உலகக் கோப்பை கால்பந்து 2018: அதிர்ச்சிகரமான முடிவுகள், கடைசி கட்ட கோல்கள்

அரையிறுதிச் சுற்றை உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2018 எட்டியுள்ள நிலையில் பல்வேறு அதிர்ச்சிகரமான முடிவுகள், கடைசி கட்ட கோல்கள், பெனால்டி வாய்ப்புகளால்
அபாரமாக விளையாடி வரும் குரோஷிய அணி.
அபாரமாக விளையாடி வரும் குரோஷிய அணி.
Updated on
2 min read

அரையிறுதிச் சுற்றை உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2018 எட்டியுள்ள நிலையில் பல்வேறு அதிர்ச்சிகரமான முடிவுகள், கடைசி கட்ட கோல்கள், பெனால்டி வாய்ப்புகளால் இதுவரை நடந்ததிலேயே சிறந்ததாக ரஷியாவில் நடந்து வரும் போட்டிகள் கருதப்படுகின்றன.
உலகிலேயே மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான உலகக் கோப்பை கால்பந்து கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்ப்பது வழக்கம். ரஷியாவில் ரூ.87 ஆயிரம் கோடி செலவில் நடத்தப்படும் இப்போட்டிகளில் 32 அணிகள் பங்கேற்றுள்ளன. கடந்த ஜூன் 14 முதல் தொடங்கி நடந்து வரும் போட்டிகளில் முதல் சுற்று, நாக் அவுட் சுற்று, காலிறுதிச் சுற்று முடிந்து அரையிறுதிச் சுற்றை எட்டியுள்ளன. இதில் பல்வேறு ஆட்டங்கள் மிகவும் கடும் போட்டிக்கு இடையில் முடிந்தன.
56 ஆட்டங்கள் முடிந்த நிலையில் 1-0 என்ற கோல் கணக்கிலேயே 14 ஆட்டங்களின் முடிவும், நாக் அவுட் சுற்றில் ஒரு ஆட்டமும் 1-0 எனவும் முடிந்தது. மேலும் முதல் சுற்று ஆட்டங்களில் 2-1 என்ற கோல் கணக்கில் 10 ஆட்டங்களும், நாக் அவுட் சுற்றில் ஒரு ஆட்டமும் முடிவுக்கு வந்தன.
26 ஆட்டங்கள் ஓரே ஒரு கோல் வித்தியாசத்தில் அணிகள் வென்றுள்ளன. 2 ஆட்டங்கள் மட்டுமே இரண்டு அல்லது அதற்கு மேலான கோல்கள் போடப்பட்டு அணிகள் வென்றன. நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ்-ஆர்ஜென்டீனா (4-3). பெல்ஜியம்-ஜப்பான் (3-2) ஆட்டங்கள் ஆகும். மேலும் 11 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. அவற்றில் 6 ஆட்டங்கள் 1-1 எனவும் ஓரே ஒரு ஆட்டம் 0-0 எனவும் முடிந்தன. இந்த போட்டியின் மூலம் எந்த அணியையும் எளிதாக கருதக் கூடாது என்ற அனுபவத்தை ஏற்படுத்தியது.
இறுதிச் சுற்று கடந்து வந்த பாதை: முதல் சுற்றில் பல்வேறு அதிர்ச்சி முடிவுகள் ஏற்பட்ட நிலையில் நாக் அவுட் சுற்று ஆர்வமிக்கதாக மாறியது. உருகுவே, போர்ச்சுகல், பிரான்ஸ், ஆர்ஜென்டீனா, பிரேஸில், மெக்ஸிகோ, பெல்ஜியம், ஜப்பான் போன்றவை ஒரு பக்கத்தில் இருந்தன. இந்த அணிகள் தங்களுக்குள் 10 உலகக் கோப்பைகளை வென்றுள்ளன. மறு பிரிவில் ஸ்பெயின், ரஷியா, குரோஷியா, டென்மார்க், ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து, கொலம்பியா, இங்கிலாந்து போன்றவை இருந்தன. இவை தங்களுக்குள் 2 உலகக் கோப்பையைகு மட்டுமே வென்றுள்ளன. எனினும் குரோஷியா, ரஷியா, ஸ்வீடன், இங்கிலாந்து அணிகளில் ஒன்று இறுதிக்கு முன்னேறும் என்ற சூழல் உள்ளது.
கணிக்க முடியாத ஆட்டங்கள்:
போட்டி துவங்கிய போது ஜெர்மனி, ஆர்ஜென்டீனா, பிரேஸில், ஸ்பெயின், பிரான்ஸ் பட்டம் வெல்லும் அணிகளாகவும், போர்ச்சுகல், பெல்ஜியம், இங்கிலாந்து போன்றவை அவற்றுக்கு அடுத்த நிலையிலும் கருதப்பட்டன. ஆனால் உலகக் கோப்பை பல்வேறு அதிர்ச்சிகள், சுவாரஸ்யங்களை கொண்டிருந்தது. 
