அஸ்வின், ஜடேஜாவுக்குப் பதிலாக குல்தீப் யாதவை அணியில் சேர்க்க நூறு முறையாவது யோசிக்க வேண்டும்: சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

அஸ்வின், ஜடேஜாவுக்குப் பதிலாக குல்தீப் யாதவை அணியில் சேர்க்க நான் நூறுமுறையாவது யோசிப்பேன்... 
அஸ்வின், ஜடேஜாவுக்குப் பதிலாக குல்தீப் யாதவை அணியில் சேர்க்க நூறு முறையாவது யோசிக்க வேண்டும்: சஞ்சய் மஞ்ச்ரேக்கர்


விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டி 20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. டி 20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் போட்டித் தொடரை இங்கிலாந்தும் வென்றன. இந்நிலையில் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி பர்மிங்ஹாமில் தொடங்குகிறது.

இந்நிலையில் ஒருநாள், டி20 ஆட்டங்களில் சிறப்பாகப் பந்துவீசிய குல்தீப் யாதவை டெஸ்ட் அணியில் சேர்க்கவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் குறித்து முன்னாள் வீரரும் கிரிக்கெட் நிபுணருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், கிரிக்கெட் இணையத்தளம் ஒன்றில் எழுதியதாவது:

இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்களில் குல்தீப் யாதவ் முதன்மைத் தேர்வாக இருக்கும்பட்சத்தில் அது அஸ்வின், ஜடேஜாவுக்கு நியாயம் செய்வதாக இருக்காது. இருவரும் அணியில் நிரந்தர இடம் பிடிக்கக் கடுமையாக உழைத்துள்ளார்கள்.

குல்தீப் அபாரமான திறமையாளர். ஆனால் அஸ்வின், ஜடேஜாவுக்குப் பதிலாக குல்தீப் யாதவை அணியில் சேர்க்க நான் நூறுமுறையாவது யோசிப்பேன். மேலும் மெதுவான ஆடுகளத்தில் குல்தீப் யாதவால் தாக்கத்தை ஏற்படுத்தமுடியாது. அஸ்வினிடம் இந்தப் பிரச்னை உண்டு. இதுபோன்ற தருணங்களில் ஜடேஜா அற்புதமாகப் பந்துவீசுவார். 

இந்திய அணி இரு சுழற்பந்துவீச்சாளர்களைக் கொண்டு ஆடுவதாக இருந்தால் குல்தீப் யாதவ், இரண்டாவது வீரராகவே இருக்கவேண்டும். அதேநேரம் ஒரே ஒரு சுழற்பந்துவீச்சாளர் என்று சொல்லி குல்தீப்பைத் தேர்வு செய்தால் அது அவருக்குக் கூடுதல் அழுத்தத்தைத் தரும். இருவர் என்றால் என் தேர்வு ஜடேஜா - குல்தீப். இது அஸ்வின் - குல்தீப் இணையை விடவும் சிறப்பாக அமையும் என்று ஆலோசனை தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com