சுகாதார சீர்கேட்டால் சீரழியும் சுதாம நகர்!

பெங்களூர், டிச. 14:   பெங்களூர் நகரிலேயே மிக மோசமான நிலையில் சுகாதார வசதி இன்றி உள்ளது சுதாமநகர் வார்டு. நகரின் மையப்பகுதியில் பரபரப்பான டவுன்ஹால் பின்புறம் அமைந்துள்ளது சுதாமகநர் வார்டு. மிகவும் பின்
Updated on
1 min read

பெங்களூர், டிச. 14:   பெங்களூர் நகரிலேயே மிக மோசமான நிலையில் சுகாதார வசதி இன்றி உள்ளது சுதாமநகர் வார்டு.

நகரின் மையப்பகுதியில் பரபரப்பான டவுன்ஹால் பின்புறம் அமைந்துள்ளது சுதாமகநர் வார்டு.

மிகவும் பின் தங்கிய பகுதியாக காட்சியளிக்கிறது. குறுகிய சாலைகள், குடிசைகள், திறந்தவெளி கழிவுநீர்க் கால்வாய்கள், அசுத்தமான சூழல், சேரும் சகதியும் அடைந்துள்ள நடைபாதை இவைதான் சுதாமநகரின் அடையாளங்கள்.

இதுதவிர, குடிநீர் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்படுவதாக அங்குள்ள பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.

32,202 வாக்காளர்கள் கொண்ட சுதாம்நகர் வார்டில் 60 சதவீதம் பேர் தமிழர்கள். 15 குடிசைப்பகுதிகள் இருக்கின்றன.

மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வுகாண முடியாமல் தவிப்பதாக இந்த வார்டின் பெண் கவுன்சிலர் அவ்வை தெரிவித்தார்.  

இதுபற்றி மேலும் அவர் கூறுகையில், எனது வார்டில் பெரும்பாலான மக்கள் குடிசைகளில் வாழ்ந்து வருகிறார்கள். வீட்டுவசதி, குடிநீர், சுகாதாரம், பாதாள சாக்கடை, சாலை, தெருவிளக்கு போன்ற எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் பொதுமக்கள் கடந்த பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு தீர்வுகாண மேயர் நடராஜிடம் முறையிட்டபோது, அதை அவர் பொருட்படுத்தவில்லை.

தொடர்ந்து சுதாமநகர் புறக்கணிக்கப்படுகிறது. மாநகராட்சிப் பள்ளிகள், மருத்துவமனைகள் படுமோசமான நிலையில் இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியில் இருப்பதால், பாஜகவைச் சேர்ந்த மேயர் இந்த வார்டு வளர்ச்சிக்கு நிதி ஒதுக்காமல்

அலட்சியப்படுத்துகிறார். தொகுதி எம்எல்ஏவும் பாஜகவை சேர்ந்தவர்.

இதனால் கவுன்சிலராக என்னால் முறையாக பணியாற்ற முடியவில்லை.

குடிநீர் பற்றாக்குறை தான் தலையாய பிரச்னையாக உள்ளது. இதனை தீர்க்க சுமார் ரூ. 10 கோடி செலவாகும். ஆனால், ஒட்டுமொத்தமாக வார்டு வளர்ச்சிக்கு ரூ. 2 கோடியை மட்டுமே மாநகராட்சி ஒதுக்கியுள்ளது.

இதில் என்ன செய்ய முடியும். குடிநீர் குழாய் அமைக்க ரூ. 1.10 கோடியில் திட்டம் அளித்திருக்கிறோம். இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை.

குடிசைமக்கள் பணம் செலுத்துவதில்லை என்று குடிநீர் வாரியம் தண்ணீர் வழங்குவதில்லை.

இவ்வளவு இடையூறுகள் இருந்தபோதும் ஜனவரியில் சொந்தமாக டேங்கர்லாரி வாங்கி, குடிநீர் சப்ளை செய்யவிருக்கிறேன்.

 வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு சுகாதார காப்பீடு போன்ற நலத்திட்டங்களை செய்யவுள்ளதாக கூறினார் இந்த தமிழ்ப்பெண் கவுன்சிலர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com