ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து நிதான ஆட்டம்!

39 ரன்களில் உறுதியுடன் விளையாடி வந்த குக்கின் விக்கெட்டை வீழ்த்தினார் ஹேஸில்வுட்...
ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து நிதான ஆட்டம்!
Updated on
1 min read

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று தொடங்கியுள்ளது. 

இத்தொடரின் முதல் 3 ஆட்டங்களில் வென்று ஆஸ்திரேலியா ஏற்கெனவே தொடரை கைப்பற்றிய நிலையில், 4-ஆவது ஆட்டத்தை டிரா செய்தது இங்கிலாந்து. கடைசி ஆட்டத்திலும் இங்கிலாந்தை வீழ்த்த ஆஸ்திரேலியா முனைப்புடன் உள்ளது. அதேநேரம், ஆறுதல் வெற்றியாவது அடைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இங்கிலாந்து.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

மழையால் ஆட்டம் தாமதமாகத் தொடங்கியது. 24 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த ஸ்டோன்மேனை வீழ்த்தினார் கம்மின்ஸ். நிதானமாக விளையாடி வந்த குக்குக்கு நல்ல இணையாக இருந்த வின்ஸ், 25 ரன்களில் வெளியேறினார். அடுத்தச் சில ஓவர்களில் 39 ரன்களில் உறுதியுடன் விளையாடி வந்த குக்கின் விக்கெட்டை வீழ்த்தினார் ஹேஸில்வுட். ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சால் இங்கிலாந்து அணியால் விரைவாக ரன்கள் குவிக்கமுடியவில்லை. இதனால் மிகவும் கவனமுடன் விளையாடி வருகிறார்கள். 

தேநீர் இடைவேளையின்போது இங்கிலாந்து அணி, 42 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்துள்ளது. ரூட், மலன் 16 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com