மும்பைக்கு 8 வெற்றி பெங்களூருக்கு 8ஆவது தோல்வி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 38-ஆவது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ûஸ தோற்கடித்தது மும்பை இண்டியன்ஸ்.
பந்தை பவுண்டரிக்கு விரட்டுகிறார் ரோஹித் சர்மா.
பந்தை பவுண்டரிக்கு விரட்டுகிறார் ரோஹித் சர்மா.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 38-ஆவது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ûஸ தோற்கடித்தது மும்பை இண்டியன்ஸ்.
அதன் கேப்டன் ரோஹித் சர்மா 37 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இந்த சீசனில் 8-ஆவது வெற்றியைப் பெற்றுள்ள மும்பை அணி, பிளே ஆப் சுற்று வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்துவிட்டது. அதேநேரத்தில் 8-ஆவது தோல்வியை சந்தித்த பெங்களூர் அணி, பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்தது.
மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பெங்களூர் அணியில் கேப்டன் விராட் கோலியும், மன்தீப் சிங்கும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
மெக்லீனாகான் வீசிய முதல் ஓவரில் மன்தீப் சிங் இரு பவுண்டரிகளை விரட்டினார். மறுமுனையில் எச்சரிக்கையாக விளையாடிய கேப்டன் கோலி, கரண் சர்மா வீசிய 4-ஆவது ஓவரில் சிக்ஸரை விளாச, அதே ஓவரில் மன்தீப் சிங் ஆட்டமிழந்தார். அவர் 13 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து டிராவிஸ் ஹெட் களமிறங்க, கோலி 14 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 20 ரன்கள் சேர்த்து மெக்லீனாகான் பந்துவீச்சில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் ஆனார். இதன்பிறகு களம்புகுந்த டிவில்லியர்ஸ், வந்த வேகத்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை பறக்கவிட, 6 ஓவர்களில் 52 ரன்களை எட்டியது பெங்களூர்.
தொடர்ந்து வேகம் காட்டிய டிவில்லியர்ஸ், கிருனால் பாண்டியா பந்துவீச்சில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை விரட்ட, டிராவிஸ் ஹெட் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கேதார் ஜாதவ் களமிறங்க, கிருனால் பாண்டியா வீசிய 13-ஆவது ஓவரில் சிக்ஸரை விளாசிய கையோடு, பூம்ராவிடம் கேட்ச் ஆனார் டிவில்லியர்ஸ். அவர் 27 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து வந்த ஷேன் வாட்சன் 3 ரன்களில் நடையைக் கட்ட, கேதார் ஜாதவுடன் இணைந்தார் பவன் நெகி. இந்த ஜோடி அதிரடியாக ரன் சேர்க்க, பெங்களூரின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. மலிங்கா வீசிய 18-ஆவது ஓவரில் இரு சிக்ஸர்களை விளாசிய பவன் நெகி, பூம்ரா வீசிய அடுத்த ஓவரில் மேலும் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார்.
தொடர்ந்து வேகம் காட்டிய பவன் நெகி, மெக்லீனாகான் வீசிய கடைசி ஓவரில் பவுண்டரியை விளாசிய கையோடு ஆட்டமிழந்தார். அவர் 23 பந்துகளில் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 35 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து கேதார் ஜாதவ் 28 ரன்களிலும் (22 பந்துகளில்), அரவிந்த் ரன் ஏதுமின்றியும் வெளியேற, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் குவித்தது பெங்களூர்.
மும்பைத் தரப்பில் மெக்லீனாகான் 3 விக்கெட்டுகளையும், கிருனால் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ரோஹித் அரை சதம்: பின்னர் ஆடிய மும்பை அணி ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே பார்த்திவ் படேலின் விக்கெட்டை இழக்க, ஜோஸ் பட்லருடன் இணைந்தார் நிதிஷ் ராணா. அதிரடியாக ஆடிய இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 7.2 ஓவர்களில் 61 ரன்கள் சேர்த்தது. ஜோஸ் பட்லர் 21 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 33, நிதிஷ் ராணா 27 ரன்கள் (28 பந்துகளில்) எடுத்தனர்.
இதையடுத்து கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இணைந்தார் கிரண் போலார்ட். இந்த ஜோடி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தது. போலார்ட் 17 ரன்களில் (13 பந்துகள்) ஆட்டமிழக்க, பின்னர் வந்த கிருனால் பாண்டியா 2 ரன்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார்.
இதையடுத்து கரண் சர்மா களமிறங்க, கடைசி 6 ஓவர்களில் மும்பையின் வெற்றிக்கு 59 ரன்கள் தேவைப்பட்டன. இதையடுத்து அதிரடியில் இறங்கிய ரோஹித் சர்மா, அனிகெட் செளத்ரி வீசிய 15-ஆவது ஓவரில் இரு பவுண்டரிகளை விளாச, வாட்சன் வீசிய 17-ஆவது ஓவரில் கரண் சர்மா (9 ரன்கள்) ஆட்டமிழந்தார். இதையடுத்து ஹார்திக் பாண்டியா களமிறங்க, கடைசி 3 ஓவர்களில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. செளத்ரி வீசிய 18-ஆவது ஓவரில் பாண்டியா சிக்ஸரை விளாச, அந்த ஓவரில் 12 ரன்கள் கிடைத்தன. இதனால் மும்பை அணி நெருக்கடியிலிருந்து மீண்டது.
அரவிந்த் வீசிய அடுத்த ஓவரில் சிக்ஸரை விளாசிய ரோஹித் சர்மா, 34 பந்துகளில் அரை சதம் கண்டார். கடைசி ஓவரில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட, வாட்சன் வீசிய அந்த ஓவரில் பவுண்டரியை விளாசி ஆட்டத்தை முடித்தார் ரோஹித் சர்மா. மும்பை அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்து வெற்றி கண்டது. ரோஹித் சர்மா 37 பந்துகளில் 56, பாண்டியா 9 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பெங்களூர் தரப்பில் பவன் நெகி 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


புள்ளிகள் பட்டியல்


அணிகள் போட்டி வெற்றி தோல்வி முடிவு இல்லை புள்ளி
மும்பை 10 8 2 } 16
கொல்கத்தா 10 7 3 } 14
ஹைதராபாத் 10 6 3 1 13
புணே 10 6 4 } 12
பஞ்சாப் 9 4 5 } 8
குஜராத் 10 3 7 } 6
பெங்களூர் 11 2 8 1 5
டெல்லி 8 2 6 } 4

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com