சச்சின் சாதனையை கோலி எட்டிவிடுவாரா? சர்வதேச கிரிக்கெட்டில் 50-வது சதம்!

சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் எடுத்துள்ளார். விராட் கோலி இன்றைய சதத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 50-வது சதத்தை...
சச்சின் சாதனையை கோலி எட்டிவிடுவாரா? சர்வதேச கிரிக்கெட்டில் 50-வது சதம்!

கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி அபாரமாக விளையாடி சதமெடுத்துள்ளார். இது அவருடைய 18-வது டெஸ்ட் சதமாகும். 

சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் எடுத்துள்ளார். இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி இன்றைய சதத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 50-வது சதத்தை எடுத்துள்ளார்.

29 வயது கோலி - டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றிலும் சேர்த்து மேலும் 350 இன்னிங்ஸ்களை விளையாடி, தற்போது உள்ளதுபோல ஒவ்வொரு வருடமும் சிறப்பாக விளையாடுகிறபட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 100 சதங்களுக்கும் அதிகமாக எடுத்து சச்சின் சாதனையை முறியடிக்க வாய்ப்புண்டு. 

அதிக சர்வதேச சதங்கள்

100 - டெண்டுல்கர், 782 இன்னிங்ஸ்கள்
71 - பாண்டிங், 668 இன்னிங்ஸ்கள்
63 - சங்கக்காரா, 666 இன்னிங்ஸ்கள்
62 - காலிஸ், 617 இன்னிங்ஸ்கள்
54 - ஆம்லா, 384 இன்னிங்ஸ்கள்
54 - ஜெயவர்தனே, 725 இன்னிங்ஸ்கள்
53 - லாரா, 521 இன்னிங்ஸ்கள்
50 - விராட் கோலி, 348 இன்னிங்ஸ்கள்   

கோலியின் இன்றைய சதம்

50-வது சர்வதேச சதம்
ஒரு கேப்டனாக 21-வது சதம் 
18-வது டெஸ்ட் சதம் 
டெஸ்ட் போட்டியில் கேப்டனாக 11-வது சதம் 
இந்த வருடத்தின் 9-வது சதம் 

50-வது சர்வதேச சதத்தை விரைவாக எடுத்த வீரர்கள் 

348 இன்னிங்ஸ்கள் – ஆம்லா / கோலி 
376 இன்னிங்ஸ்கள் – சச்சின் டெண்டுல்கர் 
420 இன்னிங்ஸ்கள் – ரிக்கி பாண்டிங் 
465 இன்னிங்ஸ்கள் – பிரையன் லாரா 

2017-ல் சர்வதேச கிரிக்கெட்டில் கோலி 

9 சதங்கள் - ஒரு வருடத்தில் கோலி எடுத்த அதிக சதங்கள் 
5 பூஜ்ஜியங்கள் - ஒரு வருடத்தில் அதிக தடவை எடுத்த பூஜ்ஜியங்கள்

கோலியின் சர்வதேச சதங்கள்

கேப்டனாக - 98 இன்னிங்ஸ்களில் 21 சதங்கள் ( ஒரு சதத்துக்கு 4.66 இன்னிங்ஸ்கள்)

அதற்கு முன்பு - 250 இன்னிங்ஸ்களில் 29 சதங்கள் ( ஒரு சதத்துக்கு 8.62 இன்னிங்ஸ்கள்)

ஒரு கேப்டனாக அதிக சதங்கள் எடுத்தவர்கள்

41 பாண்டிங் (376 இன்னிங்ஸ்கள்)
33 தெ.ஆ. வீரர் ஸ்மித் (368 இன்னிங்ஸ்கள்)
21 கோலி (98 இன்னிங்ஸ்கள்)

ஒரு வருடத்தில் அதிக சதங்கள் எடுத்தவர்கள்

9 பாண்டிங், 2005
9 தெ.ஆ. வீரர் ஸ்மித், 2005
9 பாண்டிங், 2006
9 கோலி, 2017

சர்வதேச கிரிக்கெட்டில் கோலியின் வரவுக்குப் பிறகு அதிக சதங்கள் எடுத்தவர்கள் 

50 கோலி 

49 ஆம்லா 

37 டிவில்லியர்ஸ்

36 சங்கக்காரா

34 வார்னர்

* 2012 மற்றும் 2014 ஆகிய இரு வருடங்களிலும் அதிகபட்சமாக தலா 8 சதங்கள் எடுத்திருந்தார் கோலி. இந்நிலையில் இன்றைய சதத்தின் மூலம் 2017-ல் 9 சதங்கள் எடுத்துள்ளார். 

ஈடன் கார்டன்ஸில் விராட் கோலி (டெஸ்ட்)

6, 20, 3, 9, 45, 0, 104* 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com