இரு பந்துவீச்சாளர்களின் ஆக்ரோஷத்தில் 58 ரன்களுக்குச் சுருண்ட இங்கிலாந்து அணி!

நியூஸிலாந்தின் போல்ட், செளதி ஆகிய இருவர் மட்டுமே பந்துவீசி அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்... 
இரு பந்துவீச்சாளர்களின் ஆக்ரோஷத்தில் 58 ரன்களுக்குச் சுருண்ட இங்கிலாந்து அணி!

நியூஸிலாந்து-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆக்லாந்தில் இன்று தொடங்கியுள்ளது. 

டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அது மிகச்சரியான முடிவாகவும் அமைந்தது.

குக் 5 ரன்களில் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதிலிருந்து சரிவு தொடங்கியது. கேப்டன் ரூட் ரன் எதுவும் எடுக்காமல் போல்ட் பந்துவீச்சில் போல்ட் ஆனார். தொடக்க வீரர் ஸ்டோன்மேன், 9-வது வீரராகக் களமிறங்கிய ஓவர்டன் ஆகிய இருவர் மட்டுமே 10 ரன்களைத் தாண்டினார்கள். இதர வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆகி வெளியேறி இங்கிலாந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்கள். இதனால் இங்கிலாந்து அணி 20.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 58 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐந்து இங்கிலாந்து வீரர்கள் டக் அவுட் ஆனார்கள். 9 விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் என்கிற மோசமான நிலையில் கடைசி விக்கெட்டுக்கு கிரேக் ஓவர்டனும் ஜேம்ஸ் ஆண்டர்சனும் 31 ரன்கள் சேர்த்து ஓரளவு ஆறுதல் அளித்தார்கள். ஓவர்டன் அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து இன்னிங்ஸில் நியூஸிலாந்தின் போல்ட், செளதி ஆகிய இருவர் மட்டுமே பந்துவீசி அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். போல்ட் 6 விக்கெட்டுகளையும் செளதி 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்கள். இங்கிலாந்து எடுத்த 58 ரன்கள், அதன் டெஸ்ட் வரலாற்றில் எடுத்த 6-வது குறைந்தபட்ச ஸ்கோராகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com