பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் தகுதி பெறுவது யார்? 2 இடங்கள்; 5 அணிகள்

ஐபிஎல் கிரிக்கெட் பிளே ஆஃப் சுற்று ஆட்டங்களுக்கு தகுதி பெற ராஜஸ்தான், கொல்கத்தா, மும்பை, பெங்களூரு அணிகள் தீவிரமாக போராடி வருகின்றன.
பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் தகுதி பெறுவது யார்? 2 இடங்கள்; 5 அணிகள்

ஐபிஎல் கிரிக்கெட் பிளே ஆஃப் சுற்று ஆட்டங்களுக்கு தகுதி பெற ராஜஸ்தான், கொல்கத்தா, மும்பை, பெங்களூரு அணிகள் தீவிரமாக போராடி வருகின்றன.
தற்போதைய நிலவரத்தின் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஹைதராபாத், இரண்டாம் இடத்தில் உள்ள சென்னை அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. மேலும் 2 அணிகள் மட்டுமே அடுத்து தகுதி பெற முடியும் என்ற நிலையில் 14 புள்ளிகளுடன் கொல்கத்தா 3-வது இடத்திலும், 12 புள்ளிகளுடன் மும்பை 4-வது இடத்திலும், பெங்களூரு 5-வது இடத்திலும், 
ராஜஸ்தான் 6-வது இடத்திலும் உள்ளன.
துவக்கத்தில் சிறப்பாக ஆடி வந்த பஞ்சாப் அணி மூன்றாம் இடத்தில் நீடித்து வந்த நிலையில் தொடர் தோல்விகளால் தற்போது 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 
அந்த அணியும் 12 புள்ளிகள் பெற்றிருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் 7-வது இடத்தில் உள்ளது. தில்லி 8-வது இடத்தில் உள்ளது.

கொல்கத்தா -ஹைதராபாத்
இந்நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் 2 இடங்களுக்கான போட்டியில் பெங்களூரு, ராஜஸ்தான், மும்பை, கொல்கத்தா போன்றவை உள்ளன. சனிக்கிழமை 
நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் ஹைதராபாத் அணியுடன் கொல்கத்தா மோதுகிறது. ஹைதராபாத் அணி எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல் கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. ஆனால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்ற அழுத்தத்துடன் கொல்கத்தா உள்ளது. 
பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. 
கொல்கத்தா அணி இந்த ஆட்டத்தில் வென்றால் 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும். 

பெங்களூரு-ராஜஸ்தான்


அதே வேளையில் சனிக்கிழமை ஜெய்ப்பூரில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு அணி-ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. தொடர் தோல்விகளால் துவண்டிருந்த பெங்களூரு அணி மீண்டும் தொடர் வெற்றிகளை பெற்று 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. 4-வது இடத்தில் இருந்த ராஜஸ்தான் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டது.


வாழ்வா-சாவா ஆட்டம்
இந்த ஆட்டம் இரு அணிகளுக்குமே வாழ்வா-சாவா ஆட்டமாக உள்ளது. ராஜஸ்தான் அணியின் முக்கிய வீரர்களான ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தங்கள் நாட்டு அணிக்கு விளையாடுவதற்காக திரும்பி விட்டனர். 
இது அந்த அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தி உள்ளது.
ஹைதராபாத் அணியை வென்ற ஊக்கத்தில் உள்ள பெங்களூரு, முழு வீச்சில் ராஜஸ்தானை வீழ்த்த போராடும். ராஜஸ்தான் அணி சொந்த மைதானத்தில் ஆடுகிறது என்பதே அதற்கு சாதகமான அம்சமாக உள்ளது. இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை உறுதி செய்து கொள்ளும் நிலை உள்ளது.

தலையெழுத்தை தீர்மானிக்கும் ஆட்டங்கள்
மேலும் 4-வது இடத்தில் உள்ள மும்பை அணி ஞாயிற்றுக்கிழமை தில்லி அணியையும், 7-வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணி, சென்னையையும் எதிர்கொள்கின்றன. இவற்றில் பெறும் வெற்றிகளே 
அவற்றின் பிளே ஆஃப் சுற்று தலையெழுத்தை தீர்மானிக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com