முடிந்தது டிஎன்பிஎல் 2018: ஐபிஎல் வாய்ப்பு யார் யாருக்குக் கிடைக்கும்?

இந்த டிஎன்பிஎல் போட்டியில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் மீது கவனம் குவிந்துள்ளது....
முடிந்தது டிஎன்பிஎல் 2018: ஐபிஎல் வாய்ப்பு யார் யாருக்குக் கிடைக்கும்?

திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் இறுதி ஆட்டத்தில் மதுரை பேந்தர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்-சங்கர் சிமெண்ட் சார்பில் டிஎன்பிஎல் லீக் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி லீக் துவக்க சுற்று ஆட்டங்கள் சென்னை, திருநெல்வேலி, திண்டுக்கலில் தொடங்கி நடைபெற்று வந்தன. இந் நிலையில் 31 ஆட்டங்கள் முடிந்து புள்ளிகள் அடிப்படையில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற மதுரை பேந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றன. 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து திண்டுக்கல் அணி 117 ரன்களையே எடுத்தது. மதுரை தரப்பில் அபிஷேக் தன்வர் 4-30, லோகேஷ் ராஜ் 3-31, வருண் சக்கரவர்த்தி 2-9 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 118 ரன்கள் இலக்குடன் மதுரை பேந்தர்ஸ் அணி களமிறங்கியது. 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து மதுரை அணி 119 ரன்களுடன் வெற்றி பெற்றது.

திண்டுக்கல் தரப்பில் சிலம்பரசன் 3-23 விக்கெட்டை வீழ்த்தினார். அருண் கார்த்திக் போட்டி நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். முதன்முறையாக மதுரை பேந்தர்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.

இதையடுத்து இந்த டிஎன்பிஎல் போட்டியில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் மீது கவனம் குவிந்துள்ளது. டிஎன்பிஎல் போட்டியினால் சிலருக்கு ஐபிஎல் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அதேபோல இந்தமுறையும் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களுக்கு ஐபிஎல் போட்டியில் வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஎன்பில்: அதிக ரன்கள்

  பெயர் ஆட்டங்கள்  ரன்கள்  ஸ்டிரைக்   ரேட் அதிக   ரன் சிக்ஸர்கள் 
 1 

 அருண் கார்த்திக்   (மதுரை)

 10 472 153.74  85* 23
2

ஜெகதீசன்   (திண்டுக்கல்)

 9 396 130.69 68* 10
3 அனிருதா   (காரைக்குடி) 8 347 154.22 93* 20
4 ஷாருக் கான்   (கோவை) 9 325 141.30 86 13
5 ஆர். விவேக்   (திண்டுக்கல்) 9 262 209.60 70* 22

டிஎன்பில்: அதிக விக்கெட்டுகள்

  பெயர் ஆட்டங்கள்  விக்கெட்டுகள்  சிறந்த   பங்களிப்பு
 1  அபிஷேக் தன்வார் (மதுரை) 10 15 4/30
 2

அதிசயராஜ் டேவிட்சன்   (தூத்துக்குடி)

 7 13  3/35
 3 டி. நடராஜன் (கோவை) 8 12 4/24
 4 அஜித் ராம் (கோவை) 7 11 3/16
 5 ராஜேஷ் (கோவை) 9 11 3/22

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com