இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் & டி20 போட்டிகள்: நியூஸிலாந்து அணி அறிவிப்பு!

இந்தியாவுக்கு எதிரான 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ள நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது...
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் & டி20 போட்டிகள்: நியூஸிலாந்து அணி அறிவிப்பு!

இந்தியாவுக்கு எதிரான 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ள நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, நியூஸிலாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் அக்டோபர் 22 முதல் நவம்பர் 7 வரை நடைபெறவுள்ளன. ஒருநாள் போட்டிகள் மும்பை, புணே, கான்பூர் ஆகிய நகரங்களிலும், டி20 போட்டிகள் டெல்லி, ராஜ்கோட், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களிலும் நடைபெறவுள்ளன.

ஒருநாள் அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாட் ஆஸ்லே, டிரென்ட் போல்ட், காலின் டி கிராண்ட்ஹோம், மார்ட்டின் கப்டில், மேட் ஹென்றி, டாம் லதாம், ஹென்றி நிகோலஸ், ஆடம் மில்னி, கோலின் மன்றோ, கிளென் பிலிப்ஸ், மிட்செல் சேன்ட்னர், டிம் செளதி, ராஸ் டெய்லர், ஜார்ஜ் வொர்கர்.

டி20 அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாட் ஆஸ்லே, டிரென்ட் போல்ட், டாம் ப்ரூஸ், காலின் டி கிராண்ட்ஹோம், மார்ட்டின் கப்டில், மேட் ஹென்றி, டாம் லதாம், ஹென்றி நிகோலஸ், ஆடம் மில்னி, கோலின் மன்றோ, கிளென் பிலிப்ஸ், மிட்செல் சேன்ட்னர், இஷ் சோதி, டிம் செளதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com