நடப்பு சாம்பியன் ஜெர்மனி முதல் சுற்றில் வெளியேறியது. முன்னாள் சாம்பியன்கள் ஸ்பெயின்-ரஷியாவிடமும் தோற்று வெளியேறியது. முதல் சுற்றில் குரோஷியாவிடம் படுதோல்வி அடைந்த ஆர்ஜென்டீனா-பிரான்ஸிடம் நாக் அவுட் சுற்றில் தோல்வியுற்று வெளியேறியது. அதே நேரத்தில் வலிமையான போர்ச்சுகல் முதல் சுற்றில் ஈரானிடம் டிரா கண்ட நிலையில் அடுத்த சுற்றில்-உருகுவேயிடம் தோற்று வெளியேறியது. பிரேஸிலை காலிறுதியில் பெல்ஜியம் வெளியேற்றியது. உலகக் கோப்பையில் பெனால்டி ஷூட் அவுட்டில் 30 ஆண்டுகளாக வெல்லாமல் இருந்த இங்கிலாந்து எதிர்பாராத வகையில் கொலம்பியாவை நாக் அவுட் சுற்றில் வென்றது.
தாமதமாக போடப்பட்ட கோல்கள்: 56 ஆட்டஙகளில் அனைத்து அணிகளாலும் 146 கோல்கள் போடப்பட்டன. 32 அணிகளும் குறைந்தது ஒரு கோலாவது போட்டன. 146 கோல்களில் 23 கோல்கள் ஆட்டம் முடிய 90-ஆவது நிமிடத்தில் அல்லது கூடுதல் நேரத்தில் போடப்பட்டவையாகும். இது மொத்தம் அடிக்கப்பட்ட கோல்களில் 15.75 சதவீதம். இந்த 23 கோல்களில் 9 வெற்றி கோல்களாகும்.
சலேம் அல் தாசரி (எகிப்து), அஸிஸ் புகாதூஸ் (ஈரான் சேம்சைட் கோல்), குட்டின்ஹோ (பிரேஸில்), டோனி குரூஸ் (ஜெர்மனி), ஹாரி கேன் (இங்கிலாந்து) உள்ளிட்டோர் வெற்றிக் கோல்களை அடித்தனர்.
சில கோல்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றியும் அணிகள் தகுதி பெறுவதையும் பாதித்தன. குறிப்பாக நாசர் சாடியின் ஜப்பானுக்கு எதிராக போட்ட கோல் 2-0 ஜப்பான் முன்னிலை வகித்த போதும் வெளியேற வழிவகுத்தது. குரூப் ஜி பிரிவில் ஜப்பான் அணி குறைந்த அளவில் மஞ்சள் அட்டைகளை பெற்றதால் செனகல் அணியை மீறி தகுதி பெற்றது.
ஒவ்வொரு ஆட்டம் முடிந்த போதும் அவற்றில் எதை சிறந்தது எனக் கூறுவது என ரசிகர்கள் முழிக்கும் நிலை ஏற்பட்டது. காலிறுதி முடிந்து தற்போது 4 அணிகள் மட்டுமே போட்டியில் உள்ளன. 
வார் தொழில்நுட்பம் அறிமுகம்: உலகக் கோப்பையில் அதிகபட்ச பெனால்டி ஷூட் அவுட்டாக 1990, 1998, 2002 =இல் அதிகபட்சம் 18 முறை பெனால்டி கிக் தரப்பட்டது. ஆனால் அந்த சாதனை தற்போது தகர்க்கப்பட்டது. வார் தொழில்நுட்பத்துக்கு பின் 28 பெனால்டி வாய்ப்பு தரப்பட்டது. 
வார் எனப்படும் வீடியோ உதவி நடுவர் முறை பல்வேறு ஆட்டங்களின் முடிவுகளையே மாற்றி விட்டது.
பிரேஸில்-கோஸ்டா ரிகா ஆட்டத்தில் வார் தொழில்நுட்பத்தின்படி சரிபார்கக்ப்பட்டு பெனால்டி தரப்பட்டது.
48 முதல் தகுதி ஆட்டங்களில் 335 சம்பங்கவள் வார் தொழில்நுட்பத்தின் மூலம் சரிபார்க்கப்பட்டன. இதன் மூலம் சரிபார்ககப்பட்டன என் குறிப்பிடதக்கது.
அனைத்து வகைகளிலும் முந்தைய உலகக் கோப்பை போட்டிகளில் ரஷியாவில் நடந்த போட்டியே சிறந்ததாக கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com