சமையல் டிப்ஸ்...

ஈரம் பட்டு நமத்துப் போன அப்பளத்தை உளுத்தம்பருப்பின் மேல் வைத்து மூடிவிட்டால் அப்பளம் வெயிலில் உலர்த்தி எடுத்தது போலாகி விடும்.

* ஈரம் பட்டு நமத்துப் போன அப்பளத்தை உளுத்தம்பருப்பின் மேல் வைத்து மூடிவிட்டால் அப்பளம் வெயிலில் உலர்த்தி எடுத்தது போலாகி விடும்.

* கறுப்பு உளுந்தில் தோசை மாவைப் புளிக்க வைக்கும் பாக்டீரியா அதிகமாகவும், தோல் நீக்கிய வெள்ளை  உளுந்தில் குறைவாகவும் உள்ளது. இதனால் மாவு புளிப்பதில் வேறுபாடு ஏற்படுகிறது.  எனவே தோலோடு கூடிய உளுந்தையே ஊற வைத்து தோல் நீக்கிப் பயன்படுத்தினால் பூ மாதிரி இட்லி கிடைக்கும்.  சுவையும் அதிகம்.
- நெ.இராமன்

* துருவிய முந்திரி, பொடியாக நறுக்கிய பிரட்டை நெய்யில் வறுத்து சூப்பின் மேல் தூவித் தந்தால் வெஜிடபிள்  சூப்பைச் சாப்பிட வெறுக்கும் குழந்தைகள் கூட விரும்பிச் சாப்பிடுவார்கள்.

* கிழங்கு வகைகளைப் பத்து நிமிஷம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து, பிறகு வேக வைத்தால் எளிதில் வெந்துவிடும். ருசியாகவும் இருக்கும்.

* காய்கறிப் பொரியல் மீதமாகி விட்டால்  சப்பாத்தி, அல்லது தோசையில் வைத்து உருட்டி ஸ்டஃப்டு சப்பாத்தி, தோசை செய்யலாம். அல்லது பொரியல் தேங்காய்த் துருவல் சேர்த்து பூரணமாகப் பிடித்தால் காரக் கொழுக்கட்டை தயார். 
- அமுதா அசோக்ராஜா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com