3-ஆவது வெற்றியா ? முதல் வெற்றியா?: இந்தியா- தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3-ஆவது ஆட்டம் கேப் டவுனில் புதன்கிழமை நடைபெறுகிறது.
3-ஆவது வெற்றியா ? முதல் வெற்றியா?: இந்தியா- தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்
Updated on
2 min read

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3-ஆவது ஆட்டம் கேப் டவுனில் புதன்கிழமை நடைபெறுகிறது.
மொத்தம் 6 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 2 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளது. எனவே, கேப் டவுன் ஆட்டத்தில் இந்தியா தனது 3-ஆவது வெற்றியையும், தென் ஆப்பிரிக்கா தனது முதல் வெற்றியையும் பதிவு செய்யும் முனைப்பில் உள்ளன.
டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியதைப் போல, ஒருநாள் தொடரில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. செஞ்சுரியனில் நடைபெற்ற 2-ஆவது ஆட்டத்தில் கண்ட வெற்றியின் மூலமாக ஒருநாள் போட்டி அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
கேப் டவுன் வெற்றியானது தொடரை வெல்வதற்கான வாய்ப்பை இந்தியாவுக்கு நெருக்கமாகக் கொண்டு வருவதுடன், ஒருநாள் அணிகளுக்கான தரவரிசை புள்ளிகளில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான வித்தியாசத்தை அதிகரிக்க உதவும். மாறாக, இந்தியா இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டால், மீண்டும் 2-ஆவது இடத்துக்கு தள்ளப்படும்.
இந்தியாவுக்கான சாதகமாக, தென் ஆப்பிரிக்க அணியின் குறிப்பிடத்தக்க வீரர்களான டி வில்லியர்ஸ், டூ பிளெஸ்ஸிஸ், குவின்டன் டி காக் ஆகியோர் காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை. இதில் டி வில்லியர்ஸ் 4-ஆவது ஆட்டத்தில் களம் காணுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், டூ பிளெஸ்ஸிஸ் மற்றும் டி காக் தொடர் முழுவதிலும் இருந்து விலகியுள்ளனர்.
இந்திய அணியை பொருத்த வரையில், டெஸ்ட் போட்டிகளில் சோபிக்காத ரஹானே, ஒருநாள் ஆட்டத்தில் ஃபார்முக்கு திரும்பியிருப்பது அணிக்கு கூடுதல் பலம். தவன்-ரோஹித் கூட்டணி அருமையான தொடக்கத்தை தரும் என எதிர்பார்க்கலாம். மிடில் ஆர்டருக்கு கோலி பலம் சேர்க்கிறார். சுழற்பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்க வீரர்களை திணறடிக்க யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவும், வேகப்பந்துவீச்சுக்கு பும்ரா, புவனேஷ்வர் உள்ளிட்டோரும் தயாராக உள்ளனர்.

நியூலேண்ட்ஸில்...
 3-ஆவது ஆட்டம் நடைபெறும் கேப் டவுனில் உள்ள நியூலேண்ட் மைதானத்தில், கடந்த 1992 முதல் இதுவரை 4 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்தியா, 2 வெற்றி, 2 தோல்விகளைப் பதிவு 
செய்துள்ளது.

பலமான பயிற்சியில்...
முதல் 2 ஒருநாள் ஆட்டங்களிலும் இந்தியாவின் சுழற்பந்து வீச்சிலேயே தென் ஆப்பிரிக்க விக்கெட்டுகள் சரிந்தன. இரு ஆட்டங்களிலுமாக யுவேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் மொத்தம் 13 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதை தீவிரமாக கருத்தில் கொண்ட தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள், செவ்வாய்க்கிழமை வலைப் பயிற்சியின்போது 5 சுழற்பந்துவீச்சாளர்களைக் கொண்டு பயிற்சி எடுத்துக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com