ரசிகர்களின் ஆசையை லாபமாக்கிக் கொள்கிறதா?: டிக்கெட் விலை குறித்த புகார்களுக்கு சிஎஸ்கே விளக்கம்!

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள ஆட்டங்களுக்குக் குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ. 1300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால்...
ரசிகர்களின் ஆசையை லாபமாக்கிக் கொள்கிறதா?: டிக்கெட் விலை குறித்த புகார்களுக்கு சிஎஸ்கே விளக்கம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணி, சென்னையில் விளையாடவுள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து டிக்கெட்டுகளை வாங்கிச் செல்கிறார்கள். இதனால் அனைத்து ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகளும் எளிதில் விற்றுவிடும் என்று தெரிகிறது. 

எனினும் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள ஆட்டங்களுக்குக் குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ. 1300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற நகரங்களை விடவும் சென்னையில் ஐபிஎல் டிக்கெட் விலை அதிகமாக உள்ளதாக ரசிகர்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் தளத்தில், அடுத்தவன் ஆசைய எப்பிடி பணம் ஆக்கி லாபம் பண்றது??? இவுங்கல @ChennaiIPL பாத்து கத்துகிடனும் #unfairticketpricing #IPL2018 என்று ஒரு ரசிகர் ட்வீட் செய்திருந்தார். வழக்கமாக, இதுபோன்ற ரசிகர்களின் புகார் ட்வீட்கள் கண்டுகொள்ளாமல் விடப்படும். ஆனால் ஆச்சர்யப்படும் விதத்தில் சிஎஸ்கே நிர்வாகம் இந்தப் புகாருக்கு ட்விட்டர் வழியாகப் பதில் அளித்துள்ளது.

இதற்காக வருந்துகிறோம். ஜிஎஸ்டி + உள்ளூர் வரியுடன் சேர்த்து வசூலிப்பதால் கட்டணம் அதிகமாக உள்ளது. மற்ற ஐபிஎல் மையங்கள் ஜிஎஸ்டி மட்டும்தான் வசூலிக்கிறது. இங்கு நாங்கள் உள்ளூர் வரியையும் செலுத்தவேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளது. எதன் அடிப்படையில் ரூ. 1300 என்கிற மற்றொரு கேள்விக்கு சிஎஸ்கேவின் பதில்:

அடிப்படை விலை - ரூ. 762 + உள்ளூர் கேளிக்கை வரி ரூ. 254 + ஜிஎஸ்டி ரூ. 284 = ரூ. 1300.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com