஃப் டூபிளெஸிஸ் (கேப்டன்), ஹசிம் ஆம்லா, டெம்பா பவுமா, குயின்டன் டி காக், தியூனிஸ் டி பிரயூன், ஏ.பி.டிவில்லியர்ஸ், டீன் எல்கர், கேசவ் மகாராஜ், ஏய்டன் மர்கராம், மார்னே மோர்கல், கிறிஸ் மோரிஸ், ஆன்டில் ஃபெலுக்வாயோ, வெரோன் ஃபிலாண்டர், காகிஸோ ரபாடா, டேல் ஸ்டெயின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com