ஸ்டீவ் ஸ்மித் அதிரடி வருகை: 85 ரன்கள் விளாசினார்

சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஆஸி. அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தனது கிளப் அணி சார்பில் பங்கேற்ற ஆட்டத்தில் 85 ரன்களை விளாசி தனது திறமையை பறை சாற்றியுள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித் அதிரடி வருகை: 85 ரன்கள் விளாசினார்

சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஆஸி. அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தனது கிளப் அணி சார்பில் பங்கேற்ற ஆட்டத்தில் 85 ரன்களை விளாசி தனது திறமையை பறை சாற்றியுள்ளார்.
 கடந்த பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது, பந்தை சேதப்படுத்த முயன்றதாக எழுந்த புகாரின் பேரில் கேப்டன் ஸ்மித், டேவிட் வார்னர், வீரர் பேங்க்கிராப்ட் ஆகியோரை கிரிக்கெட் ஆஸ்திரேலியா சஸ்பெண்ட் செய்தது.
 ஸ்மித், வார்னருக்கு தலா ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.சர்வதேச கிரிக்கெட் போட்டி தவிர உள்ளூர் ஆட்டங்களில் பங்கேற்று ஆடலாம் என சிஏ அறிவித்தது. கனடா கிரிக்கெட் லீக் போட்டியில் ஆடி வந்த ஸ்மித் ஆஸ்திரேலியாவில் தனது கிளப் அணியான சதர்லேண்டுக்காக வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 92 பந்துகளில் 85 ரன்களை குவித்தார்.
 இதன் மூலம் தான் தனது ஆட்டத்திறனை நிரூபித்துள்ளார் ஸ்மித்.வரும் மார்ச் மாதம் 28-ஆம் தேதியோடு அவர்கள் மீதான தடை நீங்குவதால், உலகக் கோப்பையில் போட்டியில் ஆட இருவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com