பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனாவின் குழந்தையின் முதல் போட்டோ: இணையத்தின் புதிய வைரல்! 

பிரபல அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வெளியிட்டுள்ள அவரது குழந்தையின் முதல் போட்டோ தற்பொழுது இணையத்தின் வைரலாகப் பரவி வருகிறது.
பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனாவின் குழந்தையின் முதல் போட்டோ: இணையத்தின் புதிய வைரல்! 

நியூயார்க்: பிரபல அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வெளியிட்டுள்ள அவரது குழந்தையின் முதல் போட்டோ தற்பொழுது இணையத்தின் வைரலாகப் பரவி வருகிறது.

உலகப் புகழ் பெற்ற அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் டென்னிஸ் போட்டித் தொடர் ஒன்றில் விளையாட இத்தாலியின் ரோம் நகருக்கு சென்ற பொழுது 'ரெடிட்' சமூக வலைதளத்தின் இணை இயக்குனர் அலெக்சிஸ் ஓஹானியன் என்பவரை சந்தித்தார். அவர்கள் இடையே காதல் மலர்ந்தது.

ஒன்றாக வசித்த அவர்களுக்கு கடந்த 1-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு தனது குழந்தை உடனான முதல் படத்தை செரீனா தற்பொழுது சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். அத்துடன் குழந்தையுடன் இருக்கும் 2 நிமிட வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவரது கர்ப்பக் கால புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த பதிவில் அவர் தனது குழந்தையை ஜூனியர் அலெக்ஸிஸ் ஒலிம்பியா ஓஹானியன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இணையத்தில் தற்பொழுது அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகப் பரவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com