சச்சின் சாதனைகளை கோலி தாண்டுவாரா? புள்ளிவிவரங்கள் சொல்லும் கணிப்புகள்!

ஒருவேளை கோலியும் சச்சின் போல 452 இன்னிங்ஸ்கள் ஆட நேர்ந்தால் இதே வேகத்தில் சதங்கள் அடித்தால்...
சச்சின் சாதனைகளை கோலி தாண்டுவாரா? புள்ளிவிவரங்கள் சொல்லும் கணிப்புகள்!

இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், 5 ஆட்டங்களைக் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் இலங்கையை 5-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்துள்ளது இந்தியா.

இரு அணிகளுக்கு இடையே கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை பகலிரவாக நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 46.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்து வென்றது.

இந்திய கேப்டன் விராட் கோலி 116 பந்துகளில் 9 பவுண்டரிகள் விளாசி 110 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார்.

இலங்கைக்கு எதிராக சதமடித்த கோலி, ஒரு நாள் போட்டியில் தனது 30-வது சதத்தைப் பதிவு செய்தார். இதன்மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசியவர்கள் வரிசையில் 2-வது இடத்தை ரிக்கி பாண்டிங்குடன் பகிர்ந்துள்ளார்.

கோலி 28 வயதில் இச்சாதனையைப் புரிந்துள்ளார். இதையடுத்து இனிவரும் காலகட்டங்களில் சச்சினின் அதிக சதங்கள் உள்ளிட்ட பல சாதனைகளை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. புள்ளிவிவரங்களும் அதற்கான சாத்தியங்களை எடுத்துரைக்கின்றன. எதிர்பார்ப்பை ஈடு செய்வாரா கோலி?

ஒருநாள்: சதங்கள்

சச்சின் - 49

கோலி/பாண்டிங் - 30

186 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு - ஒருநாள் சதங்கள்

கோலி - 30 சதங்கள்
சச்சின் - 16 சதங்கள்
பாண்டிங் - 15 சதங்கள்

குறைந்த இன்னிங்ஸ்களில் 30 ஒருநாள் சதங்கள் எடுத்த வீரர்கள்

186 கோலி
267 டெண்டுல்கர்
349 பாண்டிங்

ஒருநாள் போட்டி: 28 வயது 302 நாள்களின்போது எடுத்த ரன்கள்

சச்சின் - 278 இன்னிங்ஸ்கள் - 11069 ரன்கள், சராசரி - 43.92, சதங்கள் - 31, அரை சதங்கள் - 55
கோலி - 186 இன்னிங்ஸ்கள் - 8537 ரன்கள், சராசரி - 55.75, சதங்கள் - 30, அரை சதங்கள் - 44

* சச்சின் 452 இன்னிங்ஸ்கள் - 49 சதங்கள்
கோலி - 30 சதங்கள்

ஒருவேளை கோலியும் சச்சின் போல 452 இன்னிங்ஸ்கள் ஆட நேர்ந்தால் இதே வேகத்தில் சதங்கள் அடித்தால் 452 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு 73 சதங்கள் அடித்திருக்க வாய்ப்புண்டு!

கோலி: சதங்கள்

முதல் சதம்: 2009-ல் இலங்கைக்கு எதிராக
10-வது சதம்: 2012-ல் இலங்கைக்கு எதிராக 
20th: 2014-ல் மே.இ. எதிராக 
30th: 2017-ல் இலங்கைக்கு எதிராக

2017: ஒருநாள் ரன்கள்

கோலி - 1017 ரன்கள்
டுபிளெஸ்ஸிஸ் - 814 ரன்கள்
ஜோ ரூட் - 785 ரன்கள்

ஓர் ஆண்டில் அதிக சராசரி கொண்டிருந்த வீரர்கள்

92.45 கோலி, 2017
79.53 டிவில்லியர்ஸ், 2015
79.11 பாண்டிங், 2007
75.57 ஆம்லா, 2010
70.47 தோனி, 2009

வெற்றிகரமான சேஸிங்குகளில் கடந்த ஒரு வருடத்தில் கோலியின் ஸ்கோர்கள்

85*
164*
122
76*
96*
111*
82*
4
3
110*

அதிகமுறை அடுத்தடுத்து சதங்கள் அடித்த வீரர்கள்

டி வில்லியர்ஸ் - 6 தடவை
கோலி - 5 தடவை
அன்வர் - 4 தடவை

உள்ளூர் அணிக்கு எதிராக அதிகமுறை சதமடித்த வெளிநாட்டு வீரர்கள்

டி வில்லியர்ஸ் - 5, இந்தியாவுக்கு எதிராக

சச்சின் - 4, இலங்கைக்கு எதிராக

கோலி - 4, இலங்கைக்கு எதிராக

ஒருநாள் தொடரில் அதிகமுறை 300+ ரன்கள் எடுத்த வீரர்கள்

கோலி, டிராவிட் - 5 தடவை
குயிண்டன் டி காக், ரோஹித் சர்மா - 4 தடவை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com