

பார்வையற்றோர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
இதன்மூலம் தொடர்ந்து 2-ஆவது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியுள்ள இந்திய அணி, இந்த உலகக் கோப்பையின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்துள்ளது.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் குவித்தது. அந்த அணியில அதிகபட்சமாக பதார் முனி 57 ரன்கள் குவித்தார்.
இந்தியத் தரப்பில் கேதன் படேல், முகமது ஜாபர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ûஸ ஆடிய இந்திய அணி 17.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. இந்திய அணியில் அதிகபட்சமாக பிரகாஷ் ஜெயராமையா ஆட்டமிழக்காமல் 99 ரன்கள் குவித்தார்.
பாகிஸ்தான் வீரர் பதார் முனிர் 570 ரன்கள் குவித்ததன் மூலம் தொடர் நாயகன் விருதை வென்றார்.
இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி 9 ஆட்டங்களில் விளையாடி அதில் 8-இல் வெற்றி கண்டது. அதேநேரத்தில் பாகிஸ்தான் அணி, இறுதி ஆட்டத்தைத் தவிர எஞ்சிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் வாழ்த்து
உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: பார்வையற்றோர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வாகை சூடியிருப்பதால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளேன். இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள். இந்திய வீரர்களின் சாதனையை நினைத்து இந்தியாவே பெருமை கொள்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.