தெ.ஆ. ரசிகர்கள் மகிழ்ச்சி: மூன்றாவது டெஸ்டில் விளையாட ரபாடாவுக்கு அனுமதி!

மூன்றாவது டெஸ்டில் விளையாட தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது...
தெ.ஆ. ரசிகர்கள் மகிழ்ச்சி: மூன்றாவது டெஸ்டில் விளையாட ரபாடாவுக்கு அனுமதி!

மூன்றாவது டெஸ்டில் விளையாட தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 4 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு இன்னிங்ஸ்களிலுமாக 11 விக்கெட்டுகளை சாய்த்த தென் ஆப்பிரிக்காவின் ககிசோ ரபாடா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்த ரபாடா, உற்சாக வெறியில் ஸ்மித்தின் தோளில் மோதினார். இதையடுத்து ஆட்ட நடுவர்கள் தர்மசேனா மற்றும் கஃபானே ஆகியோர் ரபாடா மீது ஐசிசி போட்டி நடுவரிடம் புகார் அளித்தார்கள். இதையடுத்து ரபாடாவுக்கு 3 அபராதப் புள்ளிகள் வழங்கப்பட்டன. 24 மாதங்களில் அவர் 8 அபராதப் புள்ளிகள் பெற்றதால் இரு டெஸ்டுகளில் விளையாடவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான மீதமுள்ள இரு டெஸ்டுகளில் விளையாடும் வாய்ப்பை அவர் இழந்தார்.

இந்நிலையில் தன் மீதான தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் ரபாடா. ஐசிசி நடத்தை விதிமுறைகள் தொடர்பான மேல்முறையீட்டு ஆணையர் மைக்கேல் ஹெரான் இரு தரப்பினரையும் விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். இதன் அடிப்படையில் ரபாடா மீதான தண்டனை லெவர் 2-லிருந்து லெவல் 1-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு ஆட்டத்தின் ஊதியத்திலிருந்து 25 சதவீதம் அபராதத்தை விதித்தது ஐசிசி. அத்துடன், 1 அபராதப் புள்ளி விதிக்கப்பட்டுள்ளது. 

தற்போது ஒட்டுமொத்தமாக 6 அபராதப் புள்ளிகளை மட்டும் கொண்டிருப்பதால் 2 டெஸ்டுகளில் விளையாட விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. இதனால் நியூலேண்ட்ஸில் நடைபெறவுள்ள 3-வது டெஸ்டில் ரபாடா பங்கேற்பதில் சிக்கல் எதுவுமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com