இணைந்த கைகள்: சாதனை நிகழ்த்திய ரிஷப் பந்த் & கே.எல். ராகுல்!

இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டும் ராகுலும் ஓர் சாதனை நிகழ்த்தியுள்ளார்கள்.
இணைந்த கைகள்: சாதனை நிகழ்த்திய ரிஷப் பந்த் & கே.எல். ராகுல்!

டெஸ்ட் தொடரில் 2-0 என்ற இங்கிலாந்து முன்னிலை பெற்ற நிலையில் மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் டிரெண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 329 ரன்களையும், இங்கிலாந்து 161 ரன்களையும் எடுத்தன. இதைத் தொடர்ந்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் கோலி (103), புஜாரா (72), பாண்டியா (52) ஆகியோரின் அபார ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் நேற்றைய ஆட்டத்தின் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்து தோல்வியின் விளிம்பில் உள்ளது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டும் ராகுலும் ஓர் சாதனை நிகழ்த்தியுள்ளார்கள். 

இந்த டெஸ்டில் இதுவரை 7 கேட்சுகளைப் பிடித்துள்ளார் கே.எல். ராகுல். விக்கெட் கீப்பர் அல்லாத ஒரு வீரர் இங்கிலாந்தில் அதிக கேட்சுகள் பிடிப்பது இப்போதுதான். இந்திய ஃபீல்டர்களில் ஒரே டெஸ்டில் அதிக கேட்சுகள் பிடித்தவர்களில் ராகுலுக்கு இரண்டாம் இடம். 2015 கேலே டெஸ்டில் ரஹானே 8 கேட்சுகள் பிடித்ததே சாதனையாக உள்ளது. 

இந்த டெஸ்டில் இதுவரை ராகுலும் ரிஷப் பந்தும் தலா 7 கேட்சுகள் பிடித்துள்ளார்கள். இதுபோல ஓர் அணியில் உள்ள இரு வீரர்கள் 7 அல்லது அதற்கு அதிகமான கேட்சுகள் பிடித்திருப்பது இதுவே முதல்முறை. 

டெஸ்ட் போட்டிகளில் ஸ்லிப் கேட்சுகளைக் கோட்டை விடுவது வாடிக்கையாக உள்ள சமயத்தில் ராகுல் இதுபோல 7 கேட்சுகள் பிடித்து சாதனை செய்திருப்பது இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முக்கியக் காரணமாக அமையவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com