நெருக்கடியைச் சமாளிக்க அஸ்வினை அழைக்கவுள்ளார் கோலி!

தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது இந்தியா. அதில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும்...
நெருக்கடியைச் சமாளிக்க அஸ்வினை அழைக்கவுள்ளார் கோலி!

இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் அஸ்வினை இதுவரை இந்திய அணி பயன்படுத்தவில்லை. அவருக்குப் பதிலாக ஜடேஜா இந்திய அணியின் பிராதன சுழற்பந்துவீச்சாளராக உள்ளார்.

ஆனால் நேற்றைய சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவைத் தோற்கடித்தது இலங்கை. 
ஷிகர் தவன் 128 பந்துகளில் 1 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 125 ரன்கள் குவித்தபோதும், இந்திய அணி வெற்றி பெற முடியாமல் போனது ஏமாற்றமாக அமைந்தது.

321 ரன்கள் எடுத்தும் இந்திய அணியால் வெற்றிபெறமுடியாமல் போனது. அதிலும் அஸ்வினுக்குப் பதிலாக இந்திய அணியில் வாய்ப்பு பெற்ற ஜடேஜா, பாண்டியா ஆகிய இருவரும் ரன்களை வாரி வழங்கினார்கள். உமேஷ் யாதவ் பந்துவீச்சும் நேற்று மோசமாக அமைந்தது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது இந்தியா. அதில் வென்றால் மட்டுமே இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற முடியும். இந்த நெருக்கடியான நிலையில் ஞாயிறு போட்டியில் அஸ்வின் நிச்சயம் இடம்பெறுவார் என்று தகவல் தெரிவிக்கின்றன. 

ஜடேஜா, பாண்டியா, உமேஷ் யாதவ் ஆகிய மூவரில் ஒருவருக்குப் பதிலாக அஸ்வின் அணியில் இடம்பெறக்கூடும் எனத் தெரிகிறது. அணிக்கு ஆல்ரவுண்டர்கள் தேவை என்பதால் உமேஷ் யாதவுக்குப் பதிலாக அஸ்வின் அணியில் இடம்பிடிப்பார் என்று அறியப்படுகிறது. அதேசமயம் வேகப்பந்துவீச்சை மேலும் பலப்படுத்த ஷமியும் அணியில் சேர்க்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

நேற்றைய போட்டியில் இலங்கை அணியில் மூன்று இடக்கை பேட்ஸ்மேன்கள் விளையாடினார்கள். ஆனாலும் அஸ்வினுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இது கடும் விமரிசனங்களை உருவாக்கியுள்ளது. மூவரும் இளம் பேட்ஸ்மேன்கள். அவர்களால் அஸ்வினின் பந்துவீச்சை எதிர்கொள்ள நிச்சயம் சிரமமாக இருந்திருக்கும். வலுவான பேட்டிங்கைக் கொண்ட இந்திய அணி நிச்சயம் அஸ்வினை அணியில் சேர்த்திருக்கவேண்டும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். 

தென் ஆப்பிரிக்க அணி சுழற்பந்துவீச்சைச் சமாளிக்கத் தடுமாறும் என்பதால் அடுத்தப் போட்டியில் அஸ்வின் நிச்சயம் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைக்கு எதிரான தோல்வியால் ஷமியும் அணியில் நுழைய வாய்ப்புண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com